நடப்பு நிகழ்வுகள் – 24 ஜனவரி 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 24 ஜனவரி 2023
நடப்பு நிகழ்வுகள் – 24 ஜனவரி 2023

நடப்பு நிகழ்வுகள் – 24 ஜனவரி 2023

தேசிய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையம் இரண்டாவது சர்வதேச மாநாட்டை நடத்தவுள்ளது

 • இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2வது சர்வதேச மாநாட்டை புது தில்லியில் ஜனவரி 23-24, 2023 அன்று நடத்தவுள்ளது. இம்மாநாடு – தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
 • அங்கோலா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, குரோஷியா, இந்தோனேஷியா, மொரிஷியஸ், நேபாளம், பிலிப்பைன்ஸ் மற்றும் சுரினாம் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 43 பேர் 2வது சர்வதேச மாநாட்டில் இணைந்துள்ளனர், மேலும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைக்கிறார்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத  21 தீவுகளுக்கு பெயர்சூட்டும் விழா

 • நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக (பராக்ரம் திவாஸ்) கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • இந்நிலையில் ஜனவரி 23-ம் தேதி நடைபெறும் பராக்ரம் திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடிசூட்டுகிறார்.
  • 2018 ஜனவரி வரை 21 பேர் பரம் வீர் சக்ரா விருதினை பெற்றுள்ளனர். 20 பேர் இந்திய ராணுவத்தில் இருந்தும், ஒருவர் இந்திய விமானப்படையில் இருந்தும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
  • மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட உள்ளன.

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்  (ITDC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

 • ஆயுஷ் அமைச்சகம், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ITDC), இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருத்துவ மதிப்பு பயணத்தை மேம்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்றுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
 • புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஆயுஷ் அமைச்சகம் ITDC யின் அதிகாரிகளுக்கு ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருத்துவ மதிப்பு பயணம் குறித்து அவர்களுக்கு பயிற்சியை வழங்கவுள்ளது.

 

சர்வதேச செய்திகள்

உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியல் வெளியீடு

 • ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேதி மற்றும் சுய இறையாண்மை அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேதி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலை உலக மக்கள் தொகை ஆய்வு(WPR) வெளியிட்டுள்ளது.
ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் பட்டியல் சுய இறையாண்மை அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடுகளின் பட்டியல்
1.ஈரான்    – 3200 கி.மு 1. ஜப்பான் – கிமு 660
2.எகிப்து  – 3100 கி.மு 2. சீனா – கிமு 221
3.வியட்நாம் – 2879 கி.மு 3. சான் மரினோ – கிபி 301
4.ஆர்மீனியா –  2492 கி.மு 4. பிரான்ஸ் – கிபி 843
5.வட கொரியா  – 2333 கி.மு 5. ஆஸ்திரியா – கிபி 976
6.சீனா –  2070 கி.மு  6. டென்மார்க் – கிபி 1000
7.இந்தியா -2000 கி.மு 7. ஹங்கேரி – கிபி 1001
8.ஜார்ஜியா -1300 கி.மு 8. போர்ச்சுகல் – கிபி 1143
9.இஸ்ரேல் – 1300 கி.மு 9. மங்கோலியா – கிபி 1206
10.சூடான் – 1070 கி.மு 10. தாய்லாந்து – கிபி 1238

 

 

மாநில செய்திகள்

தமிழகத்தின் முதல் ஆமை பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் சென்னையில் அமைக்கப்படவுள்ளது

 • தமிழ்நாடு 1,000 கி.மீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரையை கொண்டது. இதில் 5 வகையான கடல் ஆமை இனங்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. ஆலிவ் ரிட்லி என்ற இன ஆமைகள் அதிக அளவில் தமிழக கரையில் முட்டையிடுகின்றன.
 • மேலும் இவற்றை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சுமார் ரூ.6 கோடியே 30 லட்சத்தில் சென்னை கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படவுள்ளது.

இன மாமணி விழா லடாக்கில் நடைபெற்றது

 • 2023 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் உள்ள ஸ்டெயாங்குங், பர்சூ என்ற வரலாற்று கிராமத்தில் இன மாமணி திருவிழா அனுசரிக்கப்பட்டது, ஹிமாலயன் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (HCHF) மற்றும் லடாக்கில் உள்ள லடாக் சுற்றுலாத் துறை ஆகியவற்றால் வரலாற்று ஸ்டியாங்குங் கிராமம் மற்றும் சிக்டன் ஷாகரனில் ஏற்பாடு செய்யப்பட்டது.
 • லடாக்கில் மாமணி திருவிழா கொண்டாடப்பட்டதன் வரலாறு, பிரிந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு வழங்கும் பண்டைய பாரம்பரியத்தை நினைவு கூறுகிறது.

கிருஷிமஹோத்சவ்: பிரதர்ஷனி ஏவம் பிரஷிக்ஷன்என்ற நிகழ்ச்சி கோட்டா, ராஜஸ்தானில் நடத்தப்படவுள்ளது

 • இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, ராஜஸ்தான் அரசுடன் இணைந்து, ‘கிருஷி-மஹோத்சவ்: பிரதர்ஷனி ஏவம் பிரஷிக்ஷன்’ என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை 2023 ஜனவரி 24-25 தேதிகளில் கோட்டா, ராஜஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
 • விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றவும், நவீன புதுமையான விவசாய முறைகளை பின்பற்றவும் ஆர்வமுள்ள விவசாயிகள் அதிகளவில் பங்கேற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

மும்பையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா

 • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழா ஜனவரி 27 முதல் 31, 2023 வரை, மும்பையில், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தபடுகிறது.
 • இந்நிகழ்வானது சினிமா கூட்டாண்மைகளை உருவாக்குவதையும், SCO இல் உள்ள பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களுக்கு இடையே பாலமாக செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நியமனங்கள்

கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகள்  நியமிக்கப்பட்டுள்ளனா்.

 • கா்நாடக உயா் நீதிமன்றத்துக்கு ராமச்சந்திர தத்தாத்ரேய ஹட்டா் மற்றும் வெங்டகேஷ் நாயக் தவரய்யநாயக் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
 • சட்ட அமைச்சகம் ஜனவரி 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் படி, கா்நாடக உயா் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 62 நீதிபதி பணியிடங்களில் 13 இடங்கள் காலியாக இருந்தன. தற்போது நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் நீதிபதிகள் 2 ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுவா். அதன் பிறகு, அவா்களுக்கு நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCGA வின் புதிய தலைமை இயக்குனர் நியமனம் 

 • அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அடுத்த இயக்குநர் ஜெனரலாக விக்ரம் தேவ் தத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இவர் தற்போதைய டிஜிசிஏ தலைவர் அருண் குமாருக்குப் பிறகு பதவியேற்க்கவுள்ளார். முன்னதாக, தத் ஏர் இந்தியாவின் சிஎம்டியாகவும் பணியாற்றினார். தத் AGMUT (அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம்) 1993- பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

 

விருதுகள்

பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா்விருது 2023

 • தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை, கலாசாரம், வீர தீர செயல், புதுமை, சமூக சேவை, கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5 -18 வயதுக்குட்பட்ட இந்திய சிறுவர்களுக்கு ‘பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா்’ விருது வழங்கப்படுகிறது.
 • இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), வீர தீர செயல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆறு சிறுவர்களும், ஐந்து சிறுமிகளுக்கும் ‘பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா்’ வழங்கப்படுகிறது.
  • பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா வாழ்நாள் சாதனையாளர் விருது

 • மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்துஸ்தானி பாடகர் பத்ம விபூஷன் டாக்டர் பிரபா அத்ரேக்கு பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா வாழ்நாள் சாதனையாளர் விருதை  22 ஜனவரி 2023 அன்று வழங்கினார்.
 • நிகழ்ச்சியில் திரு. ஷிண்டே டாக்டர் அட்ரேவுக்கு ஒரு சான்றிதழும் ₹1 லட்சமும் வழங்கினார், மேலும் அவரது 90வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 90 ஃப்ளாட்டிஸ்டுகளின் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்-2023

 • பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பையும் தன்னலமற்ற சேவையையும் அங்கீகரித்து கவுரவிப்பதற்காக சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.
 • 2023 ஆம் ஆண்டிற்கான, ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (OSDMA) மற்றும் மிசோரம் லுங்கிலி தீயணைப்பு நிலையம் (LFS) ஆகிய இரண்டும் நிறுவனப் பிரிவில், பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்-2023க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. .
  • இந்த விருது ஒரு நிறுவனமாக என்றால் ரூ. 51 லட்சம் மற்றும்  மற்றும்  தனி நபராக இருந்தால் சான்றிதழ் ரூ. 5 லட்சம் மற்றும் வழங்கப்படுகிறது.

 

புத்தக வெளியீடு

டாக்டர் அஷ்வின் பெர்னாண்டஸ் எழுதியஇந்தியாவின் அறிவு மேலாதிக்கம்: புதிய விடியல்புத்தகம்

 • “இந்தியாவின் அறிவு மேலாதிக்கம்: புதிய விடியல்” சர்வதேச இந்திய வெளிநாட்டவர் டாக்டர் அஷ்வின் பெர்னாண்டஸால் எழுதப்பட்டது மற்றும் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த நிகழ்வில் இந்தியாவின் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் அவர்களால் வெளியிடப்பட்டது.
 • வெளியிடப்பட்ட இந்தப் புதிய புத்தகம் இந்தியாவின் அறிவு மேலாதிக்கம், புதிதாக வளர்ந்து வரும் இந்தியாவில் மாறிவரும் போக்குகளைக் காண்பிக்கும் பயணம், மேலும் இந்த புத்தகம் பண்டைய காலங்களிலிருந்து இந்தியா எதிர்கொண்டுள்ள உயர்கல்வியின் மாற்றங்களை ஆழமாக எடுத்துரைக்கிறது.

 

விளையாட்டு செய்திகள்

இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

 • யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2023 என்பது இந்தியாவின் புது டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் இன்டோர் ஹாலில் ஜனவரி 17 முதல் 22 ஜனவரி 2023 வரை நடைபெற்ற பூப்பந்துப் போட்டியாகும்.
 • இதில் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில், ஜப்பான் வீராங்கனை அஹானே யமகுச்சி, தென் கொரியா வீராங்கனை அன் சியாங் இடையே நடைபெற்றது, இப்போட்டியில் அன் சியாங் வெற்றி பெற்று இந்திய ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார். இதையடுத்து இந்திய ஓபன் பட்டத்தை வென்ற முதல் கொரிய வீரரானார் அன் சியாங்.
 • இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென், தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார் இடையே நடைபெற்றது, இப்போட்டியில் குன்லவுட் விடிசார் வெற்றி பெற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

முக்கிய தினம்

சர்வதேச கல்வி தினம்

 • சர்வதேச கல்வி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், ‘to invest in people, prioritize education’ என்ற கருப்பொருளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது.
 • யுனெஸ்கோ இந்த ஆண்டை ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமை பறிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறது. அவர்களின் கல்விக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்பதை முன் நிறுத்தி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!