நடப்பு நிகழ்வுகள் – 23 அக்டோபர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் - 23 அக்டோபர் 2022
நடப்பு நிகழ்வுகள் - 23 அக்டோபர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 23 அக்டோபர் 2022

தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு வலுசேர்க்க 3 நீர்மூழ்கி கப்பல்கள் 2024-ம் ஆண்டு இணைப்பு

  • இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்கள் படைப்பிரிவில் அடுத்தாண்டு ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலும், இரண்டு டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களும் இணைக்கப்படவுள்ளன,மேலும் ஸ்கார்பீன் ரகத்தை சேர்ந்த 4 நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கடற்படையில் உள்ளன.
  • இவற்றில் 5-வது கப்பல் ஐஎன்எஸ் வகிர் ,6-வது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் வக்ஸீர் என பெயரிடப்பட்டு 2024ம் ஆண்டில் இணைக்கப்படவுள்ளது.

 

சர்வதேச செய்திகள்

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு தடை விதிப்பு

  • கனடாவில் அதிகரித்து வரும் வன்முறைகளை குறைப்பதற்காக கை துப்பாக்கி விற்பனை,கொள்முதல் மற்றும் பரிவர்த்தனைக்கு தடை செய்துள்ளது
  • மேலும் இத்தடை சட்டம் அக்டோபர் 21,2022 முதல் அமலுக்கு வந்தது, இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டார்.

இலங்கை அரசியல் அமைப்பில் 22வது சட்டத் திருத்தம் நிறைவேறியது:

  • ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு அதன் அரசியலமைப்பில் 22வது சட்டத் திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும் இலங்கை நாடாளுமன்றம் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது.

 

மாநில செய்திகள்

மும்பையின் சிறப்புத் திறனாளிகளுக்கான முதல் விளையாட்டு இடம்  ஜோகர்ஸ் பூங்காவில் திறக்கப்படுகிறது

  • சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுத் தளம், நகரத்திலேயே முதல் முறையாக, பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ள பிரபலமான கடல் நோக்கிய ஜாகர்ஸ் பூங்காவில் திறக்கப்படுகிறது.
  • மும்பை முழுவதிலும் இருந்து குடிமக்களை ஈர்க்கும் பூங்காவில் சுமார் 9,000-சதுர அடி இடம்-சிறப்புத் திறனாளிகளுக்கு சவாரி மற்றும் பிற விளையாட்டு உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களுக்கான ஊஞ்சல், கையை நகர்த்துபவர்கள், விளையாட்டு பலகைகள் போன்றவை இதில் அடங்கும்.

 

நியமனங்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்

  • பிரதமர் மோடி, 2019 ஜனவரி 27 ஆம் தேதி மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச்சில் செய்யப்பட்டது.
  • இந்நிலையில் மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தாலியின்  பிரதமராக பதவியேற்றார் ஜார்ஜியா மெலோனி

  • இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார்.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.
  • முன்னதாக, இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

பூமியை விட்டு விலகும் நிலா

  • பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும்8 செ.மீட்டர் விலகிச்செல்வதாகவும், இதனால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • நிலா தோன்றிய போது 14 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரம் விலகிச்சென்றுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி.எம்.-3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

  • இஸ்ரோ’வின் ஜி.எஸ்.எல்.வி., மாக் – 3 வகையை சேர்ந்த எல்.வி.எம்.3 – எம்2 ராக்கெட், இங்கிலாந்தை சேர்ந்த ‘ஒன்வெப்’ நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களுடன் அக்.,22,2022 அன்று நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு, செயற்கைக் கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி.,-ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவுகிறது.

விண்வெளி நிலையத்தில் நிமோனியா நுண்ணுயிரிகள் கண்டுபிடிப்பு

  • சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அமெரிக்காவின், ‘நாசா ஜெட் புரொபல்ஷன்’ ஆய்வகம் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுண்ணுயிரிகளுக்கு இடையிலான தொடர்புகள் பற்றி ஆய்வு செய்துள்ளன,இதில் கிளெப்சியல்லா நிமோனியா நுண்ணுயிரி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
  • ஆய்வில் கண்டறியப்பட்ட நுண்ணுயிரிகளால், விண்வெளி வீரர்களுக்கு, எந்த அச்சுறுத்தலும் இல்லை,இருப்பினும் விண்வெளியில் உள்ள நுண்ணுயிரிகள் நுண் ஈர்ப்பு விசையில் எவ்வாறு தங்களை மாற்றி கொள்கின்றன என்பதை அறிய, இந்த ஆய்வு உதவியாக இருந்தது.

 

புத்தக வெளியீடு

ஓய்வுபெற்ற நீதிபதி .கே.ராஜன் எழுதிய ஆங்கில நூல் வெளியீடு

  • சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதியுள்ள ‘இந்தியஅரசமைப்பு: அரசமைப்புசட்டம் மட்டுமே அல்ல’(Constitution of India: Is Not What it is) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகம் பிளாட்டினம் ஜூப்ளிகலையரங்கில் அக்.22,2022 அன்று நடைபெற்றது .
  • புத்தகத்தின் முதல் பிரதியை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் கர்நாடக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞரான ரவிவர்மா குமார் பெற்றுக்கொண்டார்.

 

விருதுகள்

வட கரோலினாவில் இந்தியஅமெரிக்க ஆர்வலர் சுதேஷ் சாட்டர்ஜிக்கு மாநிலத்தின் உயரிய விருது வழங்கப்பட்டது

  • புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் ஆர்வலருமான சுதேஷ் சாட்டர்ஜி, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தால் மிக உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார்.
  • சாட்டர்ஜி கடந்த முப்பது ஆண்டுகளாக அமெரிக்க-இந்தியா உறவை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

 

விளையாட்டு செய்திகள்

ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 2022

  • இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில்,இந்தியாவின் மத்வேந்திர பிரதாப் ஷர்மா தனிநபர் மற்றும் குழு இரண்டையும் இணைத்து மொத்தம் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றார், கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆகிய மூன்று வடிவங்களில் தலா ஒரு பதக்கமும் வென்றுள்ளார்.
  • சார்வி ஐந்து தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, பாக்யஸ்ரீ மூன்று தங்கம் மற்றும் ஈதன் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றனர்.
  • ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் 2022ல் இந்தியா 46 பதக்கங்களை வென்றது.

 

முக்கிய தினம்

மோல் தினம்

  • மோல் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 23 அன்று காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை கொண்டாடப்படுகிறது. இது வேதியியலில் அடிப்படை அளவீட்டு அலகான அவகாட்ரோவின் எண்ணை (6.02 x 10²³)நினைவுகூருகிறது.
  • மோல் தினம் வேதியியலில் ஆர்வத்தை வளர்ப்பதற்கான ஒரு வழியாக உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பள்ளிகள் வேதியியல் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுடன் மோல் தினத்தை கொண்டாடுகின்றன.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!