Current Affairs – 22th September 2022

0
Current Affairs – 22th September 2022
Current Affairs – 22th September 2022
Current Affairs – 22th September 2022

தேசிய செய்திகள்

மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

• கடந்த 2018 – 19ம் ஆண்டிற்கான மத்திய சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
• அந்த ஆய்வறிக்கையின் படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தக்கூடிய காப்பீட்டு திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் விளங்குவதாக தெரிவித்துள்ளது.
• முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 23.07.2009 முதல் 31.08.2022 வரை 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர்.
தமிழக அரசால் 2009ம் ஆண்டு கலைஞர் காப்பிடுத்திடம் தொடங்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் விரிவான முதலமைச்சர் காப்பீடு திட்டம் என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2018ம் ஆண்டிலிருந்து சுகாதார துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தால் ஒருங்கிணைப்பு போர்ட்டலைத் தொடங்கப்பட்டுள்ளது

• மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மற்றும் ஸ்ரீ பசுபதி குமார் பராஸ் ஆகியோர் விவசாய உள்கட்டமைப்பு நிதித் திட்டம், பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா ஆகியவற்றிற்கான ஒருங்கிணைப்பு போர்ட்டலைத் தொடங்கியுள்ளனர்.
• நாட்டின் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்த போர்டல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது .
• வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 08 ஜூலை 2020 அன்று தொடங்கப்பட்ட நடுத்தர முதல் நீண்ட கால கடன் நிதி வசதியான வேளாண் உள்கட்டமைப்பு நிதியை (AIF) செயல்படுத்தி வருகிறது.
• உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் (MoFPI) ஜூன் 29, 2020 அன்று மத்திய அரசின் PPMFME திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
o MoFPI – Ministry of Food Processing Industries
o AIF- Agriculture Infrastructure Fund
o PPMFME – Prime Minister’s Micro Food Enterprises Upgradation Scheme


சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க அமைச்சர் கிஷன் அறிவித்துள்ளார்

• வெளிநாட்டினருக்கு நாட்டின் பெருமையை பறைசாற்றும் விதமாக சுற்றுலாத் தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தேசியக் கொடியை ஏற்றிவைக்க சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
• இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரில் நடைபெற்ற மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்களின் மூன்று நாள் தேசிய மாநாட்டின் நிறைவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
• மேலும், 30 பில்லியன் டாலர்கள் அன்னியச் செலாவணி வருமானமாகப் பெறப்படும் என்றும், 2024ஆம் ஆண்டுக்குள் 15 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள் என்றும் அவர் கூறினார்.


நாட்டில் முதல் முறையாக ‘தொழில்துறை சணல் ‘ உத்தரகண்ட் மாநிலத்தில் பயிரிடப்பட்டுள்ளது!!!

• ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவிலான தொழில்துறை சணல் சாகுபடியை அனுமதித்த முதல் மாநிலமாக உத்தரகாண்ட் விளங்குகிறது. (கஞ்சா சாடிவா, இது குறைந்த போதை திறன் கொண்டது,மருத்துவ மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது).
• மேலும் “தரநிலைப்படுத்தப்பட்ட தொழில்துறை சணல்” என்ற முதல் முன்மாதிரியை உருவாக்குவதில் உத்தரகாண்ட அரசு வெற்றி பெற்றுள்ளது”.
• அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, இந்தியாவில் இதுவே முதல் முறையாக தரப்படுத்தலுக்கான தொழில்துறை சணல் வளர்க்கப்படுகிறது.
• பாம்பே ஹெம்ப் நிறுவனம் (BOHECO), இந்த திட்டத்தில் மாநில விவசாயத் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.

சர்வதேச செய்திகள்

ஐ.நா விருதை இந்தியா பெற்றுள்ளது

• தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுத்த முயற்சிக்காக இந்தியா ஐ.நா விருதை வென்றுள்ளது.
• இந்திய உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு முன்முயற்சி (IHCI) இந்தியாவின் தற்போதைய ஆரம்ப சுகாதார அமைப்புக்குள் அதன் விதிவிலக்கான பணிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
• நியூயார்க்கில் நடைபெற்ற UN பொதுச் சபையில், IHCI ஆனது 2022 UN Interagency Task Force மற்றும் WHO சிறப்புத் திட்டத்தில் முதன்மை சுகாதாரப் பாதுகாப்பு விருதை வென்றுள்ளது.
• இந்த விருது, தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், மக்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த முதன்மை சிகிச்சையை வழங்குவதற்கும் இந்தியாவின் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கையை அங்கீகரித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட விண்வெளி வீரர்கள் !!!

• அமெரிக்க விண்வெளி வீரர் பிராங்க் ரூபியா,ரஷ்யா விண்வெளி வீரர்கள் செர்ஜி மற்றும் டிமிட்ரி ஆகிய 3 பேரும் கஜகஸ்தானின் பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து சோயூஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவதற்கு முன்பு விண்வெளி ஆடைகளை அணிந்து பரிசோத்தித்து பார்த்தனர்.
• சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்போது குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள மிகப்பெரிய மட்டு விண்வெளி நிலையமாகும். இது நாசா (அமெரிக்கா), ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்யா), ஜாக்ஸா (ஜப்பான்), ஈஎஸ்ஏ (ஐரோப்பா) மற்றும் சிஎஸ்ஏ (கனடா) ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும்.
• விண்வெளி நிலையத்தின் உரிமையும் பயன்பாடும் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களால் நிறுவப்பட்டது.
• இந்த நிலையம் மைக்ரோ கிராவிட்டி மற்றும் விண்வெளி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படுகிறது.
o ISS- Indian Space Station

மாநில செய்திகள்

ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க மெட்ரோ முடிவு

• சென்னை மெட்ரோ ரயில் (CMRL) 2-ம் கட்டமாக 118.9 கிமீ நீளமுள்ள 3 வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
• ரயிலின் முழு இயக்கமும் தானாகவே இருக்கும்.
• கட்டம் 1 ஓட்டுநர்களால் இயக்கப்படும் மற்றும் அவற்றில் எந்த மாற்றமும் இல்லை தெரிவித்துள்ளனர்.
• 2025 ஆம் ஆண்டில் 2 ஆம் கட்டம் செயல்படத் தொடங்கும் என்று அதிகாரி கூறினார்.
o CMRL- Chennai Metro Rail Limited


வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் நீந்தி தேனி மாணவர் சினேகன் சாதனை!!!

• தேனியை சேர்ந்த 9 -ம் வகுப்பு மாணவன் அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
• வட அயர்லாந்து நாட்டில் வடக்கு கால்வாய் கடலில் நார்த்தன் ஐலாந்து முதல் ஸ்காட்லாந்து வரையுள்ள கடலில் 35 கி.மீ தூரத்தை பிரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
• வட அயர்லாந்து நேரப்படி 21/09/2022 அன்று காலை 6:30 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை வடக்கு கால்வாயில் நீந்தினர் .மேலும் 18 வயதிற்கு கீழ் ,35 கி.மீ நீந்திய முதல் இந்தியர் ஆவர்.


திரு அருட்பிரகாச வள்ளலாரின் சிறப்பை உணர்த்தும் வகையில் “வள்ளலார் 200 – இலச்சினை மற்றும் தபால் உறை ” வெளியீடு!!!

 சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் நடை பெறவுள்ள விழாவில் “வள்ளலார் -200” என்ற இலச்சி, மற்றும் தபால் உறையை முதலமைச்சர் வெளியிடவுள்ளார்.
 அதனை தொடர்ந்து ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் விழாவையும் தொடங்கி வைக்க உள்ளார்
 மேலும் அக்டோபர் 5-ம் தேதியை “தனிப்பெருங்கருணை நாள்” என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
 இதை அடுத்து வள்ளலாரின் 200 வது ஆண்டு விழா மற்றும் தருமசாலை தொடங்கிய 156 ஆண்டு மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 -ம் ஆண்டு ஆகியவற்றை ஒன்றாக இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது .
 வள்ளலார் முதன் முதலில் தருமசாலை நிறுவிய வருடம் 1867 –ம் ஆண்டு.


கீழடி தந்தத்தால் ஆன ஆட்டக்காய்,மற்றும் இரும்பு கத்தி கண்டெடுப்பு !!!

• சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டு பொருளான ஆட்டக்காய்,சேதமடைந்த இரும்பு கத்தி உள்ளிட்ட பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
• தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்ரவரி -12 முதல் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது .
• முன்னதாக கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு,சுடுமண் மனித தலை உருவம்,தந்தத்தால் ஆன பகடை,காதில் அணியும் அணிகலன் ,கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
• தந்தத்தால் ஆன பெரிய மணி (அணிகலன்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
• உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன. மணியின் நீளம் 5.6 செ.மீ., மொத்த விட்டம் 4 செ.மீ. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு வழுவழுப்பாகக் காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக இருந்தன.
• தற்போது தந்தத்தால் ஆன பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதல் பெண் ராணுவ வீராங்கனையான லட்சுமி சாகல் அவர்களின் நினைவாக உருவச் சிலை திறப்பு!!!

• சென்னையைச் சேர்ந்த கேப்டன் லட்சுமி(INA) இரண்டாம் உலகப் போரின்போது இந்திய தேசிய ராணுவத்தில் அனைத்து மகளிர் ‘ராணி ஜான்சி படை’ என்று பிரிவை உயர்த்தி சுதந்திரப் போராட்டத்தில் சிறந்த சேவையாற்றினார்.
• மேலும் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று பெண்களுக்கும் பயிற்சி வழங்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த மையத்தில் 2,835 பெண் ராணுவ அலுவலர்கள் பயிற்சி பெற்று ராணுவத்தில் பணிபுரிந்துள்ளனர்.
• இந்த பயிற்சி மையம் தொடங்கி நேற்றுடன் (செப் 22) 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, இந்தியாவின் முதல் பெண் ராணுவ அலுவலரான கேப்டன் லட்சுமிக்கு சிலை திறக்கப்பட்டது.
• அங்கு பயிற்சி பெறும் பெண் ராணுவ அலுவலர்கள் தங்கும் விடுதிக்கு ‘கேப்டன் லட்சுமி’ என பெயர் சூட்டப்பட்டது.
• இதற்கான கல்வெட்டை சென்னை ராணுவ பயிற்சி மையத்தின் லெப்டினண்ட் ஜெனரல் சஞ்சீவ் சௌகான் தலைமையில், கேப்டன் லட்சுமியின் பேரன் ஷாத் அலி திறந்து வைத்தார்.

 INA-Indian National Army

பொருளாதார செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சி

• சென்செக்ஸ் குறியீட்டு எண் 270 புள்ளிகள் குறைந்து 59,186 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 65 புள்ளிகள் குறைந்து 17,653 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
• இந்தநிலையில், பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.
• பெடரல் ரிசர்வ் வங்கி 75 பிபிஎஸ் வட்டியை உயர்த்தியது. இதனால் வட்டி விகிதத்தை 36 இலிருந்து 3.25% க்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 80.46 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
• 80.28 ஆக இருந்ததை விட 0.4% குறைவாக திறக்கப்பட்டது. இதற்கு முன், ஆக.,29ல் 80.12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக ரூபாய் மதிப்பு 80ஐ தாண்டி உள்ளது.


ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 2022-23க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முன் அறிவிப்பு!!!

• ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 2022-23க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை முன்பு 7.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளது.
• இந்த சரிவானது, எதிர்பார்த்ததை விட அதிக பணவீக்கம் மற்றும் பண இறுக்கம் ஆகியவையே இதன் காரணமாகும்.
• மேலும் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சியானது மார்ச் 2023 உடன் முடிவடையும் ஆண்டில் (Asian development Outlook series)ADO 2022 மதிப்பீட்டில் இருந்து 7.5 சதவீதமாகவும், 2023 ஆம் ஆண்டில் 7 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
• மேலும் மார்ச் 2024 இல் 7.2 சதவிகிதம் விலை அழுத்தம் உள்நாட்டு நுகர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
o ADB-Asian Development Bank
o GDP-Gross Domestic Product

விருதுகள்

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் CSR மற்றும் நிலைத்தன்மையில் சிறந்து விளங்கும் தேசிய விருதை வென்றுள்ளது

• நாட்டின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) மற்றும் நிலைத்தன்மைக்கான சிறந்த தேசிய விருதை வென்றுள்ளது.
• NMDC க்கு நிலையான வருமானம் மற்றும் சிறந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான விருதை அந்நிறுவனத்தின் இயக்குனர் திலீப் குமார் மொஹந்தி பெற்றுக்கொண்டார்.
• தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் என்பது அரசுக்கு சொந்தமான கனிம உற்பத்தி நிறுவனம், இந்நிறுவனத்தின் தலைமையகம் ஐதராபாத்தில் உள்ளது, இது 15 நவம்பர் 1958 இல் நிறுவப்பட்டது.
o CSR- Corporate social responsibility
o NMDC- National Mineral Development Corporation

 

ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (RINL) தேசிய ஆற்றல் தலைவர் விருதை வென்றுள்ளது

• எரிசக்தி மேலாண்மை திட்டத்தில் சிறந்து விளங்குவதற்கான 23வது தேசிய விருது புது தில்லியில் நடைபெற்றது.
• 23 வது தேசிய விருதில், ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (RINL) தொடர்ந்து நான்காவது முறையாக தேசிய ஆற்றல் தலைவர் விருதை வென்றுள்ளது.
• 2017 முதல் ஆறாவது முறையாக சிறந்த ஆற்றல் திறன் அலகு விருதைப் பெற்றுள்ளது.
• ஸ்ரீ A.K. சக்சேனா, இயக்குனர், RINL மற்றும் ஸ்ரீ அபிஜித் சக்ரபர்தி, CGM பொறுப்பாளர் ஆகியோர் விருது பெற்றுக்கொண்டனர்.
o ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனம் அரசுக்கு சொந்தமான எஃகு உற்பத்தியாளர் ஆகும், இது 18 பிப்ரவரி 1982 இல் நிறுவப்பட்டது மற்றும் அதன் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் உள்ளது.
o RINL- Rashtriya Ispat Nigam Limited


புத்தக வெளியீடு

எல்சாமேரி டி சில்வா மற்றும் சுப்ரீத் கே சிங் எழுதிய She Is–Women in STEAM என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

• இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேராசிரியர். அஜய் சூட் மற்றும் பிரிட்டிஷ் உயர் ஆணையர் திரு. அலெக்ஸ் எல்லிஸ் ஆகியோர் She Is–Women in STEAM என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.
• இந்த புத்தகத்தை எல்சாமேரி டி சில்வா மற்றும் சுப்ரீத் கே சிங் எழுதியுள்ளனர்.
• இப்புத்தகம் STEAM இல் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகிய துறைகள்) பாலினம், தலைமைத்துவம் மற்றும் STEAM துறைகளில் நிலையான வளர்ச்சியைக் கொண்டாடும் 75 பெண்களை கெளரவிக்கிறது.
• இந்த புத்தகம் பெண்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான போராட்டங்களைப் பற்றியதாகும்.


முக்கிய தினங்கள்

உலக காண்டாமிருக தினம் இன்று

• உலக காண்டாமிருக தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்படுகிறது.
• காண்டாமிருகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
• உலக காண்டாமிருக தினம் முதன்முதலில் செப்டம்பர் 22, 2011 அன்று கொண்டாடப்பட்டது, ஆனால் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவால் 2010 இல் அறிவிக்கப்பட்டது.
• இந்த நாளின் முக்கியத்துவம், ஆபத்தான உயிரினங்கள் மற்றும் அவற்றைப் பாதுகாக்க எப்படி உதவி தேவை என்பதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புகிறது.
கருப்பொருள்
o இந்த ஆண்டுக்கான உலக காண்டாமிருக தினத்தின் கருப்பொருள் “ஐந்து காண்டாமிருக இனங்கள் என்றென்றும்”என்பதாகும்.


உலக ரோஜா தினம் செப்டம்பர் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது!!!

• உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோயோடு போராடி வரும் நோயாளிகளின் கவலைகளைப் போக்கி ஊக்கம் அளித்து ஆதரவு அளிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
• 1996ம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த 12 வயதான நோயாளி மெலிண்டா ரோஸின் நினைவாகவே உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்படுகிறது
• புற்று நோயாளிகளின் வாழ்வில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதையும், உறுதி மற்றும் நேர்மறையின் மூலம் புற்றுநோய்க்கு எதிரான போரில் அவர்கள் வெற்றிபெற முடியும் என்பதையும் அவர்களுக்கு இந்த நாள் நினைவூட்டுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!