நடப்பு நிகழ்வுகள் – 22 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 22 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 22 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 22 மார்ச் 2023

தேசிய செய்திகள்

முக்கிய நகரங்களில் காடுகளின் பரப்பு அதிகரிப்பு

  • டெல்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் காடுகளின் பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்திய காடுகளின் அறிக்கை (ISFR) 2023 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே கூறுகையில், 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெஹ்ராடூனின் இந்திய வன ஆய்வு (எஃப்எஸ்ஐ) 2011 – 2021 வரையிலான வளர்ச்சி சுமார் 68 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளம்

  • பங்களாதேஷின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளமான ‘பிஎன்எஸ் ஷேக் ஹசீனா ‘ (BNS Sheikh Hasina’ )பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவால் பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் திறந்து வைக்கப்பட்டது.தனது அரசாங்கம் தனது இராணுவப் படையை நவீன அமைப்பாக மாற்றுவதற்கு ‘படைகளின் இலக்கு 2030’ இல் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
  • பங்களாதேஷ் அரசாங்கம் அதன் நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் கையெழுத்திட்டது.

இந்தியா-நேபாளம் இலக்கிய விழா

  • நேபாளத்தின் பிரத்நகர் பெருநகர நகரமும், இந்தியாவின் மீரட்டின் கிராந்திதாரா இலக்கிய அகாடமியும் இணைந்து நேபாளத்தின் பிரத் நகரில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
  • நேபாள இலக்கியத்தை ஹிந்தியிலும், ஹிந்தி இலக்கியத்தை நேபாளிலும் மொழிபெயர்ப்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வது உள்ளிட்ட 10 அம்ச பிரகடனம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மாநில செய்திகள்

வேளாண் பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்

  • தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • இதன் சிறப்பு அம்சங்கள் :மின்னணு வேளாண்மை திட்டம் அறிமுகம், எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்புத் திட்டம், தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு, பயிர் காப்பீட்டு மானியம் ரூ.2337 கோடி ஒதுக்கீடு, வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி,உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்0,கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை தொகுப்பு,கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை, கழிவிலிருந்து இயற்கை உரம், மதுரை மல்லிகை மற்றும் பலா, மிளகாய் இயக்கம் ,குளிர்கால காய்கறிகள் சாகுபடிக்கு மானியம், நுண்ணீர் பாசனத்துக்கு நிதி,விவசாயிகளுக்கு அயல் நாட்டில் பயிற்சி,,முந்திரி சாகுபடி மற்றும் வாழைக்கு தனி தொகுப்புத் திட்டம்,பனை மேம்பாட்டுத் திட்டம்,நம்மாழ்வார் பெயரில் விருது,சிறுதானிய உணவகம்,ரூ.14,000 கோடி பயிர்க் கடன் போன்றவை இதில் அடங்கும்.

 

நியமனங்கள்

நேபாளத்தின் புதிய துணை ஜனாதிபதி

  • ராம் சகாய பிரசாத் யாதவ் நேபாளத்தின் புதிய துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.இவருக்கு குடியரசுத் தலைவர் ஷீத்தல் நிவாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைக் குடியரசுத் தலைவருக்கு ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய CEO வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்

  • உலக காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் பொறுப்பேற்றுள்ளார். நரசிம்மன் புனே பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார். அமெரிக்கா, கனடா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பணிபுரிந்துள்ளார்.
  • பன்னாட்டு நுகர்வோர் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனமான ரெக்கிட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

500 ஆண்டுகளுக்கு பழமையான விஜயநகர பேரரசு கால நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அருகே தோணுகால் என்ற கிராமத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால நடுகல் சிற்பத்தை கண்டெடுத்தனர்.இந்த சிற்பம் இரண்டரை அடி உயரம் மற்றும் இரண்டரை அடி அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது.
  • இதில் ஒரு ஆண் மற்றும் அவரது மனைவியின் உருவம் மற்றும் இரண்டு குடுவையும் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் வடிவமைப்பை பார்க்கும்போது 500 ஆண்டுகளுக்கு பழமையான விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

36 செயற்கைகோள்களை கொண்ட எல்விஎம் -3 ராக்கெட்

  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் SDSC-SHAR இல் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து மார்ச் 26 அன்று எல்விஎம் -3 விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
  • இந்த ராக்கெட் ஒன் வெப் இந்தியா -2 (OneWeb India) க்கு உரிய 36 செயற்கைக்கோள்களை கொண்டுள்ளது.இவை சுமார்8 டன் எடை கொண்டவை.வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள எரிமலைகளின் செயல்பாடுகளை கண்டறிய இந்த செயற்கைகோள்கள் பயன்படும்.

 

விளையாட்டு செய்திகள்

பங்கஜ் அத்வானி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்

  • இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் பிரிஜேஷ் தமானியை 5க்கு 1 என்ற புள்ளியில் பங்கஜ் அத்வானி தோற்கடித்தார்.
  • இதன்மூலம் 2வது முறையாக ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை பங்கஜ் அத்வானி வென்றுள்ளார்.

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் :  அல்கரஸ்,ரைபாகினா சாம்பியன்

  • அமெரிக்காவில் இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் கஜகஸ்தான் சேர்ந்த எலினா ரைபகினா, பெலாரஸ் சேர்ந்த அரினா சபலென்காவுடன் மோதினார்.இந்த போட்டியில் ரைபகினா 7-6 (13-11), 6-4 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் வென்றார்.6-3,6-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார்.இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலில் கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

CMJ ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் விருது 2022

  • நேபாள விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆசிப் ஷேக், நேபாளம் மற்றும் அயர்லாந்து இடையே ஆடவர் T20 சர்வதேச போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக கிறிஸ்டோபர் மார்ட்டின்-ஜென்கின்ஸ் (CMJ) ஸ்பிரிட் விருது 2022 -ஐ அவர் பெற்றார்.
  • இந்த விருதை MCC மற்றும் BCC ஆகியவை இணைந்து வழங்குகின்றன. ஆசிஃப் ஷேக்கிற்கு ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

 

முக்கிய தினம்

சர்வதேச காடுகள் தினம்

  • சர்வதேச காடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு காடுகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தஇத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “காடுகள் மற்றும் ஆரோக்கியம்.”

சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு தினம்

  • இந்த தினமானது ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இனப் பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச தினம் 1960 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஷார்ப்வில்லியில் நிறவெறிச் சட்டங்களுக்கு எதிராக நின்ற அமைதியான போராட்டக்காரர்கள் 69 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை நினைவுகூறும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.

உலக கவிதை தினம்

  • உலக கவிதை தினம் மார்ச் 21 அன்று கொண்டாடப்படுகிறது, இது உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும் 1999 இல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டின் உலக கவிதை தினத்தின் கருப்பொருள் “எப்போதும் கவிஞராக இருங்கள், உரைநடையில் கூட” என்பதாகும்.

Download PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!