நடப்பு நிகழ்வுகள் – 21 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 21 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 21 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 21 மார்ச் 2023

தேசிய செய்திகள்

இந்தியா – மாலத்தீவுகள் 4வது பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டம்

  • இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான 4வது பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டம் (டிசிடி) மாலத்தீவின் மாலேயில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு செயலாளர் அப்துல்லா ஷமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பயிற்சிகளின் திறனை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர் மற்றும் எதிர்காலத்தில் மேலும் பல உறவுகளுக்கு திட்டமிட்டனர்.

 

சர்வதேச செய்திகள்

யுபிஎஸ் உடன் கிரெடிட் சூயிஸ்  இணைப்பு

  • சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான யுபிஎஸ், நிதி நெருக்கடியைத் தவிர்க்கவும், சந்தைத்தன்மையை மேம்படுத்தவும் சிறிய வங்கியான கிரெடிட் சூயிஸை எடுத்துக் கொள்ளும் என்று சுவிஸ் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
  • கிரெடிட் சூயிஸ் உலக அளவில் முறையான வங்கிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  • உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6வது முறையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.இப்பட்டியலில் இந்தியா 136வது இடத்தில் உள்ளது.
  • மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

 

மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2023

  • தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
  • தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15 முதல் ரூ.1000 உரிமைத் தொகை, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இனி எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட துறைகளின் பள்ளிகள், ஸ்டான்லின் மருத்துவமனையில் புதிய பன்னோக்குப் பிரிவு, அம்பத்தூரில் ரூ.120 கோடியில் புதுமை முயற்சிகள், திறன் பயிற்சி மையம்,ஈரோடு மாவட்டத்தில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்,ரூ.1000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை அடங்கும்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்

  • மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசு இணைந்து நடத்தும் ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ விழா நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்நிகழ்ச்சியின் போது ‘லோகோ’ மற்றும் nitt.edu என்ற இணையதள பக்கத்தை அறிமுகம் செய்தார்.
  • குஜராத்தில் நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கனா ஏற்பாடுகளை இந்த முறை திருச்சி என்.ஐ.டி(NIT ) நிர்வாகம் மேற்கொள்கிறது.

கேரளாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர்

  • கேரள மாநிலத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையை பத்ம லட்சுமி பெற்றுள்ளார். பத்ம லட்சுமிக்கு கேரளாவின் தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • பத்ம லட்சுமி இயற்பியல் பட்டப்படிப்பை முடித்து எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி.யில் படித்தார். பயிற்சிக்கு முடித்த பிறகு நீதித்துறைப் பணித் தேர்வில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

திருமங்கலத்தில் குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது

  • திருமங்கலத்திற்கு அருகிலுள்ள குரையூரில் நாயக்கர்கள் காலத்தில் நீர்வள மேலாண்மை (குமிழித்தும்பு) பற்றி விவரிக்கும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கல்வெட்டில் ஒருபுறம் 31 வரிகளும், மறுபுறம் 8 வரிகளும் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர்களின் மதிப்பீட்டிற்குப் பிறகு, இது 400 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா -எப்டன் சாம்பியன்

  • அமெரிக்காவில் நடந்து வரும் இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி முதலிடம் வகித்த வெஸ்லி கூல்ஹோப் – நியல் குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் போபண்ணா-எப்டென் 6-3, 2-6, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
  • இது டென்னிஸ் போட்டியில் போபண்ணா வென்ற 5-வது பட்டம் . இதன் மூலம் போபண்ணா ஏ.டி.பி. மாஸ்டர்ஸ்1000 வகை டென்னிஸ் போட்டியில் அதிக வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மகாபலிபுரத்தில் உலகத்தரத்தில் தொடங்கும் கால்பந்து அகாடமி

  • எஃப்சி மெட்ராஸ் மகாபலிபுரத்தில் உலகத்தரத்திலான தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடமியை தொடங்குகிறது. கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை  ஒருங்கிணைக்கும் ஒரு கல்வித் திட்டத்திற்கு திறன்வாய்ந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு முழு ஊக்கத்தொகையை வழங்கும் நோக்கத்தோடும், விளையாட்டுகளில்   உட்கட்டமைப்பு வசதிகளை தரும் நோக்கத்தோடும்  உருவாக்கப்பட்டுள்ளது.
  • 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளாகத்தில் இரவு நேரத்திலும் விளையாடுவதற்கு தேவையான ஒளிவிளக்குகள் கொண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

 

முக்கிய தினம்

உலக சிட்டுக்குருவி தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம்மாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், அழிந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள பறவை இனத்தைக் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும். பீகாரில் சிட்டுக்குருவியை மாநில பறவையாக குறிப்பிடத்தக்கது.
  • உலக சிட்டுக்குருவி 2023 இன் கருப்பொருள்: மனிதர்களுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் இடையிலான உறவைப் பாராட்டுவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் ” I Love Sparrows “.

 

Download PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!