நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2023
நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2023

நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2023

தேசிய செய்திகள்

விஞ்ஞானிகா (Vigyanika) – அறிவியல் இலக்கிய விழா 2023 போபாலில் நடைபெற உள்ளது

 • 8வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் (IISF), MANIT, போபால் மற்றும் அறிவியல் இலக்கிய விழாவான விக்யானிகா- வை (Vigyanika) ” ஜனவரி 22 & 23,2023-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
 • ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பலன்களைக் காட்சிப்படுத்துகிறது, IISF ஆனது பொதுமக்களை அறிவியலுடன் ஈடுபடுத்துவதையும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை எவ்வாறு வழங்குகிறது என்பதை நிரூபிக்கவும் அமைக்கப்படவுள்ளது

இந்திய துறைமுக சங்கம் மற்றும் RIS இடையே MoA கையெழுத்தானது

 • 19 ஜனவரி 2023 அன்று புதுதில்லியில் கடல்சார் பொருளாதாரம் மற்றும் இணைப்புக்கான மையத்தை அமைப்பதற்கான இந்திய துறைமுகங்கள் சங்கம் மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புகள் கொள்கை உருவாக்கங்களில் தங்கள் நிபுணத்துவத்தை வழங்க வேண்டும், இதனால் கொள்கை முடிவுகளை அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டிள்ளது.

இந்தோஎகிப்து கூட்டுப் பயிற்சிExercise Cyclone – I’

 • இந்திய ராணுவம் மற்றும் எகிப்திய ராணுவத்தின் சிறப்புப் படைகளுக்கு இடையேயான முதல் கூட்டுப் பயிற்சியான Exercise Cyclone – I’ 14 ஜனவரி 2023 முதல் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் பாலைவனங்களில் 14 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.
 • இப்பயிற்சியானது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், பயங்கரவாத எதிர்ப்பு, உளவு பார்த்தல், சோதனைகள் மற்றும் பிற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகிறது மேலும் பாலைவன நிலப்பரப்பில் சிறப்புப் படைகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் இயங்குநிலையைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான MNRE உடன் IREDA புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

 • இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை 2022-23-ஆம் நிதியாண்டுக்கான செயல்திறன் தொடர்பாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் இந்த ஆண்டு வருவாயாக ரூ.3, 361 கோடி என்ற இலக்கை எட்டுவதற்கு நிர்ணயித்துள்ளது,இது முந்தைய ஆண்டு வருவாயைவிட 18% அதிகமாகும். 

 

சர்வதேச செய்திகள்

FITURமாட்ரிட்டில் உலகின் மிகப்பெரிய சர்வதேச பயண  கண்காட்சிகள்

 • உலகின் மிகப்பெரிய சர்வதேச பயணக் கண்காட்சிகளில் ஒன்றான FITUR ஸ்பெயினின் தலைநகரம் மாட்ரிட்டில் ஜனவரி 18 முதல் 22, 2023-ம் தேதி வரை நடைபெறுகிறது, மேலும் இக்கண்காட்சியில் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது.
 • இந்தியா பெவிலியனை ஸ்பெயினுக்கான இந்திய தூதர் திரு. தினேஷ் கே. பட்நாயக் அவர்களால் முறையாகத் திறந்து வைத்தார்.மேலும் இன்க்ரெடிபிள் இந்தியா பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், யோகா அமர்வுகள், மெஹந்தி மற்றும் பாலிவுட் நடன நிகழ்ச்சிகளை இக்கண்காட்சியில் ஏற்பாடு செய்ததுள்ளது.

பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023

 • பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் பிராண்ட் ஃபைனான்ஸால் வெளியிடப்பட்டது, இது உலகளவில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் – பணியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பரந்த சமுதாயத்தின் தேவைகளை சமநிலைப்படுத்துவதன் மூலம், நிலையான முறையில் வணிக மதிப்பை கட்டமைக்கும் CEO-களின் தரவரிசை ஆகும்.
 • பங்கு மதிப்பு(‘Equity’), ‘செயல்திறன்’ மற்றும் ‘முதலீடு’ போன்ற காரணிகளின் அடிப்படையில் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் வெளியிடப்படுகிறது.

பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023:

.எண் தலைமை நிர்வாக அதிகாரியின்  பெயர் நிறுவனங்கள்
1 ஜென்சன் ஹுவாங் என்விடியா
2 முகேஷ் அம்பானி ரிலையன்ஸ்
3 சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட்
4 சாந்தனு நாராயண் அடோப்
5 சுந்தர் பிச்சை கூகுள்
6 புனிட் ரென்ஜென் டெலாய்ட்
7 ஃபேப்ரிசியோ ஃப்ரெடா எஸ்டீ லாடர் நிறுவனங்கள்
8 நடராஜன் சந்திரசேகரன் டாடா
9 பியூஷ் குப்தா டிபிஎஸ்
10 ஹுவாடெங் மா டென்சென்ட்

 

மணல் மூலம் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் பேட்டரி ஃபின்லாந்தில் நிறுவப்பட்டது

 • முதன்முதலில் முற்றிலும் மணலால்செயல்படும் பேட்டரி பின்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது. இது ஒரு தொழில்நுட்பமாகும், குளிர்காலம் முழுவதும் வீடுகளை சூடாக வைத்திருக்க பயன்படுகிறது, ஏனெனில் இது நீடித்த வெப்பத்தை நீண்ட காலத்திற்கு சேமிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.
 • போலார் நைட் எனர்ஜிஎனும் நிறுவனம் எந்த பேட்டரியை உருவாக்கியுள்ளது.
  • மின்கலத்தின் செயல்முறையானது “மின்சாரத்தை வெப்பமாக மாற்றி, பின்னர் பயன்படுத்துவதற்காக சேமித்து வைப்பதாகும். மணல் சேமிப்பக ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது, இது பாதுகாப்பான செயல்பாட்டிற்கும் சேமிப்பு சுழற்சியில் இயற்கையான சமநிலைக்கும் வழிவகுக்கும்.

 

மாநில செய்திகள்

ஐஐடிமெட்ராஸ் இன்குபேட்டட் நிறுவனம் உள்நாட்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது

 • ஐஐடி மெட்ராஸின் இன்குபேட்டட் நிறுவனமான JandK ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (JandKops) “BharOS” என்னும் கைபேசிக்கான இயங்குதளத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
 • “BharOS சேவை என்பது நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு கைபேசிக்கான இயங்குதளம் ஆகும், இது பயனர்களுக்கு அதிக சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. NDA, PASS மற்றும் NOTA உடன், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற ஆப்ஸ்களை மட்டுமே தேர்வு செய்து பயன்படுத்துகிறது. இந்திய மொபைல் போன்கள் நம்பகமானவை என்பதை உறுதி செய்கிறது”.
  • No Default Apps (NDA)
  • Native Over The Air (NOTA)
  • Private App Store Services (PASS)

ஒடிசாவில் மிகப்பெரிய மனித சிவப்பு ரிப்பன் சங்கிலி நடைபெற்றது

 • புவனேஸ்வரின் ஒடிசாவில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 19 ஜனவரி 2023 அன்று எச்ஐவி எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கலிங்கா மைதானத்தில் மிகப்பெரிய மனித சிவப்பு ரிப்பன் சங்கிலி நடைபெற்றது.
 • ஒடிசா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், ஒடிசா அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, NACO இன் தலைமையில் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் & ஹாக்கி இந்தியா ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 4வது பதிப்புசிறுதானியங்கள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் -2023”

 • Millets & Organics 2023 – சர்வதேச வர்த்தகக் கண்காட்சி பெங்களூரில் உள்ள திரிபுரவாசினியில் கர்நாடக முதல்வர் ஸ்ரீ.பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.மேலும் இக்கண்காட்சி ஜனவரி 20 முதல் 22 ஜனவரி 2023 வரை நடைபெறவுள்ளது.
 • வர்த்தக கண்காட்சியானது விவசாயிகள், விவசாயிகள் குழுக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் தினை துறையில் உள்ள மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள், விவசாயம், தோட்டக்கலை, செயலாக்கம், இயந்திரங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை இணைத்து ஆராய்வதற்கான ஒரு தளமாக அமைக்கப்ட்டுள்ளது.
  • முதல் சிறுதானியங்கள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் கண்காட்சி 2017 இல் நடைபெற்றது.

 

நியமனங்கள்

பிரவீன் சர்மா (IDSE) தேசிய சுகாதார ஆணையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்

 • பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையிலிருந்து வெளியிடப்பட்ட உத்தரவின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதார ஆணையத்தில் (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்) இயக்குநராக பிரவீன் ஷர்மா (IDSE) ஜனவரி 19, 2023 அன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • சர்மா மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் பதவிக்கு பொறுப்பேற்ற நாளிலிருந்து அல்லது அடுத்த உத்தரவு வரை ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் ஷர்மா ஒரு இந்திய பாதுகாப்பு சேவை பொறியாளர் (IDSE) அதிகாரி 2005 பிரிவை சேர்ந்தவர் ஆவார்.

 

 

தொல்லியல் ஆய்வுகள்

ஈரோட்டில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவலிங்கம் புலிக்குத்தி நடுகற்கள் கண்டுபிடிப்பு

 • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அங்கண கவுண்டன் புதூர் கிராமத்தை ஆய்வு செய்தபோது சிவலிங்கம் சிலை, இரண்டு புலிக்குத்தி நடு கற்கள் மற்றும் நந்தி சிலைகள் மண்ணில் புதைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 • மேலும் கண்டறியப்பட்ட சிவலிங்க சிலை மற்றும் இரண்டு புலிக்குத்தி நடு கற்கள் 800 ஆண்டுகளுக்கு பழமையானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

விருதுகள்

சிறந்த நிலையான பசுமை விமான நிலைய விருது

 • GMR விமான நிலைய உள்கட்டமைப்பின் துணை நிறுவனமான GMR கோவா சர்வதேச விமான நிலையம் (GGIAL), ASSOCHAM இன் சிவில் ஏவியேஷன் 2023க்கான 14வது சர்வதேச மாநாடு மற்றும் விருதுகளில் விமான நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலின் கீழ் ‘சிறந்த நிலையான கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்’ என்ற விருதை வென்றுள்ளது.
 • முக்கிய கருத்துக்களில் ஒன்றாக நிலைத்தன்மையை செயல்படுத்துவதில் GGIAL எடுத்த “சிறந்த முயற்சிகளுக்காக” இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு-சிறந்த நடைமுறைகள் விருது 2023

 • SJVN Limited க்கு மதிப்புமிக்க கிரீன்டெக் சர்வதேச சுற்றுச்சூழல் , உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ( EHS ) சிறந்த நடைமுறைகள் விருது 2023 வழங்கப்பட்டுள்ளது, மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளில் அதிக அளவு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கு இவ்விருது புது தில்லியின் கிரீன்டெக் அறக்கட்டளையால் வழங்கப்படுகின்றன.
 • நிலையான இலக்குகளை அடைவதற்கான புதுமையான நடைமுறைகள் மற்றும் முன்முயற்சிகளை அங்கீகரிப்பதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலம் நிலையான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் SJVN சிறந்த நடைமுறைகள் விருதை 2023 பெற்றுள்ளது.
  • SJVN, முன்பு சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம் என்று அழைக்கப்பட்டது, இது நீர்மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும்.

 

 

விளையாட்டு செய்திகள்

உலக  செஸ்  சாம்பியன்ஷிப் போட்டி – 2023

 • சா்வதேச செஸ் சம்மேளனம் ((FIDE) உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் வரும் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் மே. 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 • மேலும் இப்போட்டியில் மொத்தம் 14 சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன, மற்றும் பரிசுத் தொகையாக 2 மில்லியன் யூரோ வழங்கப்பட உள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!