Current Affairs – 20th September 2022

0
Current Affairs – 20th September 2022
Current Affairs – 20th September 2022
Current Affairs – 20th September 2022

தேசிய செய்திகள்

முதல்வர் N. பிரேன் சிங், ‘CM Da Haisi’ இணைய தளத்தை துவக்கி வைத்துள்ளார்

• பொது மக்களிடம் இருந்து புகார்கள் மற்றும் குறைகளை பெற முதல்வர் N. பிரேன் சிங் ‘CM Da Haisi’ போர்ட்டலை தொடங்கியுள்ளார்.
• ‘CM Da Haisi’ என்ற பெயரின் அர்த்தம் ‘முதலமைச்சருக்குத் தகவல்’ என்பதாகும்.
• www.cmdahaisi.mn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை இணையதள போர்ட்டலில் தெரிவிக்கலாம்.
• முதலமைச்சரை நேரடியாக தொடர்பு கொள்ள Helpline எண் (95347 95347) வழங்கப்பட்டுள்ளது.
• இது மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நிர்வாகத்திலும், பொது சேவைகளை வழங்குவதிலும் எங்களுக்கு உதவும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள், 100 சதவிகிதம் தடுப்பூசி செயலுத்திய இந்தியாவின் முதல் மாநிலம்/யூடி ஆகும்

• அந்தமான் நிக்கோபார் நிர்வாகம், யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தகுதியான மக்களுக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
• ஹெல்த் புல்லட்டின் படி, 2.86 லட்சம் பயனாளிகளின் இலக்குக்கு எதிராக 2.87 லட்சம் பேர் கோவிட்-19 தடுப்பூசி கோவிஷீல்டின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர், இது 100.41% தடுப்பூசிக்கு வழிவகுத்துள்ளது .
• “அந்தமான் நிக்கோபார் கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் 100% அடைந்துள்ளது, இது கோவிஷீல்டை மட்டுமே பயன்படுத்தி சாதனையை எட்டிய முதல் மாநிலம்/யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது.

பணப்பரிவர்த்தனை சேவையில் இறங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி!!!

• ஐ .ஆர் .சி .டி .சி ., என்னும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ” பண பரிவர்த்தனை சேவை துறையில் தனது சேவையை தொடங்கவுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக விண்ணப்பிக்க உள்ளது.
• தற்போது ஐ .ஆர் .சி .டி .சி. இடம் ஐ -பே ,எனும் பேமென்ட் கேட் வே உள்ளது.
• ஐ -பே வசதி வாயிலாக, பயணச் சீட்டுகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
• மேலும் தகுதி வாய்ந்த வணிகங்களுடன் கூட்டு சேர்வதன் வாயிலாக, பண பரிவர்த்தனை வணிகத்தை விரிவு படுத்திக் கொள்ளமுடியும்.

KCC திட்டத்தை அறிமுகப்படுத்தியது பெடரல் வங்கி !!!

• ஃபெடரல் வங்கி , தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புற நிதியை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் விளைவாக உடனடி கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடனுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
• இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை நிறுவனமான ரிசர்வ் வங்கி இன்னோவேஷன் ஹப் மூலம் உடனடி கேசிசி (KCC)உருவாக்கப்பட்டது
• தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட e-KYC மற்றும் eSign, அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) ஆகியவற்றை KCC தளம் பயன்படுத்தும்.
• இந்த மாத தொடக்கத்தில், RBI, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் KCC கடன்கள் முறையே யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஃபெடரல் வங்கியுடன் செப்டம்பர் மாதத்தில் பங்குதாரர் வங்கிகளாகவும், மாநில அரசுகளின் தீவிர ஒத்துழைப்புடனும் அறிவித்தது.

ஐ.ஐ.டி.,யின் செயல் திட்ட அறிக்கையை மத்திய அமைச்சர் வெளியிட்டார்!!!

• சென்னை ஐ.ஐ.டி.,யின் அடுத்த ஐந்து ஆண்டுக்கான செயல் திட்ட அறிக்கையை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
• நாட்டின் முன்னணி உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., 2022- 27ம் ஆண்டுக்கான செயல் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தலைமையில் நேற்று நடந்தது.
• மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

நாளிதழ் விற்பனை கண்காணிப்பு அமைப்பின் நிர்வாகிகள் தேர்வு!!!

• 2022 – 2023ம் ஆண்டுக்கான நாளிதழ்களின் விற்பனையை கண்காணிக்கும் நிர்வாகிகளை ‘ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்’ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது .
• தலைவராக ‘சகால் மீடியா’ தலைவர் பிரதாப் பவார், துணைத் தலைவராக ஆர்.கே.சுவாமி அட்வர்டைசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கே.சுவாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கவுரவ செயலராக ‘மலையாள மனோரமா’வின் ரியாத் மேத்யூவும், கவுரவ பொருளாளராக ‘மேடிசன் கம்யூனிகேஷன்ஸ்’ விக்ரம் சகுஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
• கமிட்டி உறுப்பினர்களாக ‘த பாம்பே சமாச்சார்’ ஹோர்முஸ்ஜி என்.காமா, ‘ஜாக்ரன் பிரகாஷன்’ சைலேஷ் குப்தா, ‘ஹிந்துஸ்தான் மீடியா’ பிரவின் சோமேஸ்வர், ‘பென்னெட் கால்மென்’ மோஹித் ஜெயின், ஏ.பி.பி., துர்பா முகர்ஜி, ‘லோக்மத் மீடியா’ கர்ணன் தர்தா மற்றும் ‘ஐ.பி.ஜி., மீடியா பிராண்ட்ஸ்’ சசிதர் சின்ஹா, ‘குரூப் எம்’ பிரசாந்த் குமார், ‘யுனைடெட் புரூவரீஸ்’ தேபபிரதா முகர்ஜி, ஐ.டி.சி., கருனேஷ் பஜாஜ், ‘டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி’ அனிருத்தா ஹல்தார், ‘மாருதி சுசூகி இந்தியா’ சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நியமனங்கள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்

• இந்தியக் குடியரசுத் தலைவர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜாவை நியமித்துள்ளார்.
• தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 13-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிபதி எம்.துரைசாமி, செப்டம்பர் 21-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
• இந்த பணி ஓய்வுக்குப் பிறகு நீதிபதி டி.ராஜா செப்டம்பர் 22-ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.
• நீதிபதி டி.ராஜா, 1961ம் ஆண்டு மே 25ம் தேதி மதுரை மாவட்டம் தேனூரில் பிறந்தார்.
• நீதிபதி ராஜா 31.03.2009 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளராக விஜய் குமார் சிங் பொறுப்பேற்றுள்ளார்
• விஜய் குமார் சிங், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலன் செயலாளராக செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுள்ளார்.
• விஜய் குமார் சிங், பஞ்சாப் கேடரின் 1990-பேட்ச் IAS அதிகாரி, நிர்வாகத்தில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.
• அவர் சமீபத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
• விஜய் குமார் சிங், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.


ஜனாதிபதி திரௌபதி முர்மு எட்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (IIT) இயக்குனர்களை நியமித்துள்ளார்.

1. IIT மெட்ராஸ் பேராசிரியர் சேஷாத்ரி சேகர் IIT பாலக்காடு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. IIT புவனேஷ்வர் IITயின் புதிய இயக்குநராக IIT மெட்ராஸ் பேராசிரியர் ஸ்ரீபத் கர்மல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. IIT காரக்பூரின் வெங்கயப்பய ஆர்.தேசாய் IIT தார்வாட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. IIT தார்வாட் இயக்குனர் பசுமார்த்தி சேசுவுக்கு, கோவா IIT இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
5. IIT பிலாய் இயக்குனர் ரஜத் மூனா IIT காந்திநகர் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. திருப்பதியில் உள்ள IIT யின் இயக்குநராக கே.என்.சத்யநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
7. ராஜீவ் பிரகாஷ் பிலாய் IIT யின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. ஜம்முவில் உள்ள IIT யின் இயக்குநராக மனோஜ் சிங் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச செய்திகள்

வலேரி பாலியாகோவ் ரஷ்ய விண்வெளி வீரர் காலமானார்

• விண்வெளிக்கு அதிக நேரம் பயணம் செய்தவர் என்ற சாதனையை படைத்த ரஷ்ய விண்வெளி வீரர் தனது 80வது வயதில் காலமானார்.இவர் 27 ஏப்ரல் 1942 இல் பிறந்தார்.
• ஒரு பயணத்தின் போது மிர் விண்வெளி நிலையத்தில் 14 மாதங்களுக்கும் மேலாக (437 நாட்கள் 18 மணிநேரம்) தங்கியிருந்து, விண்வெளியில் அதிக நேரம் தங்கியதற்கான சாதனை படைத்துள்ளார்.
• பாலியகோவ் தனது தொழில் துறை வாழ்க்கையில் இரண்டு விண்வெளி பயணங்களை மேற்கொண்டுள்ளார்.


மாநில செய்திகள்

சென்னை 3வது விரிவான திட்டம்

• சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம், சென்னை பெருநகரத்திற்கான விரிவான திட்டத்தை (2027 – 2046) தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
• பல்வேறு அடிப்படை வசதிகளை செயல்படுத்தி அடுத்த 20 ஆண்டுகளுக்கு நகரை மேம்படுத்தும் திட்டமாகும்.
• முதல் விரிவான திட்டம் 1976 இல் தொடங்கப்பட்டது, இரண்டாம் கட்ட விரிவான திட்டம் 2006 முதல் 2026 வரை இருந்தது.
• இப்போது மூன்றாவது விரிவான திட்டம் 2027 – 2046 இல் அமைக்கப்பட உள்ளது.
• பொருளாதார மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து மேம்பாடு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய முக்கிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார செய்திகள்

தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 18.43 சதவீதம் அதிகரித்துள்ளது.

• 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழகம் ரூ.196 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
• மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மொத்தம் ரூ.5,836 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
• மகாராஷ்டிரா 28%, கர்நாடகா 24%, குஜராத் 19% முன்னிலையில் உள்ளன.
• டெல்லி 4வது இடத்திலும், தமிழகம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
• 2020-21 உடன் ஒப்பிடும்போது 2021-22 நிதியாண்டில் தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு 18.43% அதிகரித்துள்ளது.


புவியியல் அடையாளங்கள்

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

• மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே குன்னத்தூரில் 500 ஆண்டுகள் பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
• குன்னத்தூர் பகுதியில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி மற்றும் ஆய்வாளர் ஆனந்தகுமாரன் ஆகியோர் நடத்திய ஆய்வில், கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
• வளரி என்பது பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தப்படும் ஒரு வகை ஆயுதம். குறிப்பாக கால் நடைகளை திருடிச் செல்லும் திருடர்களை பிடிப்பதற்கு, போர்க்களத்தில் பயந்து ஓடி தப்பிப்பர்வர்களை உயிருடன் பிடிப்பதற்கு வளரியை பயன்படுத்தினார்கள்.
• வளரி வீரன் நடுகல் சுமார் 41 இன்ச் உயரம், 27 இன்ச் அகலம் கொண்டது. 3 அடுக்கு கோபுரம், தோரணவாயில் வடிவில் கொண்டு கீழ்பகுதியில் ஆண் மற்றும் 2 பெண் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கிறது.


13- ம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி சிலை கீழக்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டது!!!

• ராமநாதபுரம் கீழக்கரை அருகே மாயாக்குளம் பாரதி நகர் கடற்கரை பகுதியில் 13- ம் நூறாண்டில் சிவனாக வணங்கப்பட்ட நந்தி சிலை கண்டுபிடிக்கபட்டுள்ளது.
• திருமலை சேதுபதி மன்னர்,அவரது ஆட்சி காலத்தில் (கி.பி. 1664 -1674) கீழக்கரை பகுதியில் உள்ள பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கட்டுவதற்காக தேவதானமாக நிலம் கொடுத்துள்ளார்.
• கோயில் உள்ள கல்வெட்டில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய அபூர்வ அறிய காளை லிங்கம் பாரிய சிறு குறிப்பு உள்ளது.
• தற்போது அந்த காளை லிங்கம், படுத்த நிலையில் நீளம் 105 செ.மீ. , அகலம் 33 செ.மீ ,உயரம் 49 செ.மீ., ஆக உள்ளது.
• காளையின் பின் தொடை பகுதியில் அபூர்வமாக ஓம் பசுவதி (பசுபதி) என்ற வாசகம் உள்ளது.


விளையாட்டு செய்திகள்

தேசிய யூத் ஈட்டி எறிதல் போட்டி தங்கம் வென்றார் தீபிகா!!!

• மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ,தேசிய யூத் தடகள சாம்பியன் ஷிப் 17 வது சீசன் நடைபெற்றது
• பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஹரியானாவின் தீபிகா,அதிகபட்சமாக 51.84 மீ எறிந்தார்.
• கடந்த ஆண்டு நடந்த “கேலோ இந்தியா யூத் கேம்ஸ்” போட்டியில் பங்கேற்ற இவர் 51.37மீ எரிந்து சாதனை படைத்துள்ளார் ,தற்போது அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
• ஹரியானாவின் சப்னா (48.76 மீ) வெள்ளி பதக்கமும் பீகாரின் ரிஷி குமாரி (43.51 மீ ) வெண்கல பதக்கமும் பெற்றனர்.

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் பேட்மிட்டன் போட்டியில் 3 தங்க பதக்கங்கள் பெற்ற மதுரை மாணவி !!!

• ஆசிய பசுபிக் காதுகேளாதோர் பேட்மின்டன் போட்டியில் 3 தங்க பதக்கங்கள் பெற்று மதுரை மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார்.
• ஆசிய பசுபிக் காதுகேளாதோர் பேட்மின்டன் போட்டி,தாய்லாந்து நாட்டில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20-ம் தேதிவரை நடைபெற்றது.
• இவர் ஒற்றையர் பிரிவில் ஆதித்யாவை எதிர்த்து தங்கம் வென்றார் ,மேலும் இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அனிகா மற்றும் ஆதித்தியா ஜோடி பதக்கம் வென்றார்.
• அதனை தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெரலின் அனிகா தங்கம் வென்றார்

முக்கிய தினங்கள்

அன்னிபெசன்ட் அம்மையார் நினைவு தினம்

• அன்னிபெசன்ட் அவர்கள் 1847 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
• இந்தியா வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை இந்தியாவில் இருந்த ஆங்கில அரசின் அடக்குமுறைகள் வெகுவாக பாதித்தது.
• இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் – அன்னிபெசன்ட் (1917)
• பிறப்பால் இந்தியர் இல்லை என்றாலும் இந்திய விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அன்னிபெசன்ட் அம்மையார் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் சென்னை அடையாறில் தனது 85 வது வயதில் காலமானார்.

தேசிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம்

• ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம் செப்டம்பர் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது.
• 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சோலார்விண்ட்ஸ் எனப்படும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால் இத்தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
• உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், தகவல் தொழில்நுட்பத்தில் தங்கள் சேவைகளைப் பங்களிக்கும் அனைத்து நபர்களின் பங்கையும், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பாராட்டுவதும் இந்த நாளின் முக்கியத்துவம் ஆகும்.
• “தகவல் தொழில்நுட்பம்” என்பது மென்பொருள் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் குறிக்கிறது, மேலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் பல்வேறு சேவைகளையும் குறிக்கிறது.

கேரளா மறுமலர்ச்சி தந்தை நாராயண குரு அவர்களின் நினைவு தினம்!!!

• நாராயணகுரு (ஆகஸ்ட் 28, 1855 – செப்டம்பர் 20, 1928),1855 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்மாதம் 28ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி எனும் கிராமத்தில் ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் – குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்தான் நாராயணன்.
• இந்து ஆன்மிகவாதியும், இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.
• இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு.
• அருவிப்புரம் சிவன் கோவில் அமைத்து புதிய புரட்சியை ஏற்படுத்திய ஸ்ரீ நாராயண குருவின் செயல்பாட்டில் ஈர்க்கப்பட்ட மைசூரில் மருத்துவராக இருந்த டாக்டர் பல்பு என்பவர் (கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருடைய உண்மையான பெயர் பத்மனாபன். தீண்டப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடவுள் பெயர் வைத்துக் கொள்ள அந்தப்பகுதி நில உடமையாளரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவராலேயே பெயர் மாற்றமும் செய்யப்பட்டது) ஸ்ரீ நாராயண குருவைச் சந்தித்தார்.
• அவர் மூலம் கேரள மக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் நிலையை மாற்றம் செய்யவும் முன்னேற்றம் செய்யவும் 1903-ல் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு அருவிப்புரத்தில் “ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா” எனும் அமைப்பு நிறுவப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!