நடப்பு நிகழ்வுகள் – 20 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 20 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 20 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 20 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் EPFO ​​ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்

  • மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் EPFO, போஸ்ட்மேன் மூலம் அவர்களின் வீட்டு வாசலில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் டிஜிட்டல் முறையில் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான தளத்தை அஞ்சல் துறை வழங்குகிறது.

தமிழகம்

  • கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு லாபத்தின் ஒரு பகுதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

150வது நினைவு தினத்தை முன்னிட்டு வ.உ.சி.யின் இணையதள பக்கம் தொடங்கப்பட்டது.

  • ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படும் சிதம்பரம் பிள்ளையின் 150-வது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இணையதள பக்கத்தை தொடங்கி வைத்தார்
  • தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலக இணையதளத்தில், சிறப்பு இணையப் பக்கம் (https://www.tamildigitallibrary.in/voc) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அவர் எழுதிய 11 புத்தகங்கள், இலக்கியப் படைப்புகள் பற்றிய விளக்கங்கள், நான்கு புத்தக மொழிபெயர்ப்புகள், 20 புத்தகங்கள் மற்றும் ஐந்து ஆய்வுப் படைப்புகள் உள்ளடங்கி உள்ளன.

13 மொழிகளில் திருக்குறள் நூல் வெளியீடு

  • தமிழர்களின் பாரம்பரிய நூலான திருக்குறள் 13 மொழிகளில், மொழிப் பெயர்க்கப்பட்ட நூலினை நரேந்திர மோடி காசி-தமிழ் சங்கம் விழாவில் வெளியிட்டார்.
  • காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடர்பை மீண்டும் கண்டறிந்து,உறுதிப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் ‘காசி -தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் வாரணாசியில் நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 16வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மாநில செய்திகள்

சித்தூரில் கிராமப்புற எஸ்சி சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பக் கருவி (IT Tool) உருவாக்கம்

  • இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பட்டியல் சாதி (SC) சமூகங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும் ஒரு தகவல் தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது.
  • ஓப்பன் சோர்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பக் கருவி(IT Tool), விரிவான குடும்ப அளவிலான வருடாந்திர ஆரோக்கியம் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க பயன்படுத்தப்பட்டது.

பிரதமர் மோடி அருணாச்சல் பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை திறந்துவைத்தார்.

  • அருணாச்சல் பிரதேசம் மாநிலம் இட்டா நகரில் டோனி போலோ என்கிற புதிய பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.640 கோடியில், 680 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை விமானநிலையம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.
  • அருணாச்சல பிரதேசத்தின் தலைநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 2019ம் ஆண்டு அன்று பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி விமான நிலையத்தை தொடங்கி வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் 3500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை

  • சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையத்துடன், மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் இந்தியா, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் ஆகிய பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து விழிப்புணர்வு வார விழாவை நடத்தி வருகிறது.
  • இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

விருதுகள்

தமிழ் இசைச் சங்க விருதுகள் அறிவிப்பு

  • தமிழ் இசைச் சங்கத்தின் 80-ஆவது ஆண்டு விழாவில் டாக்டர் எஸ்.சௌம்யாவுக்கு இசைப் பேரறிஞர் விருதும், பா.சற்குருநாத ஓதுவாருக்கு “பண் இசைப் பேரறிஞர்” விருதும் வழங்கப்படவுள்ளது.
  • சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் டிசம்பர் -12 -இல் தொடங்கும் இசைச் சங்கத்தின் ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்கவுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

ஆசிய  ஏர்கன் சாம்பியன்ஷிப்:

  • தென்கொரியாவில் நடைபெற்ற 15ஆவதுஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 25தங்கம்,2 வெள்ளி,3வெண்கலம் என 30 பதக்கங்கள் வென்றுள்ளது.
  • போட்டியில் மொத்தம் 28 பதக்க சுற்றுகள் இருந்த நிலையில்,அதில் 25-இல் இந்தியா தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டேபிள் டென்னிஸில் பதக்கம் வென்று இந்தியா சாதனை

  • ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார்.
  • விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-6,6-11,11-7,12-10,4-11,11-2 என்ற புள்ளிகள் கணக்கில் மணிகா வெற்றி பெற்றார்.
  • முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் மற்றொரு போட்டியில்,மியாமி இடோ வீராங்கனையுடன் போராடி தோல்வியுற்றார்,எனினும் ஆசியாக் கோப்பையில் மனிகா பத்ராவிற்கு வெண்கலப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

முக்கிய தினம்

சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக  நினைவு தினம்

  • ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள மக்கள் சாலை போக்குவரத்து விபத்துக்களில் கொல்லப்படுகிறார்கள் அல்லது காயமடைகிறார்கள். உண்மையில், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 15-29 வயதுடைய இளைஞர்களிடையே சாலை போக்குவரத்து மோதல்கள் மரணத்திற்கு முக்கிய காரணமாகும்.
  • இந்த உலகளாவிய பிரச்சினைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20 ஆம் தேதியை சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினமாக அறிவித்துள்ளது.

தலைவர்கள் பிறந்த தினம்-நவம்பர் 19

இந்திரா காந்தி

  • இந்திரா காந்தி 19 நவம்பர் 1917 அன்று அலகாபாத்தில் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் இந்திரா நேரு பிறந்தார்.
  • அவரது தந்தை, ஜவஹர்லால் நேரு, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரத்திற்கான இயக்கத்தில் முன்னணி நபராக இருந்தார், மேலும் இந்தியாவின் டொமினியனின் (பின்னர் குடியரசு) முதல் பிரதமரானார்.

இராணி இலட்சுமிபாய்

  • இராணி இலட்சுமிபாய் நவம்பர் 19, 1828 இல் வாரணாசியில் மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தார்.
  • இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் இந்திய நாட்டில் இன்றும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!