நடப்பு நிகழ்வுகள் – 19 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 19 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 19 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 19 மார்ச் 2023

தேசிய செய்திகள்

‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு இரண்டாவது முறையாக விருப்ப ஓய்வு திட்டம்

 • ஏர் இந்தியா’ நிறுவனம் இரண்டாவது முறையாக மீண்டும் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2,100 பணியாளர்கள் விருப்ப ஓய்விற்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட நிரந்தரப் பொதுப் பணியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 • டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கியதில் இருந்து,பல நிர்வாக சீர்திருத்தங்களை செய்து வருகிறது. இதன் மூலம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகம் செய்தது.

வங்கதேச பிரதமர் மற்றும் பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான முதல் எல்லை தாண்டிய எரிசக்திக் குழாயை திறந்து வைத்தனர்.

 • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் முதல் எல்லை தாண்டிய எரிசக்திக் குழாயை திறந்து வைத்தனர். முதல் எல்லை தாண்டிய எரிசக்திக் குழாய் ₹377 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
 • ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அதிவேக டீசலைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட இந்த குழாய் வங்காளதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு அதிவேக டீசலை வழங்கும். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு வங்களாதேஷில் விவசாயத் துறை வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்.

மாநில செய்திகள்

பெண் காவலர்களுக்கனா 9 நவரத்தின அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

 • நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார்.
 • அவை பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் கலைஞர் காவல் கோப்பை என்னும் விருது வழங்கப்படுதல்,காவல் குழந்தைகள் காப்பகம் மேம்படுத்துதல்,காவல்துறையில் பெண்கள் என்னும் தேசிய மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படுதல்,ரோல்கால் எனும் காவல் அணி வகுப்பு காலை 7 மணிக்கு பதிலாக இனி 8 மணி என மாற்றப்படுதல், சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படுதல்,பெண்களுக்கான துப்பாக்கிசூடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது வழங்குதல், அனைத்து காவல் நிலையங்களில் பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வறை அமைத்து தருதல், டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனை குழு உருவாக்கப்படுதல்,அவர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்புமற்றும் பணியிட மாறுதல் வழங்குதல் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் 19 புதிய மாவட்டம் மற்றும் 3 புதிய பிரிவுகளை பெற்றுள்ளது

 • தற்போதுள்ள ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களின் மறுவடிவமைப்பைத் தொடர்ந்து புதிதாக உட்பட 19 புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.
 • 50 மாவட்டங்களுடன், ராஜஸ்தான் இப்போது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றைத் தொடர்ந்து நாட்டிலேயே மூன்றாவது அதிக மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில், மாநிலம் ஏழாவது இடத்தில் உள்ளது. புதிதாக 19 மாவட்டங்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

நேபாள துணை ஜனாதிபதியாக ராம் சகாய பிரசாத் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 • மாதேஸ் பகுதியைச் சேர்ந்த ராம் சகாய பிரசாத் யாதவ் நேபாளத்தின் மூன்றாவது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சமாஜ்பாடி கட்சியை சேர்ந்தவர்.
 • இந்த தேர்தலில் ராம் சகாய பிரசாத் யாதவிற்கு 184 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 329 மாகாண சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மொத்தம் 30,328 வாக்குகள் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

விளையாட்டு செய்திகள்

ஹாக்கி விருதுகள்: 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை

 • ஹாக்கி இந்தியா விருதுகள் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை ஹர்திக் சிங் மற்றும் சிறந்த வீராங்கனை விருதை சவிதா புனியா வென்றனர். இவர்கள் இருவர் உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
 • ஆசிய கோப்பை போட்டியில் சிறந்த கோல் அடித்த தமிழக வீரர் கார்த்திக் செல்வத்திற்கும் பரிசு வழங்கப்பட்டது.ஒடிசாவில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக ஹர்திக் சிங்க்கும்,சவிதா தலைமையிலான இந்திய அணி நேஷனல் கோப்பை போட்டியை வென்ற புரோ லீக் தகுதி பெற்றதற்காகவும் விருது பெற்றன.

முக்கிய தினம்

உலக தூக்க தினம்

 • தூக்கத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி உலக தூக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. சரியாக தூங்காமல் இருப்பதால் பல விதமான குறைபாடுகளை ஏற்படும். தூங்குவது உடல் ஆரோக்கியமாக முக்கிய தேவை.
 • உலக தூக்க தினம் 2023 கருப்பொருள் :’Sleep is Essential for Health’

Download PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!