நடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 18 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2023

தேசிய செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்கான திட்டம்

 • 2021முதல் 22 மற்றும் 2025முதல் 26 வரையிலான 15வது நிதிக் கமிஷன் காலத்தில் MWCD இன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து  திட்டமான “சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0” அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைகின்றனர். இதனை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி ஜூபின் இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்தார்.

தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள்

 • பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
 • இந்த மெகா ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறையை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஜவுளித்துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும் எனவும் கூறினார்.

 

சர்வதேச செய்திகள்

தெற்காசியாவின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதை டெல்லி விமான நிலையம் பெற்றுள்ளது

 • டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. IGIA வின் இயக்க ஏஜென்சி டெல்லி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் (DIAL) இதனை தெரிவித்துள்ளது.
 • இந்த விமான நிலையத்திற்கு 4 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வருகைகள், இடமாற்றங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து காரணிகளை பொறுத்து DIAL இதனை தேர்வு செய்யதுள்ளது.

2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

 • 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த இடங்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. புளோரிடாவின் தம்பா, ஓரிகானின் வில்லமேட் பள்ளத்தாக்கு, புவேர்ட்டோ ரிக்கோவின் ரியோ கிராண்டே, அரிசோனாவின் டக்சன், கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசிய பூங்கா, மொன்டானாவின் போஸ்மேன், வாஷிங்டன் டிசி, பிரான்ஸ், வான்கூவர், வான்கூவரில் உள்ள மானிடோபா சர்ச் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 • இந்தப் பட்டியலில் இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச்யும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மாநில செய்திகள்

மேகாலயாவில் முதல் முறையாக மின்சார ரயில்கள் இயக்கம்

 • வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ரயில் நிலையம் மெண்டிபதர் ஆகும், இது பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு 2014 முதல் இயங்கி வருகிறது. மின்சார இன்ஜின் மூலம் இழுத்துச் செல்லப்படும் ரயில்கள் இப்போது மேகாலயாவின் மெண்டிபதரில் இருந்து நேரடியாக இயக்க முடியும்.
 • இது ரயிலின் சராசரி வேகத்தை அதிகரிக்கும். பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரயில்கள் வேகத்துடன் இயங்க உதவுகிறது.மேலும் எரிபொருளில் இருந்து மின்சாரத்திற்கு மாறுவதால் சுற்றுசூழலில் ஏற்படும் மாசுபாடு குறைகிறது.

 

நியமனங்கள்

டி.சி.எஸ்.(TCS) சி.இ.ஓ (CEO)வாக கே.கீா்த்திவாசன் நியமனம்

 • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சாவீஸ் நிறுவனத்தின் (TCS) நிர்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) கே. கீா்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • தற்போது கே. கிருதிவாசன் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) வணிக பிரிவின் உலகளாவிய தலைவராக உள்ளார்.இவர்  நிறுவனத்தில் சுமார் 34 ஆண்டுகள்  பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

தஜிகிஸ்தானின் ஐநா ஒருங்கிணைப்பாளராக பார்வதி நியமனம்

 • ஐநா பொது செயலாளர் கட்டாரஸால் இந்தியாவை சேர்ந்த கவில்மடம் ராமசாமி பார்வதி தஜிகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இவர் முன்னதாக ஐ.நா. உலக உணவு திட்டத்தில் துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முக்கிய பங்கு வகித்தார்.

 

விருதுகள்

ரிசர்வ் வங்கியின் சக்திகாந்த தாஸ் ‘ஆண்டின் ஆளுநர்’ விருதைப் பெற்றார்

 • சர்வதேச வெளியீடான மத்திய வங்கி 2023-ம் ஆண்டிற்கான ‘ஆண்டின் ஆளுநர்’ விருதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பெற்றிருப்பது நாட்டிற்கு பெருமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 • இந்த விருது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போரின் போது முடங்கி இருந்த காலகட்டங்களில் நிதிச் சந்தைகளை வழிநடத்தியதற்காக திரு தாஸை பெருமைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டது.

 

விளையாட்டு செய்திகள்

தேசிய வில்வித்தை போட்டி தமிழக அணிக்கு வெள்ளி பதக்கம்

 • குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியா நகரில் 42-வது தேசிய சீனியர் வில்வித்தை போட்டி நடந்து வருகிறது. தேசிய ரீகர்வ் பிரிவில் காமனா ஜெயின், ஐஸ்வர்யா, சினேகவர்ஷினி, ஹனான் ஆகியோர் அடங்கிய தமிழக அணி அரைஇறுதியில் 6-0 என்ற கணக்கில் வலிமையான ஆட்டத்தை அளித்தது.
 • இதனை தொடர்ந்து தமிழக அணி வெள்ளி பதக்கத்தை வென்றது. தேசிய ரீகர்வ் பிரிவில் தமிழக பெண்கள் அணி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை’என தமிழ்நாடு வில்வித்தை சங்க செயலாளர் ஷிஹான் ஹூசைனி தெரிவித்தார்.

 

முக்கிய தினம்

உலகளாவிய மறுசுழற்சி தினம்

 • உலகளாவிய மறுசுழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று கொண்டாடப்படுகிறது, மறுசுழற்சி செய்வதன் மூலம் சில பொருட்களை பல முறை மீண்டும் பயன்படுத்த முடிகிறது.
 • செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், தானியப் பெட்டிகள் மற்றும் பால் அட்டைப்பெட்டிகள் ஆகியவை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களில் சில. மறுசுழற்சி சுற்றுச்சூழலுக்கு சிறந்தது.

Download PDF

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!