நடப்பு நிகழ்வுகள் – 17 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 17 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 17 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 17 மார்ச் 2023

தேசிய செய்திகள்

நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக RBI மற்றும் UAE மத்திய வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

 • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மத்திய வங்கி ஆகியவை நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமையை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 • இதன் படி, இரு மத்திய வங்கிகளும் டிஜிட்டல் நாணயங்களை ஆராய்வதற்காகவும் , CBUAE மற்றும் RBI ஆகியவற்றின் CBDC களுக்கு இடையே இயங்கும் தன்மையை ஆராய்வதற்காகவும் இணைந்து செயல்பட உள்ளது.

PLI திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  எஃகு அமைச்சகம் கையெழுத்திட உள்ளது.

 • எஃகு அமைச்சகம், சிறப்பு எஃகுக்கான PLI திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட புது தில்லி உள்ள விஞ்ஞான் பவனில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
 • இந்த நிகழ்வின் போது 20 துணை பிரிவுகளை உள்ளடக்கிய 27 நிறுவனங்களிடமிருந்து 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.

 

சர்வதேச செய்திகள்

உலகின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் முன்னணியில் சிங்கப்பூர்

 • உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் ஷாங்கி விமானநிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது.
 • இதனை அடுத்து தோஹா விமானநிலையம், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையம், சியோலின் இங்கியோன் விமான நிலையம், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமானநிலையம் போன்றவை இடம் பெற்றுள்ளன.

கடல் டிராகன் 23 பயிற்சி

 • அமெரிக்க கடற்படை நடத்தும், கடல் டிராகன் 23 என்ற கூட்டுப் பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய கடற்படையின் விமானம் அமெரிக்காவின் குவாம் நகரை சென்றடைந்தது. எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான இந்தத் தொலைதூர பயிற்சி மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
 • இந்தப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் P8I, P8A பிரிவு விமானங்கள் பங்கேற்கும் அமெரிக்கா, ஜப்பான், கனடா, கொரியா ஆகிய நாடுகள் இந்தக் கூட்டுப்  பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன.

 

மாநில செய்திகள்

கோவா முதல்வர் செயற்கை நுண்ணறிவு போக்குவரத்து நிர்வாகத்தை தொடங்கிவைத்தார்.

 • கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், வடக்கு கோவாவின் மெர்சஸ் மாநிலத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பைத் தொடங்கிவைத்தார்.
 • இந்த புதிய அமைப்பின் நோக்கம், போக்குவரத்து இயக்கத்தை கண்காணித்து, அதற்கேற்ப சிக்னல்கள் வழியாக போக்குவரத்தை அனுமதிக்கும். இது ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப வழியை தர இயலும்.

 

நியமனங்கள்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகிறார் எரிக் கார்செட்டி

 • இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.இவரை 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார்.
 • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரான எரிக் கார்செட்டி அமெரிக்காவின் 100 ஆண்டு கால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விமானப்படையின் உதவி செயலாளராக பதவியேற்ற ரவி சவுத்ரி.

 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை அமெரிக்க விமானப்படையின் உதவி செயலாளராக அமெரிக்க செனட் நியமித்துள்ளது.
 • ரவி சௌத்ரி வணிக விண்வெளி போக்குவரத்து பணிகளின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்குரிய பொறுப்பில் பணியாற்றியுள்ளார். இவர் விமானப்படையின் உதவி செயலாளராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார்.

 

விருதுகள்

எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது

 • 2022 ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
 • இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதை கே.கே.பிர்லா அறக்கட்டளை 1991-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

 

விளையாட்டு செய்திகள்

உலக மகளிர் குத்துச்சண்டை டெல்லியில் தொடக்கம்

 • பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த 324 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள்.
 • நீது கங்காஸ், நிகாத் ஜரீன் , சாக்ஷி சவுத்ரி, பிரீத்தி , மனீஷா மவுன் , ஜாஸ்மின் லம்போரியா , சாஷி சோப்ரா, மஞ்சு பம்போரியா , சனமாசா சானு , லவ்லினா , சவீதி பூரா , நுபுர் ஷியோரன்  ஆகிய இந்திய வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கடந்த முறை இந்தியா 1 தங்கம் உள்பட 3 பதக்கம் பெற்று இருந்தது.

 

முக்கிய தினம்

பூல்டே திருவிழா

 • இது உத்தரகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று.
 • குழந்தைகள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதால் பூல்டே நிகழ்வு லோக் பால் பர்வ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14 அல்லது 15 ஆம் தேதி அதாவது சைத்ரா மாதத்தின் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது.

Download PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!