தினசரி நாட்டுநடப்பு அக்டோபர் 14th 2022 in Tamil – Daily Current Affairs October 14th in tamil

0
CURRENT AFFAIRS – 15TH OCTOBER 2022
CURRENT AFFAIRS – 15TH OCTOBER 2022

CURRENT AFFAIRS – 15TH OCTOBER 2022

தேசிய செய்திகள்

வந்தே பாரத் சரக்கு ரயில் விரைவில் அறிமுகம்

 • பயணிகளுக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டு இருப்பதை அடுத்து சரக்குகளையும் அதிவேகத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் “செமி-ஹைஸ்பீடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” ரயில்போக்குவரத்தை ரயில்வே அமைச்சகம் தொடங்க திட்டமிட்டுள்ளது .
 • வந்தே பாரத் சரக்கு ரயில் முதல் கட்டமாக டெல்லி-என்சிஆர் இடையேயும், மும்பை இடையேயும் இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

LEADS – சரக்கு கையாளுகை குறியீடு தரவரிசை 2022

 • LEADS (Logistics Ease Across Different States) 2022 சமீபத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது, இந்தியா முழுவதும் தளவாட செயல்திறனை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
 • LEADS மூன்று அளவீடுகளில் மதிப்பீடுகிறது – சாதனையாளர்கள் (90% அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்), ஃபாஸ்ட் மூவர்ஸ் (80 முதல் 90% வரை), மற்றும் ஆர்வலர்கள் (80 %-ம் குறைவானவர்கள்).
சாதனையாளர்கள் ஆந்திரா, அசாம், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்.
ஃபாஸ்ட் மூவர்ஸ் கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, சிக்கிம் மற்றும் திரிபுரா.
ஆர்வலர்கள் பீகார், சத்தீஸ்கர், கோவா, மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, லடாக், நாகாலாந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம்.

PowerEX-2022

 • Cyber Security Exercise “PowerEX” ஆனது CERT-In மற்றும் Power-CSIRT-கள்  இணைந்து வடிவமைத்து மின்துறைப் பயன்பாடுகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இணைய அச்சுறுத்தல்களைக் கற்றுக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் மற்றும் பதிலளிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது .
 • சைபர் செக்யூரிட்டி பயிற்சியின் நோக்கம் “IT மற்றும் OT சிஸ்டங்களில் சைபர் சம்பவத்தை அங்கீகரிப்பது, பகுப்பாய்வு செய்வது மற்றும் பதிலளிப்பது” ஆகும்.
 • பயிற்சியின் கருப்பொருள்: “IT மற்றும் OT உள்கட்டமைப்பில் சைபர் தூண்டப்பட்ட இடையூறுகளைப் பாதுகாத்தல்” ஆகும்.
   • CERT – Indian Computer Emergency Response Team
   • CSIRT-Computer Security Incident Response Teams in Power sector

INS அரிஹந்த் SLBM-ஐ வெற்றிகரமாக ஏவியது

 • ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலில் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை (SLBM) அக்டோபர் 14, 2022 அன்று வெற்றிகரமாக ஏவியது.
 • ஏவுகணை முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்பில் சோதிக்கப்பட்டது மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள இலக்கு பகுதியை மிக அதிக துல்லியத்துடன் தாக்கியது.
 • INS அரிஹந்த் (SSBN 80) என்பது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
 • அரிஹந்த் 26 ஜூலை 2009 அன்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் விஜய் திவாஸ் (கார்கில் போர் வெற்றி நாள்) அன்று தொடங்கப்பட்டது.
 • SLBM-Submarine-launched ballistic missile

75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை அக்டோபர் 16-ந் தேதி பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

 • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையின் ஒரு பகுதியாக, நமது நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் இந்தியாவின் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை அமைப்பதாக அறிவித்தார்.
 • பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்களை (DBUs) நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார், இது நாட்டில் நிதி உள்ளடக்கத்தை ஆழமாக்குகிறது.

7-வது இந்தியா-பிரேசில் –தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சியில் ஐஎன்எஸ் தற்காஷ் பங்கேற்றது

 • 7-வது இந்தியா-பிரேசில் –தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சி தென்னாப்பிரிக்காவின் எலிசபெத் துறைமுகத்தில் 2022-அக்டோபர் 10 முதல் 12 வரை நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் தற்காஷ், சேட்டக் ஹெலிகாப்படர் மற்றும் மார்கோஸ் சிறப்பு படைகள் இந்திய கப்பற்படை சார்பில் பங்கேற்றன.
 • கடல்சார் உறவுகளை வலுப்படுத்துதல், கூட்டு ராணுவ பயிற்சியை மேம்படுத்துதல், கடல்சார் குற்றங்களை முறியடித்தல், கடல் வழியான தொடர்புகளை பாதுகாத்தல் உள்ளிட்டவை இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

 

சர்வதேச செய்திகள்

புனே-சிங்கப்பூர் இடையே 4 வாராந்திர விமானங்களை இயக்க விஸ்தாரா நேரடி விமான சேவைகளை அறிவித்துள்ளது

 • புனே மற்றும் சிங்கப்பூர் இடையே ஒரு புதிய வழித்தடத்தை டிசம்பர் 2, 2022 முதல் தொடங்குவதாக விஸ்தாரா அறிவித்துள்ளது.
 • விஸ்தாரா என்பது புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு இந்திய விமான நிறுவனம் ஆகும். விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது முதல் விமானத்தை ஜனவரி 9, 2015 அன்று புது தில்லியிலிருந்து மும்பைக்கு இயக்கியது.

 

மாநில செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது

 • இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சென்னை அண்ணாநகரில் சித்த வைத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது,இதற்காக முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
 • மேலும் தமிழகத்தில் 100 சித்த வைத்திய ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும் மற்றும் பழனியில் சித்த மருத்துவக் கல்லூரிக்கு 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

பெங்களூரில் சாலை போக்குவரத்து குறியீடுகள்  இதய வடிவமாக மாற்றப்பட்டுளள்து

 • உலக இதய தினத்தை முன்னிட்டு மணிப்பால் மருத்துவமனை பெங்களூர் மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறை இணைந்து இதய நலனை கருத்தில் கொண்டு சாலை சிக்னலில் சிவப்பு விளக்குகளுக்கு பதிலாக இதய வடிவிலான சிவப்பு விளக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • பெங்களூரில் முக்கிய நகரங்களில், 15 சிக்னலில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது மேலும் இதய நலன் குறித்த விழிப்புணர்வு செய்திகள் ஒலிபெருக்கி வாயிலாக பகிரப்படுகிறது

5-வது  வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம்

 • அதிநவீன வசதிகளுடன் கூடிய நாட்டின் 5வது வந்தே பாரத் ரெயில் , நவம்பர் 10 முதல், சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சென்னையிலிருந்து பெங்களுரு வழியாக மைசூர் சென்றடைகிறது. நாட்டின் 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இருந்து பயணிகள் ரயிலை ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • சில்சாரில் உள்ள மொய்னார்பாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ரெயில் பெட்ரோலிய சேமிப்புக் கிடங்கை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார், மேலும் சில்ச்சாரை பதர்பூரிலிருந்து கோஹ்பூரிலிருந்து அசாமின் ஹோலாங் வரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் இரண்டு பிரிவுகளையும் அவர் திறந்து வைத்தார்.
 • ஸ்ரீமதி.முர்மு மேகாலயா மற்றும் நாகாலாந்தை இணைக்கும் பயணிகள் ரயிலையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில் நாகாலாந்தில் உள்ள ஷோகுவிக்கு இடையே இருந்து கவுகாத்தி வழியாக மேகாலயாவில் உள்ள மெண்டிபதர் வரை இயக்கப்படும்.

சென்னையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு

 • சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
 • இந்நிலையில், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.


 

நியமனங்கள்

புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி  IPU-குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

 • புவனேஸ்வரைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அபராஜிதா சாரங்கி, இடை-நாடாளுமன்ற ஒன்றியத்தின் (IPU) செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற பதவிக்கான தேர்தலில் ஒடிசாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொத்தமுள்ள 18 வாக்குகளில் 12 வாக்குகளைப் பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • IPU- Inter-Parliamentary Union

 

விளையாட்டு செய்திகள்

மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டம்

 • 2023 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5 அணிகள் பங்கேற்கும் மகளிருக்கான ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
 • அணிக்கு தலா 18 வீராங்கனைகளும், அதில் 6 பேர் வெளிநாட்டு வீராங்கனைகளும் இருக்கலாம் என கூறப்படுகிறது,மேலும் அணியின் பெயர்கள்  தெற்கு, வடக்கு என பிராந்திய அடிப்படையில் உருவாக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது .

தேசிய செஸ் போட்டி

 • 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஓபன் மற்றும் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடந்தது.
 • இதில் தமிழக வீராங்கனை, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் ஷர்வானிகா 11 சுற்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ISSF உலக சாம்பியன்ஷிப்

 • எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ISSF உலக சாம்பியன்ஷிப், பெண்களுக்கான 25மீ பிஸ்டல் டீம் ஜூனியர் போட்டியில் சீனா தங்கமும், கொரியா வெள்ளிப்பதக்கமும் வென்றன.
 • இந்திய வீரர்கள் ஈஷா சிங், நாம்யா கபூர், மற்றும் விபூதி பாட்டியா ஆகியோர் ஜெர்மனியை வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
   • ISSF – International Shooting Sport Federation

 

முக்கிய நாள்

உலக மாணவர் தினம்

 • உலக மாணவர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 • இந்த நாள் முன்னாள் இந்திய ஜனாதிபதி அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் பிறந்தநாளை நினைவுகூருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!