நடப்பு நிகழ்வுகள் – 15 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 15 மார்ச் 2023 
நடப்பு நிகழ்வுகள் - 15 மார்ச் 2023 

நடப்பு நிகழ்வுகள் – 15 மார்ச் 2023 

தேசிய செய்திகள்

BIS ஆனதுதரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல்திட்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது

  • இந்திய தேசிய தர நிர்ணய நிறுவனம் (பிஎஸ்ஐ) மாணவர்கள் தரநிலைகள் மூலம் அறிவியலைக் கற்க உதவும் வகையில் ‘தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மாணவர்களின் அறிவியல் கருத்துக்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட படிப்புகளின் மீது இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.

 “பகிரப்பட்ட புத்த பாரம்பரியம் – சர்வதேச மாநாடு 2023

  • “பகிரப்பட்ட புத்த பாரம்பரியம்” குறித்த இரண்டு நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) சர்வதேச மாநாடு புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று தொடங்கியது.
  • இந்த சர்வதேச மாநாட்டின் நோக்கம்: SCO நாடுகளின் அருங்காட்சியகங்களின் சேகரிப்புகளில் பௌத்த கலை பாணிகள், தொல்பொருள் தளங்கள் மற்றும் மத்திய ஆசியாவின் பண்டைய கலாச்சாரங்கள் ஆகியவற்றுக்கு இடையே பொதுவான இணைப்புகளை நிறுவுவதாகும்.

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண்

  • ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
  • 1989-ம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார் சுரேகா. 34 ஆண்டுகளாக ரயிலை இயக்கி வருகிறார்.தற்போது, மும்பை-புனே-சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க உள்ளார் சுரேகா.

 

புத்தக வெளியீடு

கரிசல் வட்டார அகராதியாக விளங்கும் கி.ரா.வின் இலக்கியம்

  • கி.ராஜநாராயணின் நூல்கள் கரிசல் வட்டார அகராதியாக விளங்குகிறது என முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
  • எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வெங்கையா நாயுடு பங்கேற்று ‘கி.ரா. நூறு’ என்ற கட்டுரை தொகுப்பை வெளியிட்டார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

ஒடிசாவில் 13 ஆம் நூற்றாண்டு கோயில் கண்டுபிடிப்பு

  • ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படச்சனா பகுதியில் கோயிலின் இடிபாடுகள் கிடந்த இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
  • அங்கு 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலின் அடிப்பகுதி உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைவில் கோயில் கலசமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதாரச் செய்திகள்

ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில்  இந்தியா

  • உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது .
  • 2018- 22 ஆயுத இறக்குமதி  நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும் சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருந்தது.

 

விருதுகள் 

95-வது ஆஸ்கர் விருது

  • சிறந்த நடிகை பிரிவில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக மிஷெல் யோஹ் (Michelle Yeoh) ஆஸ்கர் விருது வென்றார். இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் ஆசிய பெண்மணி என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள்:

  • “நாட்டு நாட்டு” பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கார் விருது பெற்றனர்.
  • “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணக் குறும்படத்திற்காக தமிழக இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆஸ்கார் விருது பெற்றனர்.

 

விளையாட்டு செய்திகள்

FIH புரோ லீக் ஹாக்கி

  • புரோ லீக் ஹாக்கி 4வது சீசனில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த போட்டியில் இந்தியா ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி அணியை இரண்டாவது முறை வீழ்த்தியது.
  • இந்திய அணி 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த கார்த்தி இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு புரோ லீக் ஹாக்கி சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தியா.

 

முக்கிய தினம்

உலக நுகர்வோர் உரிமை தினம்-2023

  • ஒவ்வொரு வருடமும், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள் “சுத்தமான ஆற்றல் மாற்றங்களின் மூலம் நுகர்வோரை மேம்படுத்துதல்”என்பதாகும்.

உலக  π  தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14-ம் தேதி, உலக π தினமாகக் கொண்டாடப்படுகிறது.கணிதத்தில் மிக முக்கியமான எண்ணான π அதன் மதிப்பு தோராயமாக14 என வருவது (அமெரிக்க முறையில் தேதியை குறிப்பிடும்போது) மார்ச் 14 என்ற தேதியைக் குறிக்கிறது. 

Download PDF

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!