நடப்பு நிகழ்வுகள் – 15 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 15 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 15 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 15 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

தேசிய பயிலரங்கம்

 • கிராம பஞ்சாயத்துகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர் மயமாக்கல் குறித்த மூன்று நாள் தேசிய பயிலரங்கம் 2022 ம் ஆண்டு நவம்பர் 14 முதல் 16 வரை கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள CIAL மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தின் கருப்பொருள்- “வறுமை இல்லாத மற்றும் மேம்பட்ட  வாழ்வாதார கிராம பஞ்சாயத்துகள்” என்பதாகும்.
 • இந்த பயிலரங்கம் (1)விளிம்புநிலையாக்கம், (2)வாழ்வாதாரம், (3)பேரிடர்கள் மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகளுக்கு எதிராக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பின்னடைவைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் தேசிய அளவிலான முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநில மொழிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மத்திய அரசின்  புதிய திட்டம்

 • வாகனம் மற்றும் உரிமம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள பரிவாகன், சாரதி போன்ற இணையதளங்களை மத்திய அரசு தொடங்கியது,இந்த இணையதளம் மூலம் சேவைகள் இந்தி, ஆங்கில மொழியில் அமைந்துள்ளது.
 • இந்நிலையில் தற்போது அவரவர் மாநிலமொழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய முயற்சியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

UTSONMOBILE செயலி

 • UTSONMOBILE செயலியில் இருந்து ரயில்வே முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் களை முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது, புறநகர் அல்லாத பிரிவுகளில் உள்ள பயணிகள் 5 கிமீ முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. புறநகர்ப் பிரிவைப் பொறுத்தவரை, UTSONMOBILE செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தூரக் கட்டுப்பாட்டை 2 கி.மீ. வரை விதிக்கப்பட்டுள்ளது.
 • தற்போது ரயில்வே அமைச்சகம் UTSONMOBILE செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை 20 கிமீ தொலைவில் இருந்து புறநகர் அல்லாத பிரிவுகளுக்கு முன்பதிவு செய்யும் வசதியை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், புறநகர் பகுதிகளில், தூரம் 5 கி.மீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

சர்வதேச செய்திகள்

சர்வதேச வர்த்தக கண்காட்சி

 • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 41வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்,இக்கண்காட்சியில்  நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 27,2022 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 • இந்த ஆண்டு வர்த்தக கண்காட்சியின் கருப்பொருள் Vocal for Local, Local to Global. இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 12 வெளிநாடுகள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

 

மாநில செய்திகள்

BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் வாகனங்களுக்கான தடையை டெல்லி அரசு நீக்கியுள்ளது

 • டெல்லி அரசாங்கம் BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்கள் மீதான தடையை நவம்பர் 14, 2022 முதல் நீக்கியது.
 • தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ் காற்று மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசாங்கம் BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் வாகனங்களின் தடை விதித்திருந்த நிலையில் தற்போது இந்த சட்டத்தை நீக்கியுள்ளது.

ஓட்டுநர் இல்லாத ரயில்கள்அறிமுகம் செய்ய திட்டம்

 • பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் 5-வது வழித்தடத்தில் இயக்குவதற்காக, 3 பெட்டிகளைக் கொண்ட 26 ஓட்டுநர் இல்லாத ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • இந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் 100சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். இந்த ரயில் பெட்டிகள் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகிறது.

 

நியமனங்கள்

அமெரிக்க நீதிபதியாக இந்திய வம்ச வழியை  சேர்ந்தவர் மீண்டும் தேர்வு

 • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் பெண்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கே.பி.ஜார்ஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • கேரளத்தை பூர்விகமாக கொண்ட அவர் ஃபோர்ட் பெண்ட் பகுதிக்கான நீதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்   

 • இந்தியக் குடியரசுத் தலைவர் ஸ்ரீ கௌரவ் த்விவேதி, நிர்வாக உறுப்பினராக (தலைமைச் செயல் அதிகாரி)  நியமித்துள்ளார், அவர் பொறுப்பேற்றதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பணிபுரிவார்.
 • ஸ்ரீ த்விவேதி, சத்தீஸ்கரைச் சேர்ந்த 1995 ஆம் ஆண்டின் இந்திய நிர்வாக சேவையின் அதிகாரி ஆவார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

பூமிக்கு திரும்பிய ஆளில்லா விண்வெளி விமானம்

 • அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி விமானம் எக்ஸ்-37பி 6-வது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டு ஏறக்குறைய 908 நாட்கள் பயணம் முடிந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பி சாதனை படைத்து உள்ளது.
 • போயிங் நிறுவனம் தயாரிப்பில் உருவான எக்ஸ்-37பி இதற்கு முன்பு சுற்று வட்டப்பாதையில் 780 நாட்கள் பயணித்து இருந்தது. தனது முந்தின சாதனையை முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

சீனாவின் சரக்கு விண்கலம் விண்ணில் செலுத்தபட்டது

 • விண்வெளியில் சீனா தனக்கென தனி ஒரு விண்வெளி மையத்தை அமைக்கவுள்ளது சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இந்த விண்கலத்தை ஏந்தி, ‘லாங் மார்ச் ௭- ஒய் 6’ என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
 • இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில், சீன விண்வெளி ஆய்வு அமைப்பு 2022-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என சீனா தகவல் தெரிவித்துள்ளது.

 

விருதுகள்

பிரிட்டனின்ஆா்டா் ஆஃப் மெரிட்விருது

 • தமிழ்நாட்டில் பிறந்த பேராசிரியா் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டனின் ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ என்ற உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 • கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவா் ‘உடலில் உள்ள செல்களில் இருக்கும் ரைபோசோம் அமைப்புகள்’ குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசை கடந்த 2009-ஆம் ஆண்டு பெற்றார், அமெரிக்காவிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் குழுத் தலைவராக பதவி வகிக்கிறார்.

காந்தி அமைதி யாத்திரை விருது 2022

 • ‘காந்தி அமைதி யாத்திரை விருது 2022’ (Gandhi Peace Pilgrimage award) வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • அமெரிக்காவில் செயல்பட்டுவரும் காந்தி தொண்டு நிறுவனத்தின் (Gandhi Foundation of the USA)  மூலம், அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘காந்தி அமைதி யாத்திரை விருது’வழங்கப்பட்டது.

கூகுள் டூடுல் இந்தியா 2022

 • ஆண்டுதோறும் இந்த கூகுள் டூடுல் போட்டி இளம் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் சிறுவர்களின் கற்பனை சக்தியை ஊக்குவிக்கவும் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் விருது கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்லோக் முகர்ஜி வென்றுள்ளார். அவரது டூடுல் கூகுள் பக்கத்தில் நவம்பர் 14,2022 அன்று வெளியாகியுள்ளது.
 • தனது டூடுல் குறித்து ஸ்லோக் முகர்ஜி அடுத்து 25 ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய விஞ்ஞானிகள் இருப்பார்கள். மனிதர்களின் மேம்பாட்டிற்காக சூழல் நட்பு ரோபோக்களை அவர்கள் உருவாக்குவார்கள். இந்தியாவில் பூமிக்கும் விண்ணுக்கும் போக்குவரத்து நடக்கும். இந்தியாவில் யோகாவும், ஆயுர்வேதமும் முக்கியத்துவம் பெறும் என்று கூறியிருந்தார்.அதற்கு ” அரங்கின் நடுவில் இந்தியா“என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

புத்தக வெளியீடு

நிருத்ய கதா புத்தகம் வெளியீடு

 • “நிருத்ய கதா: குழந்தைகளுக்கான இந்திய நடனக் கதைகள்”, மால்டோவாவைச் சேர்ந்த இல்லஸ்ட்ரேட்டர் நடாலியா சுருபாவால் விளக்கப்பட்டது,இது பரதநாட்டியம், குச்சிப்புடி, மணிப்பூரி முதல் கதகளி, கதக், சாவ், மோகினியாட்டம் மற்றும் சத்திரியா வரையிலான பல்வேறு நடன வடிவங்களைக் கொண்ட ஒன்பது கதைகளின் தொகுப்பாகும். மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.
 • மேலும் இப்புத்தகத்தை ஒடிசி நடனக் கலைஞரும் எழுத்தாளருமான ஜெயா மேத்தா புதிய விளக்கப் புத்தகம்,இந்திய பாரம்பரிய நடனங்களின் வண்ணமயமான உலகத்தைப் பார்க்க குழந்தைகளுக்கு உதவுகிறது.

விளையாட்டு செய்திகள்

டி -20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2022

 • 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 2022 அக்டோபர் மாதம் 16-ந் தேதி முதல் நவம்பர் 13 -ம் தேதி வரை நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இறுதி சுற்றில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.
 • இப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது மேலும் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வது இரண்டாவது முறை ஆகும்.இறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சாம் கரனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய ஏர் துப்பாக்கி சாம்பியன்ஷிப் 2022

 • தென் கொரியாவின் டேகுவில் நடைபெற்ற ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர் .
 • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில், மேலும் பெண்கள் பிரிவில், ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது, இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

 

முக்கிய தினம்

ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினம் 

 • ஜார்கண்ட் இந்தியாவின் 28வது மாநிலமாக 15 நவம்பர் 2000 அன்று பீகார் மறுசீரமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்டது.
 • ஜார்கண்ட் ‘காடுகளின் நிலம்’ அல்லது ‘புதர் நிலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளது. தற்போது, ஜார்க்கண்ட் மாநிலம் வடக்கே பீகாருடனும், வடமேற்கில் உத்தரபிரதேசத்துடனும், மேற்கில் சத்தீஸ்கர், ஒடிசாவுடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!