CURRENT AFFAIRS – 14TH OCTOBER 2022

0
CURRENT AFFAIRS – 14TH OCTOBER 2022
CURRENT AFFAIRS – 14TH OCTOBER 2022

CURRENT AFFAIRS – 14TH OCTOBER 2022

சர்வதேச செய்திகள்

ஒரே நாடு ஒரே தலைவர் முறை மீண்டும் சீனாவில் அறிமுகம்

  • சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங் தான், 1976ல் அவர் இறக்கும் வரை அதிபராகவும், கட்சித் தலைவராகவும் மிக நீண்ட காலம் இருந்தார். அதனை தொடர்ந்து இரண்டு முறை ஐந்தாண்டுகள் பதவியைத் தொடர முடியும் என்ற நடைமுறை உள்ளது.
  • தற்போது சீனாவில், ஆட்சியில் உள்ள ஜிங்பிங் தன் வாழ் நாள் முழுவதும் பதவியை தொடர்வார் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில்  “ஒரு நாடு, ஒரு தலைவர்” என்ற பழைய முறையை  மீண்டும்  அமலாக உள்ளது.

நிலவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் உலகின் முதல் விண்வெளி சுற்றுலா பயணி

  • விண்வெளி சுற்றுலாவின் ஒரு பகுதியாக 2001-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன்முறையாக டென்னிஸ் டிட்டோ என்பவர் சொந்த செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
  • இதனை தொடர்ந்து 21 ஆண்டுகள் கழித்து நிலவிற்கு சுற்று பயணமாக டிட்டோவுடன் சேர்ந்து  அவரது மனைவி அகிகோ உள்பட மொத்தம் 10 பேர் பயணம் செய்கின்றனர்.
  • இந்த சுற்றுலா ஒப்பந்தம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தானது மற்றும் டிட்டோ நிலவுக்குச் செல்லும் மிக வயதான நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

அகில இந்திய பகல் நேர பள்ளிகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு

  • கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான “உலக கல்வி” இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியீட்டு வருகிறது.
  • அதன் அடிப்படையில் டெல்லியை சேர்ந்த அரசு பள்ளி ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க  இந்தியன் ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது

  • இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 46 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இந்திய ரெயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மேலும் அமைக்கப்படும் சார்ஜிங் பாயின்ட்களை பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.

 

4 வது வந்தே பாரத் திட்டம் அறிமுகம்

  • இமாசல பிரதேச மாநிலத்தில் 4-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கினார்.
  • இதற்கு முன்னதாக புதுடெல்லி – வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா மற்றும் காந்தி நகர் – மும்பை இடையே வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களளை தயாரிக்க ஐசிஎப் தொழிற்சாலை இலக்கை  நிர்ணயித்துள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் மருந்து பூங்கா மற்றும் நீர்மின் நிலையங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

  • ஹிமாசல பிரதேசம் உனலோ மருந்து பூங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த மருந்து பூங்கா 1,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த மருந்து பூங்கா அமைப்பதன் மூலம் அத்தியாவசிய மருந்துகளின் இறக்குமதி குறையும் வாய்ப்புள்ளது.
  • அதனை தொடர்ந்து ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்ட இரண்டு நீர்மின் நிலையங்களுக்கு சம்பாவில் அடிக்கல் நாட்டுகிறார்.

மின்சார வாகனங்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது

  • சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க ராணுவத்திலும் மின்சார வாகனங்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் 25% இலகுரக வாகனங்கள், 38% பேருந்துகள் மற்றும் 48% மோட்டார் சைக்கிள்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படும்.மேலும் மின்சார வாகனங்களுக்காக வாகன நிறுத்துமிடங்கள், குடியிருப்பு வளாகங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

அசாமில் உள்ள ஐஐடி வளாகத்தில் புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வசதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்

  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் கீழ் சூப்பர் கம்ப்யூட்டர் வசதி, ‘பரம் கம்ரூபா’-வை திறந்து வைத்தார்.
  • ஐஐடி கவுகாத்தியில் உயர் சக்தி நுண்ணலை உதிரிபாகங்களை வடிவமைத்து மேம்படுத்துவதற்கான ஆய்வகம் ஆகியவை திறந்து வைத்தார்.

கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) ராஜஸ்தானில் 1190 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க உள்ளது.

  • கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) இன்று ஜெய்ப்பூரில் 1190 மெகாவாட் சூரிய சக்தி திட்டத்தை உருவாக்க ராஜஸ்தான் வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் (RRVUNL) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இத்திட்டம் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கும் மற்றும் சுத்தமான மின்சாரத்தை வழங்குவதோடு, மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுதப்படை நிதிக்கு குடிமக்கள் பங்களிக்க இணையதளத்தை ராஜ்நாத் சிங் தொடங்குகிறார்

  • இந்தியர்கள் ஆயுதப்படை நிதிக்கு பங்களிப்பதற்காக மா பாரதி கே சபூட் இணையதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
  • அக்டோபர் 14 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு வளாகத்தில் நடைபெறும் விழாவில் ராணுவ வீரர்களின் போரில் உயிரிழந்தோர் நல நிதிக்காக (AFBCWF) ‘மா பாரதி கே சபூட்’ (MBKS) இணையதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
      • MBKS-Maa Bharati Ke Sapoot
      • AFBCWF-Armed Forces Battle Casualties Welfare Fund

 

மாநில செய்திகள்

டீசல்  மூலம் இயங்கும் புதிய நீராவி ரயில் எஞ்சின்

  • முதல் முறையாக உள்நாட்டிலேயே டீசல் மூலம் இயங்கும் நீராவி மலை ரயில் எஞ்ஜின் ரூபாய் 9.30 கோடி மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டது.
  • திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலைரயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் எஞ்ஜினை தயாரிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்து தன் சோதனை ஓட்டத்தை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலைப்பாதையில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழக அரசு திட்டம்

  • இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது.
  • அதன் படி வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஸ்வச் சர்வேக்ஷன் 2022: சுத்தமான நகர பட்டியலில் மதுரை 45வது இடத்தில் உள்ளது

  • இந்த மாத தொடக்கத்தில் இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவின் கீழ் நாட்டிலுள்ள 45 நகரங்களில் தூய்மையில் மதுரை மாநகராட்சி கடைசி இடத்தில் உள்ளது.இந்த பட்டியலில் இந்தூர் முதலிடத்தில் உள்ளது.

 

நியமனங்கள்

குவைத்துக்கான புதிய இந்திய தூதர் நியமனம்

  • வளைக்குடா நாடுகளில் ஒன்றான குவைத்துக்கு புதிய இந்திய தூதரக மூத்த அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா நியமிக்கப்பட்டுள்ளார்.ஆதர்ஷ் ஸ்வைகா இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார்.முன்னாள் இந்திய தூதரக சி.பி.ஜார்ஜ் பதவி வகித்தார்.

மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்திய பெண் நியமனம்

  • இனவெறி, சகிப்புத்தன்மை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவை  சேர்ந்த அஸ்வினி கே.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பேராசிரியரும், தலித் செயல்பாட்டாளருமான அஸ்வினி கே.பி. பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசி சரித்திரம் படைத்த முதல் மனித உருவ ரோபோ

  • Ai-Da என்பது பிரிட்டிஷ் கணிதவியலாளர் அடா லவ்லேஸின் பெயரிடப்பட்ட ஒரு மனித ரோபோ ஆகும், இது 2019 இல் ஐடன் மெல்லரால் உருவாக்கப்பட்டது.
  • ஐடன் மெல்லர் ‘உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் செயற்கை நுண்ணறிவு மனித உருவ ரோபோ கலைஞர் ஆவார்.

 

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

70 மில்லியன் ஆண்டுகள் பழமையான மம்மி டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டது

  • சமீபத்திய ஆய்வில் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டது, இது வடக்கு டகோட்டாவில் காணப்படும் பாதிக்கப்பட்ட தோலுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது மம்மியாக மாறியதற்கான காரணம், இது முதலைகள், மாமிச உண்ணிகள் மற்றும் பிற விலங்குகளால் ஓரளவு உண்ணப்பட்டது.
  • “டகோட்டா” மாதிரியானது 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தென்மேற்கு வடக்கு டகோட்டாவில் உள்ள மர்மார்த்துக்கு அருகில் உள்ள பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

விளையாட்டு செய்திகள்

36 வது தேசிய விளையாட்டு 2022

  • 36-வது தேசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 13 வரை நடைபெற்றது.
  • அதனை தொடர்ந்து பதக்கபட்டியலில் 128 பதக்கங்கள் உள்பட 61 தங்கம் வென்று பதக்கபட்டியலில் முதல் இடத்தை சர்விசஸ் அணி பிடித்துள்ளது. 39 தங்கம் உட்பட 140 பதக்கம் பெற்று 2 -ம் இடத்தை மராட்டியம் அணி பெற்றுள்ளது,தமிழகம் 25 தங்கம் உள்பட 74 பதக்கங்கள் பெற்று 5 -ம் இடத்தை பெற்றுள்ளது.
  • 5 தங்கம் உள்பட மொத்தம் 8 பதக்கம் வென்ற கேரளா நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் சிறந்த வீரராகவும், 6 தங்கம் வென்ற கர்நாடகா  14 வயதான ஹாஷிகா சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

முக்கிய தினங்கள்

உலக தரநிலை தினம் (World Standards Day)

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று கொண்டாடப்படும் உலக தரநிலைகள் தினம், தயாரிப்புகளின் உலகளாவிய தரப்படுத்தலின் அவசியம் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • 2022ம் ஆண்டிற்கான கருப்பொருள் :A Shared Vision for a Better World

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!