நடப்பு நிகழ்வுகள் – 14,15 & 16 ஜனவரி 2023 | 14,15 & 16th January 2023 Current Affairs!

0
நடப்பு நிகழ்வுகள் - 14 ஜனவரி 2023
நடப்பு நிகழ்வுகள் - 14 ஜனவரி 2023
நடப்பு நிகழ்வுகள் – 14,15 & 16 ஜனவரி 2023 | 14,15 & 16th January 2023 Current Affairs!

தேசிய செய்திகள்

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி பட்டியல் வெளியீடு

• மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து இயங்கும் ‘கேர் எட்ஜ்’ என்ற நிறுவனம், மாநில அளவில் சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஏழு காரணிகளை அடிப்படையாக வைத்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
• இதில், பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மஹாராஷ்டிரா அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் வகிக்கிறது,இரண்டாவது இடத்தில் குஜராத், மூன்றாவது இடத்தில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.
• இதேபோல் சிறிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் கோவாவும், அடுத்த இரு இடங்களில் முறையே சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம் இடம்பிடித்துள்ளன.

“பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயில்” இந்திய ரயில்வேயால் தொடங்கப்படவுள்ளது

• இந்திய இரயில்வே தனது பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயிலை “ஸ்ரீ ராம்-ஜானகி யாத்ரா: அயோத்தி முதல் ஜனக்பூர் வரை” இரண்டு மிக முக்கியமான புனித யாத்திரை தலங்களான அயோத்தி மற்றும் ஜனக்பூரை அண்டை நாடுகளான இந்தியா மற்றும் நேபாளத்தில் இருந்து இயக்க உள்ளது.
• இந்த சுற்றுலா ரயில் 17 பிப்ரவரி 2023 அன்று டெல்லியில் இருந்து தொடங்கபடவுள்ளது, மேலும் இந்த முயற்சி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்படவுள்ளது.

சர்வதேச செய்திகள்

நியூயார்க் டைம்ஸ் 2023-ல் செல்ல வேண்டிய இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது

  • நியூயார்க் டைம்ஸ் 2023 இல் பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, அந்த பட்டியலில் ஆசிய இடங்கள் வியட்நாம், ஜப்பான், பூட்டான் மற்றும் இந்தியா.
  • இந்தியாவில், கேரளா மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது, இங்கு புகழ்பெற்ற காயல் மற்றும் கடற்கரைகள் மற்றும் பல சுற்றுலா விருதுகளை வென்றுள்ளது.
  • கேரளா 2022 இல் மூன்று சர்வதேச சுற்றுலா விருதுகளை வென்றது, குளோபல் விஷன் விருது 2022 -ஐ வென்றுள்ளது.

மாநில செய்திகள்

வாரணாசியில் டென்ட் சிட்டியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

• பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் டென்ட் சிட்டியை திறந்து வைத்தார் மேலும் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு 2023 ஜனவரி 13 அன்று அடிக்கல் நாட்டினார்.
• புனித நகரத்தின் புகழ்பெற்ற தொடர்ச்சி மலைகளுக்கு எதிரே கங்கைக் கரையில் உருவாக்கப்பட்ட டென்ட் சிட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்கவும், அத்துடன் பாரம்பரிய இசை மற்றும் யோகா அமர்வுகள் போன்றவற்றையும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பலூன் திருவிழா

• தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
• தற்போது 2023-ம் ஆண்டு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் ஜனவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டது. மேலும் 3 நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்பட 8 நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

தமிழ்நாட்டில் முதல் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு திருநங்கை நியமனம்

• வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார்.
• தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர் ஆவார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது

• 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது,
• இதனை செயல்படுத்த்தும் வகையில் தமிழக சட்டசபையில் ஜனவரி, 13, 2023 அன்று தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசுப் பணிகளில் பணிபுரிய முடியும் என்னும் டி.என்.பி.எஸ்.சி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இந்த திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் கேமிங்கில் இந்தியாவின் முதல் சிறப்பு மையம் ஷில்லாங்கில் அமைக்கப்பட உள்ளது

• இந்தியாவின் மென்பொருள் தொழில் நுட்ப பூங்கா மூலம் டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட்அப் ஹப் மார்ச் 2023க்குள் ஷில்லாங்கில் ஆன்லைன் கேமிங்கில் சிறந்து விளங்கும் இந்தியாவின் முதல் மையம் அமைக்கபடவுள்ளது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மாநில அமைச்சர் ஸ்ரீ ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
• ஷில்லாங்கில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ், நெக்ஸ்ட் ஜெனரல் ஆன்லைன் கேமிங் சுற்றுச்சூழலை உருவாக்க முழு வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் எட்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்

• செகந்திராபாத்தை விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ஜனவரி 15, 2023 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
• இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும், இந்த ரயில், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு தெலுங்கு பேசும் மாநிலங்களை இணைக்கும் முதல் ரயில் ஆகும்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார்

• குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தராயணத்தின் போது கூர்மையான காத்தாடி கம்பிகளால் காயம்பட்ட பறவைகளைக் காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்ட கருணா அபியான் (இரக்கத்திற்கான பிரச்சாரம்) இன் ஒரு பகுதியாக, ஜனவரி 13, 2023 அன்று அகமதாபாத்தில் உள்ள தஸ்க்ரோயின் பிலாசியா கிராமத்தில் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை ஆன்லைனில் திறந்து வைத்தார்.
• இந்த புனர்வாழ்வு மையம் காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அவற்றின் மறுவாழ்வுக்கும் அனைத்து வகையான வசதிகளையும் வழங்குகிறது. மேலும் இந்த மையம் 2.72 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு 23,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பொருளாதார செய்திகள்

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக குறைந்தது

• 2022 டிசம்பர் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பரில் சில்லறை பணவீக்கம் ஓராண்டில் இல்லாத அளவிற்கு 5.72 சதவீதமாக குறைந்துள்ளது.
• நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) அடிப்படையிலான பணவீக்க விகிதம் நவம்பரில் 5.88% ஆகவும், அக்டோபர் 2022 இல் 6.77% ஆகவும் குறைந்துள்ளது. சில்லறை பணவீக்கத்தை 4% ஆக இருபுறமும் 2% வித்தியாசத்துடன் பராமரிக்க மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

நியமனங்கள்

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளராக சாந்தி குமாரி நியமனம்

• 1989 -பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சாந்தி குமாரி, தெலுங்கானாவின் முதல் பெண் தலைமைச் செயலாளராக ஆனார், மேலும் சாந்தி குமாரி முன்னதாக பதவி வகித்த சோமேஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் ஆறாவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் இவர் ஏப்ரல் 2025 வரை பதவி வகிப்பார்.
• சாந்தி குமாரி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர், அவர் பதவி உயர்வுக்கு முன் சிறப்பு தலைமைச் செயலாளராக (வனம்) இருந்தார். வறுமை ஒழிப்பு, உள்ளடக்கிய மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் வனவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் கொண்டவர்.

காக்னிசண்ட் நிறுவனத்தில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்

• காக்னிசென்ட் எனப்படும் முன்னணி MNC அமைப்பு, அதன் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக முன்னாள் இன்ஃபோசிஸ் தலைவர் ரவி குமாரை ஜனவரி 12, 2023 அன்று நியமிப்பதாக அறிவித்ததுள்ளது.
• முன்னதாக பணியாற்றிய தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸுக்கு பிறகு ரவிக்குமார் பதவியேற்க்கவுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் மாநில செனட்டராக இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா ரெட்டி பதவியேற்றுள்ளார்

• இந்திய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதியான உஷா ரெட்டி, அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் மாநில செனட்டராகப் பதவியேற்றுள்ளார்.
• 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்த மன்ஹாட்டன் செனட்டர் டாம் ஹாக்கிற்குப் பிறகு அவர் பதவியேற்றார். மேலும் இவர் 2013 முதல் மன்ஹாட்டன் நகர ஆணையத்தில் பணியாற்றிய ரெட்டி, ரிலே, ஜியரி மாவட்டங்களில் ஜனநாயகக் கட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்

• 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். மேலும் இந்த அரிதான வால் நட்சத்திரத்துக்கு, ‘சி/2022 ஈ3 (இஸட்.டி.எப்.,) என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ பெயரிட்டுள்ளது.
• இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதி மற்றும் பிப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் பூமிக்கு மிக அருகே தோன்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

இந்திய அமைதி காக்கும் வீரர்களுக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்

• அப்பர் நைல் பகுதியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தென் சூடானில் உள்ள UN மிஷன் (UNMISS) உடன் பணிபுரியும் 1,000க்கும் மேற்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் மதிப்புமிக்க ஐ.நா பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர், அங்கு இந்திய ராணுவத்தின் பெண் அதிகாரி மேஜர். ஜாஸ்மின் சத்தா, முதல் முறையாக அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்.
• விழாவில் அமைதிப்படை வீரர்களுக்கு UNMISS படைத் தளபதிகள் லெப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியன் பதக்கங்களை வழங்கினார். 1,171 துருப்புக்கள் ஐ.நா பதக்கங்களுடன் கௌரவிக்கப்பட்டனர், இவர்களில் ஐந்து பேர் பெண்கள் ஆவார்கள்.

முக்கிய தினம்

சர்வதேச காத்தாடி தினம்

• சர்வதேச காத்தாடி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அன்று மகர சங்கராந்தியின் போது தொடங்கி ஜனவரி 15 அன்று முடிவடைகிறது.
• சர்வதேச காத்தாடி தினம் இந்தியாவில் உருவானது, இது குஜராத்தின் வட மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரில் மிகவும் பிரபலமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியில், இந்த பண்டிகை உத்தராயண் என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!