CURRENT AFFAIRS – 13TH OCTOBER 2022

0
CURRENT AFFAIRS – 13TH OCTOBER 2022
CURRENT AFFAIRS – 13TH OCTOBER 2022

CURRENT AFFAIRS – 13TH OCTOBER 2022

தேசிய செய்திகள்

உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஓய் .சந்திர சூட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்

  • உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யுயு லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார் மேலும் அவரது பதவி காலம் நவம்பர் 8 ம் தேதி முடிவடைந்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டிஓய் சந்திரசூட் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
  • உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதிகாக வரும் நவ., 9ம் தேதி பதவியேற்க உள்ள சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி என்னும் சிறப்பை பெற உள்ளார்.

PMDevINE எனப்படும் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

  • PM-DevINE, 100% மத்திய நிதியுதவியுடன் கூடிய மத்தியத் துறை திட்டமாகும், மேலும் இது வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் (DoNER) செயல்படுத்தப்படும்.
  • PM-DevINE இன் நோக்கங்கள்:
  • பிரதமர் கதி சக்தியின் உணர்வில், உள்கட்டமைப்புக்கு ஒருங்கிணைந்த நிதி
  • NER-இன் உணரப்பட்ட தேவைகளின் அடிப்படையில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரித்தல்
  • இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை செயல்படுத்துதல்
  • பல்வேறு துறைகளில் உள்ள வளர்ச்சி இடைவெளிகளை நிரப்புவதே இதன் நோக்கமாகும்.
  • PMDevINE – PRIME MINISTER’S DEVELOPMENT INITIATIVE FOR NORTH EAST

 

சர்வதேச செய்திகள்

சீனர்கள் கண்டுபிடித்த “பறக்கும் கார்” துபாயில் இயக்கப்பட்டது

  • சீன எலக்ட்ரானிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங் இன்க் கட்டமைத்த “பறக்கும் கார்” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது முதல் விமானத்தை இயக்கியது, இந்த நிறுவனம் சர்வதேச சந்தைகளில் மின்சார விமானத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
  • X2 என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட மின்சார செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் தரையிறங்கும் (eVTOL) விமானமாகும், இது வாகனத்தின் ஒவ்வொரு மூலையிலும் இரண்டு ப்ரொப்பல்லர்களால் தூக்கப்படுகிறது.
      • eVTOL -electric vertical take-off and landing

உயர் கல்வி தரவரிசை பட்டியல் வெளியீடு

  • உலகளவில் உயர்கல்வி குறித்து, லண்டன் நாட்டைச் சேர்ந்த க்யூஎஸ் (QS World University Rankings – குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு  2023ம் ஆண்டுக்கான  தர வரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.மேலும் இந்தியாவில் பெங்களூர் ஐஐஎஸ்சி 155வது இடத்தையும், மும்பை ஐஐடி 172வது இடத்தையும், தில்லி ஐஐடி 174 வது இடத்தையும் பிடித்துள்ளன.
      • IISC – Indian Institute of Science
      • IIT- Indian Institute of Technology

சனியின் நிலவிற்கு டிரோன் காப்டரை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது

  • சனியின் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான டைட்டன் நிலவில் உயிர்கள் உள்ளதா என்பதை ஆராய புதிய டிரோன் காப்டரை டைட்டனுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
  • இந்த டிரோன் காப்டருக்கு டிராகன்ஃபிளை(Dragonfly) என்று நாசா பெயரிட்டுள்ளது.இந்த டிராகன்ஃபிளை டிரோன் காப்டர், 2026 ஆம் ஆண்டு டைட்டன் நிலவு நோக்கி விண்ணில் ஏவப்படுமென்றும் நாசா அறிவித்துள்ளது.

 விண்கல்லை வெற்றிகரமாக திசை திருப்பியது நாசா

  • பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் தூரத்தில் சுற்றித்திரியும், டிமார்பாஸ் என்ற விண்கல்லை திசைதிருப்ப டார்ட் விண்கலத்தை, செப்டம்பர் 26 அன்று, ராக்கெட் மூலம் நாசா விண்ணில் செலுத்தியது.
  • விண்கலம் வெற்றிகரமாக மோதிய நிலையில், விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டது.

 

மாநில செய்திகள்

குட்டி காவலர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

  • மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘குட்டி காவலர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
  • இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அறியவைப்பதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும்.

வியாபாரிகளுக்கு உதவும் ஸ்மார்ட் கால்குலேட்டர் கண்டுபிடிப்பு

  • மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டூஹேண்ட் என்ற நிறுவனம் வைஃபை மூலம் இயங்கும்,50 லட்சம் கணக்குகளை சேமித்து வைத்துக் கொள்ளும், 16 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட ஸ்மார்ட்  கால்குலேட்டரை தயாரித்துள்ளது.
  • வியாபாரிகள் உள்பட பலர் இந்த ஸ்மார்ட் கால்குலேட்டரை மிக எளிதில் பயன்படுத்தி கொள்ளலாம்.

 

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

 ஊத்தங்கரை அருகே நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஊத்தங்கரை பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னடபொறிப்புள்ள நடுகல் ஒன்றும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும்.

 

நியமனங்கள்

உயர் நீதி மன்ற நீதிபதிகள் நியமனம்

  • கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பிபி வரலே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பங்கஜ் மித்தல், இப்போது ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அலி முகமது மேக்ரே அந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பொருளாதார செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 % ஆக குறைந்துள்ளது 

  • 2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) இந்தியாவின் வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது, இப்போது சர்வதேச பணவீக்கம் காரணமாக 2022-23ல் 6.8 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
  • அமெரிக்கா இந்த ஆண்டு 1.6 சதவிகிதமும், சீனா 3.2 சதவிகிதம் மட்டுமே  வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

36-வது தேசிய விளையாட்டு போட்டி

  • டிரையத்லான் போட்டியில் ( நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் ஆகிய 3 பந்தயங்கள் அடங்கிய போட்டி) கலப்பு தொடர் பிரிவில் தமிழக அணி தங்கப்பதக்கத்தை வென்றது,குஜராத் வெள்ளிப்பதக்கமும், மணிப்பூர் வெண்கலப்பதக்கமும் பெற்றது.
  • பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் அணி 56 தங்கம் உள்பட 121 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
  • தமிழ்நாடு 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என்று மொத்தம் 73 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் வெளியீடு

  • சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார்.
  • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 6-வது இடம் பிடித்துள்ளார்.
  • இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

முக்கிய நாள்

சர்வதேச பேரழிவு அபாயக் குறைப்புக்கான தினம் 2022

  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, அக்டோபர் 13 ஆம் தேதியை பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினமாக (IDDRR) நியமித்துள்ளது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் – ” முன் எச்சரிக்கை”

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!