நடப்பு நிகழ்வுகள் – 13 ஜனவரி 2023 | 13th January 2023 Current Affairs!

0
நடப்பு நிகழ்வுகள் - 13 ஜனவரி 2023 | 13th January 2023 Current Affairs!
நடப்பு நிகழ்வுகள் - 13 ஜனவரி 2023 | 13th January 2023 Current Affairs!
நடப்பு நிகழ்வுகள் – 13 ஜனவரி 2023 | 13th January 2023 Current Affairs!

தேசிய செய்திகள்

மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம்  புதிய தூசி கட்டுப்பாட்டு  தொழில்நுட்பத்தை  கண்டுபிடித்துள்ளது

 • மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (CMPDIL), ராஞ்சி (கோல் இந்தியா லிமிடெட்டின் ஆலோசனை துணை நிறுவனம்) சுரங்கப் பகுதிகளில் உள்ள தூசியைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் “System and Method for Controlling the Generation and Movement of Fugitive Dust” அமைப்பைக் கண்டுபிடித்துள்ளது.
 • இந்த அமைப்பு சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், ரயில்வே பக்கவாட்டுகள் மற்றும் துறைமுகங்கள், நிலக்கரி அல்லது பிற கனிமங்கள், கட்டுமான தளங்களில் பயன்படுத்தப்படலாம்.
  • தற்போதைய கண்டுபிடிப்பு காற்றோட்டம் (WB) மற்றும் செங்குத்து பசுமை அமைப்பு (VGS) ஆகியவற்றின் ஒத்திசைக்கப்பட்ட பயன்பாடுடன் தொடர்புடையது.
  • மேலும் இத்தகைய கண்டுபிடிப்பு மூலம் தூசிகளின் உருவாக்கம் மற்றும் காற்றில் பரவுவதைக் குறைப்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.
 •  CMPDIL-Central Mine Planning and Design Institute Limited

இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழ் முதல் சுகாதார பணிக்குழு கூட்டம் கேரளாவில் நடைபெறவுள்ளது

 • இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழ் முதல் சுகாதார பணிக்குழு கூட்டம் ஜனவரி 18 முதல் 20 வரை கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
 • இந்த கூட்டங்கள் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம், மூலிகை தேநீர் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான சமையல் குறிப்புகளை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு இடையில் இந்தி அமர்வை  நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

 • இந்திய உயர்ஸ்தானிகராலயம் விஸ்வ ஹிந்தி திவாஸிற்குப் பிறகு இலங்கையின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்தி அமர்வை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 • உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க ஆகியோர் இந்திய கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மூலம் இந்தியாவின் கலாச்சார இணைப்பின் ஒரு பகுதியாக இந்தி அமர்வை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்தி அமர்வானது மாணவர்களுக்கு இந்தியா, அதன் வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள உதவும், அத்துடன் இந்திய ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் ஹிந்தியை பிரபலப்படுத்த வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நொய்டாவின் ஐஜி ட்ரோன்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் 5ஜி இயக்கப்பட்ட ட்ரோன்

 • ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (VSSUT) வளாகத்தில் இருந்து பிறந்த ஐஜி ட்ரோன்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) திறன் கொண்ட 5G-இயக்கப்பட்ட ட்ரோனை உருவாக்கியுள்ளது.
 • ஸ்கைஹாக்(Skyhawk) என்று பெயரிடப்பட்ட ட்ரோன் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பயன்பாடுகளில், மற்ற துறைகளில் பயன்படுத்தப்படலாம். இந்த ட்ரோன் 10 கிலோ வரை எடையை சுமந்து செல்லக்கூடியது மற்றும் சுமார் ஐந்து மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது.

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை

 • மக்கள் விரும்பி உண்ணப்படும் பாஸ்மதி அரிசியின் நறுமணத்தை கூட்டுவதற்காகவும், நிறத்தை மேம்படுத்தவும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டு வருகிறது.
 • இந்நிலையில் பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க முதல் முறையாக இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உள்ளது.
  • மேலும் இந்த விதிமுறைகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச செய்திகள்

நேரம் தவறாத உலகின் 20 விமான நிலையங்களின் பட்டியல் வெளியீடு

 • உலகளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ‘அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்’ எனப்படும் ‘ஓஏஜி’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 • நேரம் தவறாத உலகின் 20 விமான நிலையங்களின் பட்டியல்,
  • ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது
  • இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
 • நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியல்
  • இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
  • இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ‘இண்டிகோ’, 15-வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலக சுகாதார அமைப்பு  இரண்டு இருமல் மருந்தை தடை செய்துள்ளது

 • “இந்தியாவின் மரியான் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் இந்த தயாரிப்புகள் உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் மரணித்துள்ளனர், இதன் ஆய்வக ஆராய்ச்சி முடிவுகளில் இரண்டு தயாரிப்புகளிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் / அல்லது எத்திலீன்(diethylene glycol and /or ethylene) இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.”
 • இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் என்ற மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளான AMBRONOL syrup மற்றும் DOK-1 Max syrup ஆகிய இருமல் மருந்து தரமற்றவை என்றும் இந்த இரண்டு மருந்துகளையும் பயன் படுத்த உலக சுகாதார அமைப்பு(WHO) தடை செய்து பரிந்துரைத்துள்ளது.

 உலகின் மிக சக்திவாய்ந்த மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்-2023

 • 2023 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டை லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனம் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) வழங்கிய பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
 • ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டிலிருந்து முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்
நாடுகள் அணுகல் நாடுகள் அணுகல்
1)ஜப்பான் 193 6)பின்லாந்து 189
2)சிங்கப்பூர் 192 7)இத்தாலி 189
3)தென் கொரியா 192 8)லக்சம்பர்க் 189
4)ஜெர்மனி 190 9)ஆஸ்திரியா 188
5)ஸ்பெயின் 190 10)டென்மார்க் 188
 • ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டிலிருந்து கடைசி 10 பலவீனமான பாஸ்போர்ட்டுகள்
நாடுகள் அணுகல் நாடுகள் அணுகல்
1)ஆப்கானிஸ்தான் 27 6) சோமாலியா 35
2) ஈராக் 29 7) பாலஸ்தீன பிரதேசம் 38

 

3) சிரியா 30 8) நேபாளம் 38
4) பாகிஸ்தான் 32 9) வட கொரியா 40
5) ஏமன் 34 10) லிபியா 41

 

மாநில செய்திகள்

அயலகத் தமிழர் தின விழா

 • அயல்நாடுகளில் தமிழச்சங்கங்களை ஒருங்கிணைக்கவும், அயலகத்தில் உள்ள சாதனைத் தமிழா்களை பெருமைப்படுத்தும் விதமாகவும்  ஒவ்வொரு ஆண்டும் ஜன.12-ஆம் தேதி அயலகத் தமிழா் தினம் கொண்டாடப்படுகிறது,அயலகத் தமிழா் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணா் அரங்கத்தில் இரு நாள் கருத்தரங்கம் 11 ஜனவரி 2023 அன்று தொடங்கியது.
 • இதில் உலகெங்கும் தமிழா் இடம்பெயா்வு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் மற்றும் தமிழ் கற்றல், கற்பித்தல் என்ற தலைப்பில் அயல்நாடுகளில் தமிழா் வரலாறு என்ற பொருள்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன மேலும் அயலகத் தமிழா்களுக்கான புதிய நலத் திட்டங்களை முதலமைச்சர் தொடக்கப்படவுள்ளன.

பொருளாதார செய்திகள்

ரூபேடெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

 • இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்ற நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்க புதிய திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இத்திட்டத்தின் மூலம் , பிம் யூபிஐ (BHIM UPI) மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு (Rupay Debit card) ஊக்கத்தொகை சலுகைகளை வழங்குவதற்காக 2600 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தனிநபர் – வர்த்தகர் பரிவர்த்தனைகளுக்கு ரூபே டெபிட் கார்டு (Rupay Debit card) மற்றும் பிம் யூபிஐ (BHIM UPI) பரிவர்த்தனையை பயன்படுத்துவோருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தொல்லியல் ஆய்வுகள்

தென்பெண்ணை ஆற்றில் சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண் காதணிகள் கண்டறியப்பட்டுள்ளன

 • கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான மூன்று காதணிகள் கண்டறியப்பட்டன.
 • இதில் ஒரு காதணியின் மேல்புறத்தில் கோட்டுருவம் இடம்பெற்றுள்ளது. இது சங்க கால மக்களின் கலை நுணுக்கத்தை உணா்த்துகிறது,மேலும் சுடுமண் பொம்மை, வட்ட சில்லு, சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கிடைத்ததுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்களை மீட்கும் பணியை ரஷ்யா தொடங்க உள்ளது

 • விண்வெளி சுற்றுப்பாதையில் சிக்கியிருக்கும் மூன்று பணியாளர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்காக மாஸ்கோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு மீட்புக் கப்பலை பிப்ரவரி 2023-ல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
 • எனவே ரஷ்யாவின் roscosmos நிறுவனம் Soyuz MS-23 இன் திட்டமிட்ட மார்ச் மாத ஏவுதலை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறினார், இதன் மூலம் ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பிரான்சிஸ்கோ ரூபியோ ஆகியோரை மீண்டும் பூமிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தக வெளியீடு

Braving A Viral Storm: India’s Covid-19 Vaccine Story – புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது

 • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 11 ஜனவரி 2023 அன்று புது தில்லியில் Braving A Viral Storm: India’s Covid-19 Vaccine Story என்ற புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
 • புத்தகத்தை ஆஷிஷ் சாண்டோர்கர் மற்றும் சூரஜ் சுதிர் இணைந்து எழுதியுள்ளனர். ஜனவரி 2021 இல் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கும் இந்தியாவின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு புத்தக வெளியீடப்பட்டுள்ளது; இந்த புத்தகத்தின் மூலம் கொரோனா கால கட்டத்தில் நாட்டின் வெற்றிக் கதை மற்றும் புதிய இந்தியாவின் சரித்திரமாக இருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில்
  • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும்,
  • தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டஸன் 2-வது இடத்திலும்,
  • பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 3-வது இடத்திலும் உள்ளனர்.
  • இந்திய வீரர் விராட் கோலி 2 இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார்.
 • பந்து வீச்சாளர்களில் டாப்-10 தரவரிசையில்
  • நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் முதலிடத்திலும்,
  • ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2-வது இடத்திலும்
  • இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 இடங்கள் அதிகரித்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார்.
 • 20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் பயணிக்கிறார்.
 • டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார்.

முக்கிய தினம்

கொரிய அமெரிக்க தினம்

 • கொரிய அமெரிக்கர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 13 அன்று அமெரிக்காவில் முதல் கொரிய குடியேறியவர்கள் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
 • மேலும் இத்தினத்தில் கொரிய அமெரிக்கர்கள் தங்கள் வரலாற்றைப் பற்றி சிந்திக்கவும், அவர்களின் கலாச்சாரத்தைக் கொண்டாடவும், சிறந்த வாழ்க்கையைத் தேடி அமெரிக்காவிற்கு வந்த தங்கள் முன்னோர்களின் தியாகங்களை மதிக்கவும் ஒரு நேரமாக கொரிய அமெரிக்கர் தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!