CURRENT AFFAIRS – 11th OCTOBER 2022

0
CURRENT AFFAIRS – 11th OCTOBER 2022
CURRENT AFFAIRS – 11th OCTOBER 2022

CURRENT AFFAIRS – 11th OCTOBER 2022

சர்வதேச செய்திகள்

2022-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வெளியீடு

  • அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ். பெர்னான்கே, டக்ளஸ் டபிள்யூ டயமண்ட் மற்றும் பிலிப் எச். டிப்விக் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.
  • வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள்பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த பரிசு இவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது வரை பொருளாதாரத்திற்காக 53 நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாணயத்திற்கு சிறப்பு அங்கீகாரம்

  • உலகிலேயே சிறந்து விளங்கும் நாணயம் என்ற சிறப்பு அங்கீகாரத்தையும் பாகிஸ்தான் ரூபாய் பெற்றுள்ளது.
  • மேலும் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9 சதவீதம் அதிகரித்து 219.92 ஆக உயர்ந்துள்ளது.
  • அதிகப்படியான அன்னிய முதலீடு காரணமாக, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.
  • செப்டம்பர் 28 ஆம் தேதி புதிய நிதியமைச்சராகப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் Ishaq Dar-ஐ புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நியூசிலாந்தில் புதிய இந்திய தூதரக அலுவலகம் திறப்பு

  • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் , நியூசிலாந்தில் வெலிங்டன் நகரில் புதிய இந்திய தூதரக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
  • இதன் மூலம் வர்த்தகம், மின்னணு, வேளாண்மை, பாரம்பரிய மருத்துவம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-நியூசிலாந்து இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • நியூசிலாந்துக்கான இந்திய தூதரக பணியாற்றுபவர்நீத்தா பூஷண் ஆவார்.

தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் சூரிய சக்தியால் இயக்கும் கிராமத்தை பிரதமர் அறிவித்தார்

  • குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
  • 24 மணி நேரத்துக்கும் தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் பெறும் வகையில் மொதேரா கிராமத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரைகளில் 1,300 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, ஒரு கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை ஆகும்.
  • இந்த சோலார் அமைப்பு முற்றிலும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்துடன் (பிஇஎஸ்எஸ்) இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரத்திலும் மின்சாரம் பெறுவது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச முன்னாள் மந்திரி முலாயம் சிங் யாதவ் காலமானார்

  • உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
  • இதனை தொடர்ந்து உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பலனின்றி காலமானார்.
  • சமாஜ்வாதி கட்சி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முதன்மையான கட்சிகளில் ஒன்றாகும். ஜனதா தளம் பல கட்சிகளாக சிதறிய போது, இக்கட்சி முலாயம் சிங் யாதவால் 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

8000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

  • குஜராத் மாநிலம் பருச்சில் உள்ள அமோத் நகரில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • ஜம்புசாரில் மொத்த மருந்து பூங்கா, தஹேஜில் ஆழ்கடல் குழாய் திட்டம், அங்கலேஷ்வர் விமான நிலையத்தின் முதல் கட்டம் மற்றும் அங்கிலேஷ்வர் மற்றும் பனோலியில் பலநிலை தொழில்துறை கொட்டகைகளின் மேம்பாடு போன்றவைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • மேலும் GACL ஆலை, பருச் நிலத்தடி வடிகால் மற்றும் IOCL தஹேஜ் கோயாலி பைப்லைன் உள்ளிட்ட குஜராத்தில் ரசாயனத் துறைக்கு ஊக்கமளிக்கும் பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

அகமதாபாத்தில் மோடி ஷைக்ஷானிக் சங்குல் கல்வி வளாகத்தின் முதல் கட்டத்தை பிரதமர் திறந்து வைத்தார்

  • குஜராத்தின் அகமதாபாத்தில் ஏழை மாணவர்களுக்கான கல்வி வளாகமான மோடி ஷைக்ஷானிக் சங்குலின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
  • மேலும் ஜாம்நகரில் 1,460 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் தொடங்கி, மேலும் அத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்கள் நீர்ப்பாசனம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு சம்மந்தப்பட்டவை ஆகும்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு மனநலத் துறையில் ஒரு புதிய திட்டமான (டெலி-மனாஸ்) திட்டம் அறிமுகம்

  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மாநிலங்கள் முழுவதும் டெலி மென்டல் ஹெல்த் அசிஸ்டன்ஸ் மற்றும் நெட்வொர்க்கிங் (டெலி-மனாஸ்)தொடங்கப்பட்டுள்ளது.
  • 24X7 டெலி-மென்டல் ஹெல்த் சேவைகள் இலவச எண்- இந்த நெட்வொர்க்கின் கீழ் 23 டெலி மென்டல் ஹெல்த் சென்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நிம்ஹான்ஸ், பெங்களூரு மற்றும் IIITB ஆகியவை நோடல் மென்டரிங் இன்ஸ்டிடியூட்களாக இருக்கும்
  • அனைவருக்கும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதற்காகவும் ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலும் குறைந்தபட்சம் ஒரு டெலி-மனாஸ் செல் நிறுவப்படும்.
  • The International Institute of Information Technology Bangalore

தமிழகத்தில் முதல் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

  • தலைமைச்செயலகத்தில், திரவநிலை அழுத்தப்பட்ட எரிவாயு நிலையத்தை மாநிலத்தின் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
  • AG & P பிரதம் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் திரவ நிலை அழுத்தப்பட்ட எரிவாயுவிற்கான நிலையம் அமைத்துள்ளது
  • இது தமிழகத்தில் முதன் முறையாக அமையும் திரவநிலை அழுத்தப்பட்ட எரிவாயு நிலையம் ஆகும்.

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

சிவகங்கை அருகே 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியம், பாகனேரி அடுத்த ஊரில், 400 ஆண்டுகள் பழமையான கோவில், சிவகங்கை தொல்லியல் துறையினரால், புனரமைப்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த கல்வெட்டு 15 அல்லது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விளையாட்டு செய்திகள்

அஸ்தானா ஓபன் டென்னிஸ்ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

  • கஜகஸ்தானில் நடந்த அஸ்தானா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில்  நோவக் ஜோகோவிச் (செர்பியா) சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி  கோப்பையை கைப்பற்றினார்.
  • இது ஜோகோவிச்- க்கு டெல் அவிவ் உட்பட இந்த ஆண்டின் நான்காவது விம்பிள்டன் சாம்பியன் பட்டமாகும்.
  • ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்தது. மேலும் அதிகம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

பார்முலா-1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் மீண்டும்சாம்பியன்பட்டத்தை வென்றார்

  • 2022 -ம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
  • இதன் 18-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.
  • 2-வது இடத்தை மற்றொரு ரெட்புல் அணி வீரரான செர்ஜியோ பெரேசும் (மெக்சிகோ), 3-வது இடத்தை மொனாக்கோவின் சார்லஸ் லெக்லெர்க்கும் (பெராரி அணி) பெற்றனர்.

36 வது தேசிய விளையாட்டுப் போட்டி தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கல பதக்கம்

  • 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் நடந்து வருகிறது. இதில் நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய போட்டிகள் அடங்கிய டிரையத்லான் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை எஸ்.ஆர்த்தியும், சைக்கிளிங் பந்தயத்தில் 119 கிலோமீட்டர் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநாத் லட்சுமிகாந்தும் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
  • மேலும் பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் 51 தங்கம் உள்பட 113 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு 22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என்று 67 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

முக்கிய நாள்

உலக மனநல  தினம் 2022:

  • உலகளவில் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மனநலத்துக்கு ஆதரவான முயற்சிகளைத் திரட்டுவதற்கும் ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் கருப்பொருள் உலகளாவிய முன்னுரிமையாக அனைவருக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வை ஏற்படுத்துதல் என்பதாகும்.

சர்வதேச பெண் குழந்தை தினம் 2022

  • 2012 முதல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் தேதி பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள சவால்களை எதிர்கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் உரிமைகளைப் பெற உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த நாளின் கருப்பொருள் இப்போது நமது நேரம்நமது உரிமைகள், நமது எதிர்காலம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!