நடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 11 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 11 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2023

தேசிய செய்திகள்

குறைகடத்தி விநியோகச் சங்கிலி மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டன.

  • புதுதில்லியில் வர்த்தகப் பேச்சுவார்த்தை 2023 நிறைவடைந்த்தைத் தொடர்ந்து, இந்திய- அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை செயல்திட்டத்தின் கீழ் குறைகடத்தி விநியோகச் சங்கிலி மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இன்று கையெழுத்திட்டன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) 3வது சர்வதேச மாநாடு-2023

  • இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தனது 3வது சர்வதேச மாநாட்டை ‘உள்ளடக்கிய தேர்தல்கள் மற்றும் தேர்தல்கள் ஒருமைப்பாடு(Inclusive Elections and Elections Integrity)’ என்ற கருப்பொருளில் மெய்நிகர் வடிவத்தில் மார்ச் 09, 2023 அன்று நடத்தியுள்ளது.
  • தேர்தல் ஒருமைப்பாடு குறித்த கூட்டமைப்பை இந்திய தேர்தல் ஆணையம் வழிநடத்துகிறது மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு 2021 டிசம்பரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டிற்கான சர்வதேச கருத்தரங்கம் தொடங்கப்பட்டது

  • மத்திய சுகாதார அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா முன்னிலையில் இன்று சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டிற்கான 2வது சர்வதேச கருதரங்கத்தை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.
  • “உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கான சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டின் மூலம் உருவாக்கப்பட்ட சான்றுகள் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் மலிவு, கிடைக்கும் தன்மை மற்றும் அணுகல்” என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு தொடங்கப்பட்டது.

 

சர்வதேச செய்திகள்

நேபாள அதிபராகிறார் ராமச்சந்திர பவுடேல்

  • நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வருகிற 12-ந்தேதியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
  • இந்த நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் (வயது 78), புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டின் அதிபராக ஷி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14-வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன அதிபராக ஷி ஜின்பிங்கை தேர்வு செய்ய ஆதரவளித்தனர்.
  • மேலும் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கிறார்.ஷி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொல்லியல் ஆய்வுகள்

1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டது

  • நெதர்லாந்து,ஹூஜிவ்வுட் என்னும் இடத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் புதையலை லொரென்ஸ்வ் ரூய்ஜ்ட்டர் என்பவர் கண்டுபிடித்தார்.
  • அந்த புதையலில் நான்கு தங்க காது பதக்கங்கள், இரண்டு தங்க இலைகள் மற்றும் 39 வெள்ளி நாணயங்கள் உள்ளன என்று டச்சு தேசிய பழங்கால அருங்காட்சியகம் (Rijksmuseum van Oudheden)அறிவித்துள்ளது.

 

புத்தக வெளியீடு

முண்டக உபநிஷத்என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

  • ‘முண்டக உபநிஷத்’ என்ற புத்தகத்தை எழுதியவர் டாக்டர் கரண் சிங் ஆவார்.
  • இந்த புத்தகத்தை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்,9 மார்ச் 2023 புதுடெல்லியில் வெளியிட்டார்.

 

முக்கிய தினம்

சுதந்திர மறுசீரமைப்பு நாள்லிதுவேனியா(மார்ச் 11)

  • லிதுவேனியாவின் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் நாள், 1990 இல் அரசியலமைப்புச் சபை கையெழுத்திட்ட லிதுவேனியா மாநிலத்தை மீண்டும் நிறுவுவதற்கான சட்டத்தின் நினைவாக மார்ச் 11 அன்று கொண்டாடப்படுகிறது

Download PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!