நடப்பு நிகழ்வுகள் – 08 நவம்பர் 2022!

0
நடப்பு நிகழ்வுகள் - 08 நவம்பர் 2022!
நடப்பு நிகழ்வுகள் - 08 நவம்பர் 2022!

நடப்பு நிகழ்வுகள் – 08 நவம்பர் 2022!

தேசிய செய்திகள்

பழங்குடியினர் கௌரவ தினம்

• மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், திறன் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ கொண்டாடப்படவுள்ளது, 2021 ஆம் ஆண்டில், மத்திய அரசாங்கம் நவம்பர் 15 ஆம் தேதி பிர்சா முண்டாவின் பிறந்தநாளை ‘ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ்’ என்று அறிவித்தது.
• இந்த கொண்டாடத்தின் மூலம் எதிர்கால சந்ததியினரிடையே நாட்டிற்காக பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் பற்றி அறிந்துகொள்ள செய்வதே இதன் நோக்கமாகும்.

10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

• பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 7, 2022 அன்று தீர்ப்பு வழங்கியது.
• ஜனவரி-8, 2019, அன்று அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர்,ஜனவரி-12,2019 ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக சட்ட அமைச்சகம் அறிவித்தது.
• இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது பல விசாரணைகளை கடந்து நவம்பர் -7,2022 அன்று பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சர்வதேச செய்திகள்

WMO-எட்டு வெப்பமான ஆண்டுகள் வெளியீட்டுள்ளது

• 2015 முதல் 2022 வரை எட்டு ஆண்டுகள் வெப்பமான எட்டு ஆண்டுகளாக பதிவு செய்யப்படும் என்று உலக வானிலை அமைப்பு அதன் நவம்பர் 2022 ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
• மேலும் 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய (1850-1900) சராசரியை விட 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
o WMO – World Meteorological Organization

மாநில செய்திகள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 13 சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன

• 1,261 கோடி மதிப்பிலான 329 கிமீ நீளமுள்ள ஐந்து சாலைத் திட்டங்கள் மற்றும் மாண்ட்லாவில் உள்ள போலீஸ் மைதானத்திற்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்காரி மற்றும் முதல்வர் சவுகான் அடிக்கல் நாட்டினார்கள்.
• ஜபல்பூரில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் 4,054 கோடி ரூபாய் செலவில் 214 கிமீ நீளமுள்ள எட்டு சாலைத் திட்டங்களை அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள். மேலும் இத்திட்டங்கள் மத்தியப் பிரதேசத்தில் 5,315 கோடி ரூபாய் மதிப்பிலான 13 சாலைத் திட்டங்கள் 7 நவம்பர் 2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 14 புதிய துணை மின்நிலையங்கள் திறப்பு

• தமிழகத்தில் 373 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 7,2022 அன்று திறந்து வைத்தார்.
• 130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

உலகின் முதல் வேத கடிகாரம் உஜ்ஜயினியில் அமைக்கப்படவுள்ளது

• மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி, மஹாகல் நகரம் சூரியனின் நிலையுடன் ஒத்திசைக்கப்படும் உலகின் முதல் வேத கடிகாரத்தை விரைவில் அமைக்கப்படவுள்ளது. வேத கடிகாரம் என்பது வேத கால கணக்கீட்டின் அடிப்படையில் இருக்கும், இதில் நாளின் 24 மணிநேரமும் முஹுரத்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
• மாநில உயர்கல்வி அமைச்சர் மோகன் யாதவ் நவம்பர் 6, 2022 அன்று உஜ்ஜயினியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஜிவாஜி ஆய்வகத்தில் வேத கடிகாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நியமனங்கள்

RIL இன் இயக்குநராக கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார்

• RIL இன் இயக்குநர்கள் குழு, மனித வளத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீ கே.வி.காமத் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• ரிலையன்ஸ் ஸ்ட்ரேடஜிக் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (ஆர்எஸ்ஐஎல்) இன் இயக்குனராகவும், தலைவராகவும் கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார். RSIL ஐ Jio Financial Services Limited (“JFSL”) என விரைவில் மறுபெயரிடப்பட்ட உள்ளது.
o RSIL – Reliance Strategic Investment Limited

GSMA துணைத் தலைவராக கோபால் விட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்

• உலகளவில் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய அமைப்பான GSMA, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பார்தி ஏர்டெல்லின் CEO கோபால் விட்டலை, ஜனவரி 1, 2023 முதல் இரண்டு ஆண்டு காலத்திற்கு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததுள்ளது.
• GSMA வாரியத்தில் 26 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் உலகளாவிய மொபைல் ஆபரேட்டர்களின் மூத்த பிரதிநிதிகள் மற்றும் சிறிய ஆபரேட்டர்கள் உள்ளனர்.
o GSMA – Global System for Mobile communications Association.

தொல்லியல் ஆய்வுகள்

பழமையான மஹாவீரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

● சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிள்ளுக்குடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண மத தீர்த்தங்கரரான இரண்டு மகாவீரர் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,ஒரு சிற்பம் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
● மற்றொரு சிற்பம் தலைப்பகுதி சிதைந்தும் அதற்கு மேல் உள்ள பகுதிகள் முற்றிலுமாக சிதைந்தும் காணப்படுகிறது.
சிற்பத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நிலவிற்கு புதிய விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்

• ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
• இந்த திட்டத்தின்படி, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

விண்வெளிக்கு குரங்குகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது

• சீனா தற்போது புதிதாக விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைக்கயுள்ள நிலையில் விண்வெளியில் வளர்ச்சி மற்றும் உடலியல் மாறுபாடு பற்றிய ஆராய்ச்சி நடத்தக் குரங்குகளை விண்வெளி மையத்திற்கு அனுப்ப உள்ளது.
• சீனாவின் ஆராய்ச்சியாளரான ஜாங் லு, இது குறித்துக் கூறுகையில், விலங்குகளைக் கொண்டு முதற்கட்ட ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையானக் கூற்றுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சூரியனை விட பன்மடங்கு பெரிய கருந்துளை பூமியின் மிக அருகில் கண்டுபிடிப்பு

• ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் கயியா விண்கலத்தின் மூலம் சூரியனை விட 10 மடங்கு அதிகம் எடை உள்ள கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
• 1,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்து உள்ளது. (ஓர் ஒளி ஆண்டு என்பது 9.5 டிரில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும்) இந்த ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலைநோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர்.

புத்தக வெளியீடு

“ஆசியாவின் அணுவாயுதமயமாக்கல்” என்ற புதிய புத்தகத்தை ரெனே நாபா வெளியிட்டார்

• பிரெஞ்சு எழுத்தாளர் ரெனே நாபா, “De la Nucléarisation de l’Asie” (ஆசியாவின் அணுவாயுதமயமாக்கல்) என்ற தலைப்பில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
• பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இணைப்பால் ஏற்படும் அணுசக்தி அவசரநிலை மற்றும் அச்சுறுத்தல் குறித்து புத்தகம் விவாதிக்கிறது. கோலியாஸ் வெளியிட்ட புத்தகம் ஜெனிவா பிரஸ் அமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

விருதுகள்

தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2021

• செவிலியர்கள் மற்றும் நர்சிங் தொழில் வல்லுநர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய சிறப்பான சேவைகளை பாராட்டும் வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
• தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 1973 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த விழா நவம்பர் 7, 2022 அன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது மற்றும் 2021 ஆண்டில் மொத்தம் 51 உறுப்பினர்கள் இந்த விருதைப் பெற்றனர்.

உத்தரகாண்ட் கவுரவ் சம்மான் விருது

• ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்ட் அரசாங்கம் தனிநபர்கள் அவர்கள் பல்வேறு துறைகளில் நிகழ்த்தும் சாதனைகளை பாராட்டி உத்தரகாண்ட் கவுரவ் சம்மான் விருதுகளை வழங்கி வருகிறது.
• 2022 ஆண்டுக்கான இந்த விருது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA), அஜித் தோவல், கவிஞர் பிரசூன் ஜோஷி மற்றும் மூன்று நபர்களுக்கு வழங்கப்பபடவுள்ளது மற்றும் இந்த விழா நவம்பர் 9, 2022 அன்று நடைபெறும்.

விளையாட்டு செய்திகள்

பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் 2022

• மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.
• பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ் ஜப்பான் வீராங்கனை மாமிகோ டொயட்டாவை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பாகத் தங்கம் பதக்கம் வென்றார்.

முக்கிய தினம்

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

• இந்தியாவில் நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது, மேலும் இந்த நாள் புற்றுநோயைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிவதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
• 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய புற்றுநோய் சமூகம் பிப்ரவரி 4 அன்று உலக புற்றுநோய் தினத்தை “கவனிப்பு இடைவெளியை மூடு” என்ற முழக்கத்துடன் கொண்டாடுகிறது.

உலக கதிரியக்க தினம்-நவம்பர் 8

• உலக கதிரியக்க தினம் 1895 ஆம் ஆண்டில் X-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த நாளின் நோக்கம் கதிரியக்க இமேஜிங் மற்றும் சிகிச்சை பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்,
• இது நோயாளிகளின் நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் மிக முக்கியமாக, கதிரியக்கத்தை குறைந்தபட்சம் தேவையான அளவில் வைத்திருப்பதை உறுதிசெய்து, நோயாளியின் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!