நடப்பு நிகழ்வுகள் – 08 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 08 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 08 ஜூன் 2023

நடப்பு நிகழ்வுகள் – 08 ஜூன் 2023

தேசிய செய்திகள்

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநிலங்களுக்கான உணவு பாதுகாப்பு குறியீட்டை வெளியிட்டுள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டு  ‘உணவுத் தரம் உயிர்களைக் காப்பாற்றும்’ என்ற கருப்பொருளைக் கடைப்பிடிக்கப்படும் உணவு பாதுகாப்பு நாளன்று(ஜூன் 7 ) , மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநிலத்திற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டை வெளியிட்டுள்ளார். 
  • தற்போது வெளியிட்டுள்ள இந்த தேசிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் குஜராத் மாநிலமானது முதலிடத்தில் உள்ளது.  2021-22 மதிப்பீட்டில், மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில்(SFSI)  பெரிய மாநிலங்களில் குஜராத் இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023-24 காரீஃப் பயிர்களுக்கான சந்தைப்படுத்தல் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு(MSP) மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • மாண்புமிகு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதாரத்தின் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது(CCEA), 2023-24ஆம் ஆண்டுகளுக்கான அனைத்து காரிஃப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த ஒப்புதலானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்கும், அவற்றை சரியான முறையில் சந்தைப்படுத்துதலையும் ஊக்கப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரிப் பயிர்கள் அடங்கிய விலை தர நிர்ணய பட்டியலுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்முவில் ONGC தேசிய பேரிடர் தணிப்பு மையம் திறக்க திட்டம்.
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோர் ஜூன் 06 அன்று ஜம்முவில் ONGCயின் “தேசிய பேரிடர் தணிப்பு மையம்” மற்றும் யாத்ரி நிவாஸ்” ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர்.
  • இது நிறுவப்பட்டால் பேரிடர் ஏற்படும் காலங்களில் விரைந்து செயலாற்றவும் மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திகள்

95 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடலுக்கடியில் கேபிள் திட்டத்தில் ஜப்பான் இணைந்தது.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் இணைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் கிழக்கு மைக்ரோனேசியா தீவு நாடுகளை இணைப்பதற்காகவும் 95 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான “கடலுக்கடியில் கேபிள் இணைப்பு திட்டத்தில் கையெழுத்திட இருந்த நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தற்போது ஜப்பானும் இணைந்ததாக  ஜூன் 06 அன்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • Quad அமைப்பில்  அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புக் கூட்டணி கருத்திற்கொண்டும், சீனாவின் அச்சுறுத்ததல்களிலிருந்து தப்பிக்கவும் இந்த முன்னெடுப்பு அமையும் என்றும் இதில் இந்தியாவும் இணைய வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் பணவீக்கம் மே மாதத்தில் 9.94% ஆக ஒரு தசாப்தத்தில் அதிகபட்ச பணவீக்க விகிதமாக பதிவு செய்துள்ளாது.
  • வங்கதேசமானது ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த மாத பணவீக்க விகிதத்தை பதிவு செய்துள்ளது. அதாவது மே மாதத்தில் நாட்டின் மாத பணவீக்கமானது 9.94 சதவீதத்தை எட்டியுள்ளது என வங்கதேச புள்ளியியல் பணியகமானது(பிபிஎஸ்) ஜூன் 06 அன்று வெளியிடப்பட்ட தரவுகளில் குறிப்பிட்டுள்ளது.
  • இதற்கு முன், 2010-11இல் 10.11 சதவீதமாக பதிவாகி இருந்ததே உச்சபட்ச பணவீக்க விகிதமாகும். உணவு மற்றும் பிற முக்கிய விலைகளின் உயர்வு இந்த பணவீக்க உயர்வுக்கு காரணமாகும் என்று அந்த அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

ஜப்பான் அரசாங்கமானது 2023 ஆம் ஆண்டுக்குள் பெரிய நிறுவனங்களில் குறைந்தபட்சம் 30% இயக்குநர்களாக பெண்களை நியமிக்க திட்டம்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட பாலின சமத்துவப் பணியகத்தின் வரைவுத் திட்டத்தின்படி, ஜப்பான் அரசாங்கமானது 2023 ஆம் ஆண்டுக்குள் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் குறைந்தபட்சம் 30% இயக்குநர்களாக பெண்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் மூலம் நாட்டின் பாலின சமத்துவம் பாதுகாக்கப்படும் என்றும் அதிக பன்முகத்தன்மை மற்றும் புதுமையான வளர்ச்சிக்கு மிகப் பெரிய பலமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

மத்திய பிரதேச அரசு “CM கற்கும் மற்றும் சம்பாதிக்கும்” என்ற பெயரில் திட்டத்தை  அறிவித்துள்ளது.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனைக் கற்பிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் “முதலமைச்சரின் கற்றல் மற்றும் சம்பாதிக்கும் திட்டம்(CM Learn and Earn)” என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளதாக அம்மாநில அரசு ஜூன் 7 அன்று அறிவித்துள்ளது.
  • கற்றல் திறன்களுடன், இளைஞர்களுக்கு ரூ.8,000 முதல் 10,000 வரை உதவித்தொகை வழங்கப்படுதல் மற்றும் இத்திட்டத்தின் கீழ் குறைந்தது ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்பங்கா மற்றும் பூர்னியா விமான நிலையத்தை மேம்படுத்த பீகார் மாநில அரசும் AAI-யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • பீகாரில் உள்ள தர்பங்கா மற்றும் பூர்னியா விமான நிலையத்தில் புதிய “சிவில் என்கிளேவ்கள் கட்டப்படுதல் மற்றும் விமான நிலையத்தின் மேம்பாட்டிற்காக பீகார் மாநில அரசும் இந்திய விமான நிலைய ஆணையமும் (AAI) இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  •  பூர்னியாவில் 52.18 ஏக்கர் நிலத்திலும், தர்பங்காவில் 78 ஏக்கர் நிலத்திலும் கட்டுமானம் நடைபெறும் என இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மின் திட்டங்களுக்காக NHPC மற்றும் Torren Power ஆகிய நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • NHPC மற்றும் Torren Power நிறுவனம் ஆகியவை மகாராஷ்டிரா அரசுடன் முன்னேற்றப்பட்ட நீர்மின் சேமிப்பகம்(Storage) திட்டங்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூன் 06ல் கையெழுத்திட்டுள்ளன.
  • 5,700 மெகாவாட் திறன் கொண்ட மூன்று நீர்மின் சேமிப்பகத்தை(Storage) மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் TORRENT நிறுவனமானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டமானது ராய்கர் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் (3,000 மெகாவாட்), மாவல் (1,200 மெகாவாட்), ஜுன்னார் (1,500 மெகாவாட்) ஆகிய மூன்று இடங்களில் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

குஜராத்தின் 20வது “ஷாலா பிரவேஷோத்சவ்” ஜூன் 12 முதல் 14 வரை தொடங்க திட்டம்.
  • எல்லையோர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் குஜராத்தில் ஷாலா பிரவேஷோத்சவ் திட்டத்தின் 20ஆவது பாதிப்பானது ஜூன் 12 முதல் 14 வரை தொடங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
  • ஷாலா பிரவேஷோத்சவ் என்ற முன்னெடுப்பு திட்டமானது கடந்த இரண்டு தசாப்தங்களாக குஜராத் கல்வித் துறையால் நடத்தப்படும் திட்டமாகும். இந்த முன்னெடுப்பானது 2003 ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக பதவியேற்றபோது, “குஜராத் மாநிலத்தின் எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாது” என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

IIT டெல்லியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்காவில் பாதுகாப்பு சிறப்பு வாய்ந்த “iDEX” புதுமை ஸ்டார்ட்-அப்களுக்கான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • IIT டெல்லியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்காவில் பாதுகாப்பு சிறப்பு வாய்ந்த “iDEX” புதுமை ஸ்டார்ட்-அப்களுக்கான கண்காட்சியை iDEX இன் பார்ட்னர் இன்குபேட்டர் மற்றும் FITT-IIT டெல்லி இணைந்து நடத்துகின்றன.
  • இந்த நிகழ்வில் பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகளின்(iDEX) சுருக்கமான விளக்கக்காட்சி மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி மற்றும் மெய்நிகர் உண்மை, ஆற்றல் அமைப்புகள், சிறப்பு வாய்ந்த ட்ரோன்கள் மற்றும் ட்ரோன்களை அளிப்பதற்கான அமைப்பு, விண்வெளி முன்மொழிவு அமைப்புகள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்பங்களில் இந்திய ஸ்டார்ட்-அப்களின் முன்னேற்றத்தை உலகறிய செய்ய இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்ததாகும்.

“வளர்ந்து வரும் இந்தியா: பகிர்ந்த செழுமைக்கான கிராமப்புற வளர்ச்சியை மறு கற்பனை செய்தல்” என்று தலைப்பிடப்பட்ட மாநாடு தொடக்கம்.
  • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் ஜூன் 06 அன்று புது தில்லியில் “வளர்ந்து வரும் இந்தியா: பகிர்ந்த செழுமைக்கான கிராமப்புற வளர்ச்சியை மறு கற்பனை செய்தல்” என்று தலைப்பிடப்பட்ட இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த மாநாட்டில் “கிராமப்புற மேம்பாடு” பற்றிய கூர்மையான மனத்திடம் மற்றும் கிராமப்புற வசதிகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் வரைபடத்தை உருவாக்க நோக்கமுள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் பெண்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஆதரிப்பதும் அதனை மேம்படுத்துவதும் மற்றும் லக்பதி திட்டத்தின் கீழ் பெண்களை SHG வலையமைப்பில் ஊக்கமாக செயல்படுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

பொருளாதார செய்திகள்

நிதியாண்டு 2024க்கான இந்தியாவின் GDP வளர்ச்சி  6.3% ஆக குறையும் என உலக வங்கி அறிவிப்பு.
  • 2025-2026ஆம் நிதியாண்டில்,  கடன் வாங்கும் செலவுகள் அதிகரித்தல் மற்றும் அதிக பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக, 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக குறையும் என்று உலக வங்கி தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • இது முந்தைய 6.6% மதிப்பீட்டிலிருந்து 0.3 சதவீதப் புள்ளி கீழ்நோக்கிய திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும்கூட, வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியா தொடர்ந்து நிலைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்பில் “சுனில் குமார்” டெகாத்லான் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
  • தென் கொரியாவின் யெச்சியோனில் ஜூன் 06 அன்று நடைபெற்ற ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தடகள வீரரான சுனில் குமார் “7003 புள்ளிகள்” பெற்று, ஆண்களுக்கான டெகாத்லானில் தங்கம் வென்றுள்ளார்.
  • இவரை தவிர, பூஜா 1.82 மீட்டர் உயரம் தாண்டி பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளியையும், புஷ்ரா கான் பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளியையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய தினம்

உலக பெருங்கடல் தினம் 2023
  • கடல் மற்றும் பெருங்கடலின் முக்கியத்துவம் மற்றும் அதை பாதுகாக்கும் வழிகள் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலகப் பெருங்கடல் தினமானது கடைபிடிக்கப்படுகிறது. 
  • இந்த தினமானது 2008 இல் ஐக்கிய நாடுகள் பொது சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Planet Ocean: Tides are Changingஎன்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!