நடப்பு நிகழ்வுகள் – 07 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 07 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 07 ஜூன் 2023

நடப்பு நிகழ்வுகள் – 07 ஜூன் 2023

தேசிய செய்திகள்

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சுரினாம் நாட்டின் தலைநகரான பரமரிபோவில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு, நாட்டின் உயரிய சிவிலியன் கவுரவ விருது – “The Grand Order of the Chain of the Yellow Star” வழங்கப்பட்டுள்ளது. 
  • சுரினாம் குடியரசுத் தலைவர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி இந்த உயரிய விருதை நம் நாட்டின் குடியரசு தலைவருக்கு வழங்கி கௌரவப்படுத்தினார் மற்றும் இந்த விருதைப் பெறும் முதல் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அலையாத்தி காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை புதுப்பிக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.
  • நாடு முழுவதும் உள்ள அலையாத்தி காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி ஜூன்5 அன்று “அம்ரித் தரோஹர் மற்றும் மிஷ்டி” என்ற இரண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த அம்ரித் தரோஹர் யோஜனா தொடங்கப்பட்டால், தற்போதுள்ள ராம்சார் தளங்கள் பொதுமக்களின் பங்கேற்பின் மூலம் பாதுகாக்கப்படும் என்றும் இந்த தளங்கள்  ஆயிரக்கணக்கான மக்களுக்கு பசுமை வேலை வாய்ப்புகளின் ஆதாரமாகவும், சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களாகவும் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு மாணவர் ஒரு மரம் பிரச்சாரம் 2023” நடத்த திட்டம். 
  • கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஜூன் 5 அன்று, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பின்(AICTE) “ஒரு மாணவர் ஒரு மரம் பிரச்சாரம் 2023” என்ற முன்னெடுப்பானது தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • அதே சமயத்தில் ‘இளங்கலை மட்ட அளவில் “சுற்றுச்சூழல் கல்விக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பாடத்திட்டக் கட்டமைப்பை”‘ வெளியிட்டுள்ளார். இந்த பிராச்சாரமானது “மிஷன் லைஃப் முன்னெடுப்பு(Mission LiFE) குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு மண்டல இயந்திரமயமாக்கப்பட்ட போக்குவரத்து பட்டாலியனில் முதல் பெண் தலைமை அதிகாரி பொறுப்பேற்பு.
  • கர்னல் சுஷிதா சேகர், இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு மண்டல மெக்கானிக்கல் போக்குவரத்து பட்டாலியனுக்கு கட்டளையிடும் ராணுவ சேவைப் படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார் என்று ஜூன் 5 அன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவர் இந்திய ராணுவத்தின் துருவா கமான்ட் என்றழைக்கப்பட்ட வடக்குக் கட்டளையின் ஒரு விநியோகச் சங்கிலியைப் பராமரிப்பதற்கு பொறுப்பாக மியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CBFC மும்பையில் புதிய மொபைல் செயலி மற்றும் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) தலைவர் பிரசூன் ஜோஷி வாரியத்திற்கான புதிய மொபைல் செயலி மற்றும் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் ஆகியவற்றை மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இந்த இணையதளமானது புதிய மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், கட்டளைகள் போன்றவற்றினை சரியான நேரத்தில் பாதிப்புகளை வழங்கும் என்றும் புதிய மொபைல் செயலி ஆனது, ” தற்காலிகத் திரையிடல் தேதிகள் மற்றும் பயன்பாட்டின் நிலையை நிகழ்நேர முன்னேற்றத்தைக் கண்காணித்தல்” ஆகியவற்றை எளிதாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சுரினாம் இடையே  3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • சுரினாம் தலைநகரமான பரமரிபோவில் இந்தியாவிற்கும் சுரினாம் குடியரசிற்கும் இடையே “சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளில்” மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திப்பட்டுள்ளது. 
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 2023-2027 காலப்பகுதியில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பதற்கான கூட்டு வேலைத் திட்டம் மற்றும் இந்திய மருந்தியல் தரநிலைகள் மேம்பாடு, மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

நீருக்கடியில் இலக்கை தகர்ப்பதற்கான டார்பிடோ சோதனையில் கடற்படை வெற்றி.
  • ஜூன் 6 அன்று இந்தியாவால் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அதிக எடை கொண்ட டார்பிடோவைப் பயன்படுத்தி “நீருக்கடியில் இலக்கை அழிக்க நடத்திய சோதனையில் இந்திய கடற்படை வெற்றி கண்டது.
  • ‘சீ ஸ்கிம்மிங்’ எனப்படும் இந்த ஏவுகணையானது, கடலில் மிதக்கும் இலக்கை கீழே இருந்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 300 கிமீ தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

நியூசிலாந்தின் இரண்டாவது உயரிய விருதை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் “ஜெசிந்தா ஆர்டெர்ன்” பெற்றுள்ளார்.
  • நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அவர்களுக்கு, வெகுஜன துப்பாக்கிச் சூடு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து நாட்டை வழிநடத்தியதற்காக அந்நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றை அவர் பெற்றுள்ளார். 
  • கிங் சார்லஸ் பிறந்தநாளில் மரியாதையின் ஒரு பகுதியாக, நியூசிலாந்தின் இரண்டாவது மிக உயர்ந்த கௌரவமான Dame Grand Companionship விருதை ஆர்டெர்ன் பெற்றுள்ளார்.

மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் “ஆசியாவின் மிகப்பெரிய கிளஸ்டர் மேம்பாட்டு திட்டம்” தொடக்கம்.
  • மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “ஆசியாவின் மிகப்பெரிய, வரலாற்று சிறப்புமிக்க மற்றும் லட்சிய திட்டமான கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தை தானேயில் தொடங்கி வைத்துள்ளார்.
  • மறுவடிவமைக்கப்பட்ட நகரமயமாக்களின் திட்டத்தில் “நன்கு பொருத்தப்பட்ட சுகாதாரம், விளையாட்டு, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் குடிமை வசதிகள் ஆகியவற்றின் மேம்படுத்துவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுள்ளது. முக்கியமாக 18 உயிர்களைக் கொன்ற “சாய்ராஜ் கட்டிடம்” இடிந்து விழுந்ததற்குப் பிறகு, அங்கீகரிக்கப்படாத மற்றும் அதிகாரப்பூர்வ ஆபத்தான கட்டிடங்களின் கூட்டு மறுவடிவமைப்பிற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கேரளாவில் “கண்ணாடி ஒளியிழை கட்டமைப்பு திட்டம்” தொடக்கம்.
  • கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜூன் 5 அன்று மாநில சட்டப்பேரவையின் “சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில்,கண்ணாடி ஒளியிழை கட்டமைப்பு திட்டத்தைத்(Kerala Fibre Optic Network) தொடங்கி வைத்துள்ளார்.
  • மாநிலத்தில் அனைவருக்கும் மலிவு விலையில் இணைய வசதிகளை உறுதி செய்வதையும், இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு இலவச இணையம் வழங்குவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பசுமை ஹைட்ரஜனுக்காக ஆயில் இந்தியா நிறுவனத்துடன் ஹிமாச்சல் மாநில அரசானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் தாக்கூர், அம்மாநிலம் மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்களுக்கு இடையே “பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்” ஆகியவற்றிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என தெரிவித்துள்ளார் 
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் இமாச்சல் மாநிலத்தின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் விநியோகமானது சம அளவில் உயரும் என்றும் அதன் மூலம் மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் ஆய்வுகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் உலோகங்கள் மற்றும் தங்க பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தற்போது நடைபெற்று வரும்  2ஆம் கட்ட அகழாய்வில் ஜூன் 6 அன்று தங்க தகடு மற்றும் தங்க அணிகலன் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • இந்த அகழாய்வு பணியின் போதும் சுடுமண் பொருட்கள் மற்றும் சங்கு வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தங்கத்தினால் ஆன “தோடு மற்றும் தங்க தகடு” தலா 2 கிராம் அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார செய்திகள் 

“நிதிச் சேர்க்கை டாஷ்போர்டு-ANTARDRIHSTI ” அறிமுகம்.
  • ஜூன் 5 ஆம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், “நிதிச் சேர்க்கை டாஷ்போர்டு – ANTARDRIHSTI” ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இந்த அமைப்பானது நிதிச்சுமை தொடர்புடைய அளவுருக்களைக் கைப்பற்றுவதன் மூலம் நிதிச் சேர்க்கையின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் அதை கண்காணிப்பதற்கும் தேவையான நுண்ணறிவை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  டாஷ்போர்டானது தற்போது ரிசர்வ் வங்கியின் உள் பயன்பாட்டு அமைப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், பல பங்குதாரர் அணுகுமுறையின் மூலம் அதிக நிதி உள்ளடக்கத்தை மேலும் எளிதாக்கும் என இது எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு செய்திகள்

ISSF ஜூனியர் உலகக் கோப்பை 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடுதல் பிரிவில் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றுள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின்(ISSF) உலகக் கோப்பை இளையோருக்கான(Junior) போட்டியில் ஆடவர் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடுதல் பிரிவின் கீழ் “தனுஷ் ஸ்ரீகாந்த்” வெற்றியடைந்து, இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார். 
  • தனுஷ் தனது இறுதிப் போட்டியில் 24 சுடுதல்களின் மூலம் 249.4 புள்ளிகளைப் பதிவுசெய்து இந்த பதக்கத்தை பெற்றுள்ளார்.

U-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
  • தென் கொரியாவில் தற்போது நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் சித்தார்த் சவுத்ரி தங்கம் வென்றுள்ளார்.
  • ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 19.52 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவின் சித்தார்த் சவுத்ரி  தங்கம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

உலக உணவு பாதுகாப்பு தினம் 2023
  • போதுமான ஊட்டச்சத்து மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் உணவு தயாரிக்கப்படுதல் மற்றும் அதை விநியோகிக்கப்படுவதை மற்றும் உட்கொள்ளப்படுவதற்கான வழிமுறைகளை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதியானது உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • உணவு தரநிலைகள் உயிர்களை காப்பாற்றுகின்றன( Food Standards Save Lives) என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

 

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!