நடப்பு நிகழ்வுகள் – 06 நவம்பர் 2022!

0
நடப்பு நிகழ்வுகள் – 06 நவம்பர் 2022!
நடப்பு நிகழ்வுகள் – 06 நவம்பர் 2022!

நடப்பு நிகழ்வுகள் – 06 நவம்பர் 2022!தேசிய செய்திகள்

‘நிவேஷக் திதி – இந்தியாவின் முதலாவது மிதவை நிதி எழுத்தறிவு முகாம்

  • IPPB, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (MCA) கீழ் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்துடன் (IEPFA) இணைந்து, “பெண்களால், பெண்களுக்காக” என்ற நிதிக் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக ‘நிவேஷக் திதி’ என்ற ஒரு புதிய முயற்சியைத் ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரியில் தொடங்கியுள்ளது.
  • நிவேஷக் திதியின் முயற்சியானது பெண்களுக்கான பெண்களின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது,. மேலும் இது இந்தியாவின் முதலாவது மிதவை நிதி எழுத்தறிவு முகாம், இந்த சிறந்த நிகழ்வை நமது பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.

ராஜா ராம்மோகன் ராயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாட்டிய நாடகம்

  • நவீன இந்திய சமுதாயத்தின் தந்தை ராஜா ராம்மோகன் ராயின் வாழ்க்கை நாட்டிய நாடகம் நவம்பர் 5 மற்றும் 6, 2022 மாலை கர்தவ்யா பாதை மற்றும் இந்தியா கேட் (சென்ட்ரல் விஸ்டா) இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நாட்டிய நாடகத்திற்கு  ‘யுக்புருஷ் ராஜா ராம்மோஹன் ராய்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது,மற்றும் இந்த நிகழ்ச்சியானது ‘நாரி சம்மன்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வடகிழக்கு இந்திய அழகியாக ஐரின் டாக்கர் தேர்வு

  • நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் வடகிழக்கு அழகிக்கான போட்டி நடைபெற்றது இதில் இறுதி சுற்றில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 14 பேர் கலந்து கொண்டனர்.
  • இப்போட்டியில் நடுவர்கள் கேள்விக்கு சரியான பதில் அளித்த மேகாலயாவை சேர்ந்த ஐரீன் டாக்கர் வடகிழக்கு இந்திய அழகி என்னும் பட்டத்தை வென்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயதில் காலமானார்

  • இந்தியா நாட்டின் முதல் வாக்காளர் 106 வயதான மாஸ்டர் ஷியாம் சரண் நேகி நீண்டகால நோயின் காரணமாக நவம்பர் 5, 2022 இல் காலமானார். அவர் ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள கல்பாவில் வசித்து வந்தார்.
  • தேர்தல் ஆணையம் நேகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது மற்றும் அவரை “ஜனநாயகத்தில் விதிவிலக்கான நம்பிக்கை கொண்ட மனிதர்” என்றும் போற்றியுள்ளது

சர்வதேச செய்திகள்

சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு

  • யு.எஸ்.நியூஸ் மற்றும் வேர்ல்ட் ரிப்போர்ட், உலகின் சிறந்த நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியீட்டுள்ளது.
  • உலகின் மலிவான விலை குறியீட்டு பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது
வ .எண் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 5 இடம் பிடித்துள்ள நாடுகள் உலகின் மலிவான விலை குறியீட்டு பட்டியலில் முதல் 5 இடம் பிடித்துள்ள நாடுகள்
1 சுவிட்சர்லாந்து இந்தியா
2 ஜெர்மனி சீனா
3 கனடா வியட்நாம்
4 அமெரிக்கா தாய்லாந்து
5 ஸ்வீடன் பிலிப்பைன்ஸ்

 

உலக பயண சந்தை கண்காட்சி 2022

  • உலகப் பயணச் சந்தை (WTM) 2022 -ம் ஆண்டு நவம்பர் 7 முதல் 9 வரை லண்டனில் மிகப்பெரிய சர்வதேச பயணக் கண்காட்சி நடைபெறுகிறது . இந்த ஆண்டு கண்காட்சியின் கருப்பொருள் ‘பயணத்தின் எதிர்காலம் இப்போது தொடங்குகிறது’.
  • இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மாநில அரசுகள், பிற மத்திய அமைச்சகங்கள் உட்பட மொத்தம் 16 பங்குதாரர்களுடன் பங்கேற்கும், மருத்துவ மதிப்பு பயணம், சொகுசு ரயில்கள் மற்றும் சுற்றுலாவின் வரம்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சர்வதேச வணிக சமூகத்திற்காக காட்சிப்படுத்துவதே இந்திய அரசின் நோக்கமாகும்.

உலகின் 7வது பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ திகழ்கிறது

  • தினசரி புறப்பாடுகளின் அடிப்படையில் IndiGo நிறுவனம் 50 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்ட உலகின் ஏழாவது பெரிய விமான நிறுவனமாக மாறியது.
  • தற்போது, விமான நிறுவனம் தினசரி 1,600க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது மற்றும் 57 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் சேர்க்கப்படும் என்றும் நேகி கூறினார்.

மாநில செய்திகள்

கேரளாவில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிய புதிய செல்போன் செயலி

  • சபரிமலைக்கு நடைபயணமாக வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய இணைய செல்போன் செயலி உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது
  • பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது மற்றும் குடிநீர் வசதிகள்,மருத்துவ வசதிகள், தங்கும் வசதிகள்,வனப்பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

  • தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள பஜ்பே பகுதியில் மங்களூர் விமான நிலையம் என்ற பெயரை அடுத்த மாதம் டிசம்பர் 1-ந்தேதி முதல் `மங்களூரு சர்வதேச விமான நிலையம்’ ஆக மாற்றப்படுகிறது.
  • மங்களூர் நகரத்தின் பெயர் `மங்களூரு’ என மாற்றப்பட்டதால் விமான நிலையத்தின் பெயர் “மங்களூர் சர்வதேச விமான நிலையம்’ என்றும் மாற்றப்பட்டது.

பொருளாதார செய்திகள்

பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டம்

  • பாங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் இத்திட்டத்தின் மூலம்  அதிக நிலையான வட்டி விகிதங்களை பெற முடியும்.
  • இத்திட்டம் 399-நாள் முதிர்வு நேரத்தைக் கொண்டுள்ளது முதியோர்களுக்கு 7.25 சதவீதம் வட்டியும், பொது மக்களுக்கு 6.75 சதவீதம் என்ற விகிதத்தில் அழைக்கக்கூடிய டெபாசிட்டுகளுக்கு வட்டியும் பெறுவார்கள். அழைக்க முடியாத சேவை கட்டணம் 7 முதல் 7.50 சதவீதம் வரை இருக்கும்.

தொல்லியல் ஆய்வுகள்

அரியலூர் மாவட்டத்தில்  கல்லில் வரலாற்று குறியீடுகள் கண்டுபிடிப்பு

  • அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்படுத்தப்பட்ட கல்லின் ஒரு பகுதியில் குத்துவிளக்கு போன்ற ஒரு குறியீடும், அதன் அருகில் மற்றொரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும்  கல்லின் பின்பகுதியில் மற்றொரு  குறியீடு செதுக்கப்பட்டிருந்தது
  • சங்க காலம் முதலே கற்களில் குறியீடுகள் பொறித்து வரலாறுகளை பதிவு செய்யும் முறையை தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.எனவே இதை பற்றிய ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மராட்டியம் மாநிலத்தில் 132 ஆண்டு பழமையான சுரங்க பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

  • மும்பை நகரில் பைகுல்லா பகுதியில் அரசால் நடத்தப்படும் மருத்துவமனையில் 132 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட 200 மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சுரங்க பாதை, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சர் டி.எம். பெடிட் என்ற மருத்துவமனையின் கீழ் அமைந்துள்ளது மற்றும் இது கடந்த 1892-ம் ஆண்டு மார்ச்சில் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டு செய்திகள்

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி 2022

  • தென் கொரியாவின் சியோங்ஜு நகரில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில், சவுரவ் கோசல் தலைமையிலான இந்திய அணி குவைத் அணியை வென்று முதல்முறையாக தங்கம் வென்றது.
  • மேலும் இந்திய பெண்கள் அணி அரையிறுதியில் மலேசியாவிடம் தோல்வியடைந்ததால், வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

முக்கிய தினம்

போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதை தடுப்பதற்கான சர்வதேச தினம்

  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 5, 2001 அன்று, நவம்பர் 6 ஆம் தேதி ‘போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுக்கும் சர்வதேச தினமாக’ அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது.

சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தநாள்

  • சந்திரசேகர வேங்கட ராமன் என்று அழைக்கப்படும் சி.வி. ராமன், நவம்பர் 7, 1888 இல் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.
  • சி.வி. ராமன் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை ராமன் விளைவைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றார், இதில் ஒரு பொருளின் வழியாகச் செல்லும் ஒளி சிதறி, பொருளின் மூலக்கூறுகளில் ஏற்படும் ஆற்றல் நிலை மாற்றத்தால் சிதறிய ஒளியின் அலைநீளம் மாறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!