நடப்பு நிகழ்வுகள் – 06 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 06 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 06 ஜூன் 2023

நடப்பு நிகழ்வுகள் – 06 ஜூன் 2023

தேசிய செய்திகள்

மணிப்பூரில் நடந்த “வன்முறை சம்பவங்கள்” குறித்து விசாரணை நடத்த மத்திய அரசானது  விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
 • மணிப்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க கவுகாத்தி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான  அஜய் லம்பா தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.
 • இந்த ஆணையமானது 3 உறுப்பினர்களின் கீழ் இயங்கும் என்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை மற்றும் கலவரங்களுக்கான “காரணங்கள் மற்றும் அவற்றின் தாக்கத்தை இந்த ஆணையமானது விசாரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

11 பவளப்பாறைகளில் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களை (HICDP) செயல்படுத்துவதற்கான 10 ஒப்பந்தங்களில் இந்தியாவும் மாலத்தீவும் கையெழுத்திட்டன.
 • பல்வேறுப்பட்ட கூட்டுறவு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கும்,  11 பவளப்பாறைகளில் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களை (HICDP) செயல்படுத்துவதற்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை இரு நாடுகளும் இணைந்து மேம்படைவதற்கான 10 ஒப்பந்தங்களில் இந்தியாவும் மாலத்தீவும் கையெழுத்திட்டன.
 • 34 தீவுகளில் நீர் மற்றும் சுகாதார முன்முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளுதல், 4,000 வீட்டுத் தொகுதிகள் மற்றும் வீதிகள் மற்றும் மறுசீரமைப்புக்கான அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிக்கு இந்த ஒப்பந்தங்களானது முக்கிய ஊக்கியாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NIRF 2023 தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
 • 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவனங்கள் கட்டமைப்பின் (NIRF) தரவரிசையை மத்திய கல்வி அமைச்சகமானது ஜூன்5 அன்று  வெளியிட்டுள்ளது. 
 • இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மெட்ராஸ் ஒட்டுமொத்தப் பிரிவின் கீழ் சிறந்த கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம்(IISC) இரண்டாவது இடத்தையும், IIT டெல்லி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

அசாமில் 1450 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு திட்டங்களை மத்திய அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி தொடங்கி வைத்துள்ளார்.
 • அசாமின் டபோகா-பரகுவா இடையே 4-வழிப் பாதை, நாகோன் பைபாஸ் மற்றும் தெலியாகான்-ரங்காகரா இடையேயான 4-வழிப் பாதை, மங்கல்தாய் பைபாஸ் உட்பட 4 முக்கிய திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
 •  1450 கோடி மதிப்பிலான இந்த 4 திட்டங்களும் அசாமின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளைத் அசாம் மக்கள் மத்தியில் உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது
 • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜூன் 2023 தரவுகளின்படி, நேபாளம் நாடானது உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலகில் மிகவும் “மோசமாக மாசடைந்த நாடுகள்” பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
 • இந்த அறிவிக்கை தெற்காசியாவில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக “ஒரு கன மீட்டருக்கு 99.73 மைக்ரோ கிராம்” நுண்துகள்களை சுவாசிப்பதாக தெரிவித்துள்ளது. இது வழக்கமான அளவை விட “20 மடங்கு அதிகம்” என்பது குறிப்பிடத்தக்கதாக்கும்.

மாநில செய்திகள்

இந்தியாவின் “முதல் நிகர பூஜ்ஜிய கார்பன் கிராமமானது” பிவாண்டியில் உருவாக்க திட்டம்.
 • இந்தியாவின் “முதல் நிகர பூஜ்ஜிய கார்பன் கிராமமானது” மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி தாலுகாவில் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் கபில் பாட்டீல் அறிவித்துள்ளார். 
 • இதன் மூலம் 121 பழங்குடியின கிராமங்கள் இந்த திட்டத்தின் முன்மாதிரி கிராமங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பள்ளி கிராமமானது முதல் நிகர பூஜ்ஜிய கார்பன் பஞ்சாயத்தாக உருவெடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

ஃபிளாண்டர்ஸ் கோப்பை 2023 தடகள போட்டியில் இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களைப் வென்றுள்ளார்.
 • ஜூன் 2023ல் பெல்ஜியத்தில் உள்ள மெர்க்செமில் நடைபெற்ற “சர்வதேச ஆன்ட்வெர்ப் தடகள காலா” என உலகளவில் அனைவராலும் அறியப்படும் “ஃபிளாண்டர்ஸ் கோப்பை 2023” தடகளப் போட்டியில் ஆடவருக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டிகளில் தலா ஒரு தங்கப் பதக்கத்தை இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீரரான “அம்லன் போர்கோஹைன்” வென்றுள்ளார்.
 • போர்கோஹைன் 10.70 வினாடிகளில் எல்லையை கடந்து போட்டியின் அதிவேக வீரராக உருவெடுத்துள்ளார் மற்றும் இவர் 100 மீட்டர் தேசிய சாதனையை 10.25 வினாடிகளில் கடந்தும், 200 மீட்டரில் 20.96 வினாடிகளில் கடந்து ஹாஃப்மேன் 21.42 ஐ விட முன்னரே வெற்றி கோட்டினை கடந்து சாதனை படைத்துள்ளார்.

20 வயதுக்குட்பட்டோருக்கான(U-20) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள்.
 • ஜுன் 4,2023 அன்று தென் கொரியாவின் யெச்சியோனில் நடைப்பெற்ற  20 வயதுக்குட்பட்டோருக்கான “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்” இந்தியா இரண்டு தங்கம் உட்பட மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
 • ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் “பாரத்ப்ரீத் சிங்” மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் “ரெசோனா மல்லிக் ஹீனா” ஆகியோர் இந்த போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 17 நிமிடங்கள் 17.11 வினாடிகளில் கடந்து இந்தியாவின் மூன்றாவது பதக்கமான வெண்கலப் பதக்கத்தை “ஆன்டிமா பால்” வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 தாய்லாந்து ஓபனில் அஹ்ன் சே யங் தனது “4வது மகளிர் ஒற்றையர் சூப்பர் தொடர் பட்டத்தை” வென்றுள்ளார்.
 • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள  சிறந்த வீராங்கனையான தென் கொரியவை சேர்ந்த அன் சே யங், சீனாவின் ஹி பிங்ஜியாவோவை 21-10, 21-19 என்ற கணக்கில் தோற்கடித்து, இந்த ஆண்டு தொடருக்கான மகளிர் ஒற்றையர் சூப்பர் தொடர் பட்டத்தை வென்றுள்ளார். 
 • இது மகளிர் ஒற்றையர் சூப்பர் தொடரின் 4வது வெற்றி மற்றும்  தொடர்ச்சியாக ஏழாவது இறுதிப் போட்டி என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டுக்கான UWW தரவரிசை தொடர் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனையான “மனிஷா” தங்கம் வென்றுள்ளார்.
 • ஜூன் 3 ஆம் தேதி கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்த “2023 ஆம் ஆண்டுக்கான UWW தரவரிசை தொடர் போட்டியில்” இந்திய போட்டியாளர்கள் மூன்று பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தனர்.
 • ரீத்திகா தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் மற்றும் சரிதா மோர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அதே சமயத்தில் இந்தத் தொடரில் இந்தியாவின் எண்ணிக்கை 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட  4 பதக்கங்களுடன் போட்டி நிறைவு பெற்றது.
ISSF ஜூனியர் உலகக் கோப்பை 2023ல் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம்.
 • ஜெர்மனியின் சுஹ்ல் நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை இளையோருக்கான(Junior) 10 மீட்டர் காற்று அழுத்த கலப்பு அணிக்கான இறுதிப் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான “அபினவ் ஷா மற்றும் கௌதமி பானோட்” ஆகியோர் வென்று இந்தியாவிற்கான 2வது தங்கத்தை பெற்று தந்துள்ளனர்.
 • ஜூன்4,2023 அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  இந்திய அணியானது 17-7 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸ் நாட்டின் ஜோடியான “ஓசியன் முல்லர் மற்றும் ரொமைன் ஆஃப்ரேரை” வீழ்த்தியுள்ளது. இந்தியா தற்போது வரை இந்த ஆண்டுக்கான ISSF உலகக் கோப்பையில் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரங்கல் செய்திகள்

பத்மஸ்ரீ சுலோச்சனா லட்கர் உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார்.
 • 1960 மற்றும் 70களில் பாலிவுட்டின் பழம்பெரும் மற்றும் மதிப்பிற்குரிய தாயாக அங்கீகாரம் பெற்ற மராத்தி மற்றும் இந்தி திரைப்பட நடிகையான “சுலோச்சனா லட்கர்”, ஜூன்4 அன்று மும்பை மருத்துவமனையில் நீண்டகால நோயின் காரணமாக தனது 94வது வயதில் காலமானார்.
 • சுலோச்சனா அவர்கள் 1999 இல் பத்மஸ்ரீ விருதும், 2004 இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார். மகாராஷ்டிர அரசானது அவரின் திறமையை போற்றும் வகையில் மாநிலத்தின் உயரிய விருதான “மகாராஷ்டிர பூஷன் விருதை” வழங்கியுள்ளது.

முக்கிய தினம்

உலக சுற்றுச்சூழல் தினம் 2023

 • சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து கொள்ளவும், சுற்று சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமானது கொண்டாடப்படுகிறது
 • நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துவதற்காக மற்றும் அந்த முன்னெடுப்பை மேற்கொள்வதற்காக  இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘நெகிழி மாசுபாட்டை முறியடி’ (“Beat Plastic Pollution) என்பதாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!