சனிக்கிழமை காலை 9 மணிவரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – காவல்துறை உத்தரவு!

0
சனிக்கிழமை காலை 9 மணிவரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - காவல்துறை உத்தரவு!
சனிக்கிழமை காலை 9 மணிவரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - காவல்துறை உத்தரவு!
சனிக்கிழமை காலை 9 மணிவரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – காவல்துறை உத்தரவு!

கர்நாடகா மாநிலம் ஷிவமொகா மாவட்டத்தில் ஏற்பட்ட கொலை சம்பவத்தை அடுத்து விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 26ம் தேதி வரை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

கடந்த ஒரு சில வாரங்களாக கர்நாடகா மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு மோசமான சூழ்நிலைகள் காரணமாக ஒரே பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அதாவது இம்மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சனையை அடுத்து, ஷிவமொகா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு கொடூரமான கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் பஜ்ரங்தள செயற்பாட்டாளர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு முழு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை – உலக நாடுகள் அதிர்ச்சி!

அதன் படி, இந்த ஊரடங்குச் சட்டம் நாளை (பிப்.25) காலை 9 மணியுடன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் மாவட்டம் முழுவதும் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கடந்த பிப்.20ம் தேதி விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை சனிக்கிழமை காலை 9 மணி வரை தொடருவதாக துணை ஆணையர் செல்வமணி அறிவித்திருக்கிறார். இந்த ஊரடங்கு நேரங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்கும் அனைத்து ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள், வெற்றி அணிவகுப்புகள் மற்றும் பிற நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இப்போது ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!

மேலும் அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் பால், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை விற்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ஷிவமொகா கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்வதற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, பதற்றமான பகுதிகளில் காவல்துறை மற்றும் RAF பணியாளர்கள் நிறுத்தப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here