ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வந்தாலும், நோய் தடுப்பு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வந்ததையொட்டி பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பகல் நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவானது முற்றிலுமாக நீக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகமாகாத வகையில், இரவு நேர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மட்டும் மாநில அரசுகள் கடைபிடித்து வருகிறது.
Tokyo Olympics 2021 – இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!
அந்த வரிசையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையானது வீழ்ச்சியடைந்து வருகிறது. அதனால் பகல் நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்து.
TN Job “FB
Group” Join Now
அதாவது ஆந்திரா முழுவதுமாக கொரோனா நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, இவ்வகை ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 14 வரை நீடித்திருக்கும் என மாநில சுகாதாரம், மருத்துவம் மற்றும் குடும்ப நல முதன்மை செயலாளர் ஏ.கே. சிங்கால் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ள காலங்களில் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.