ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – வங்கதேச அரசு அறிவிப்பு!
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நேரத்தில் அண்டை நாடான வங்கதேசத்தில் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல மாநிலங்களில் மிக வேகமாக பரவத் தொடங்கியது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை எட்டியது. மேலும் தினசரி உயிரிழப்புகளும் 4 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தின. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 12க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நேரத்தில், அண்டை மாநிலமான வங்க தேசத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. 16 கோடி மக்கள் தொகை கொண்ட வங்க தேசத்தில் மே மாத மூன்றாம் வாரத்தில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தொற்று அளவு 689 ஆக இருந்தது, இது படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 11,525 ஆக அதிகரித்து உள்ளது.
TN Job “FB
Group” Join Now
கடந்த சில வாரங்களாக அந்த நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க டெல்டா வைரஸ் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 163 ஆக உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.