ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!

0
ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு அமல் - அரசின் அதிரடி உத்தரவு!
ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு அமல் - அரசின் அதிரடி உத்தரவு!
ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து உச்சம் தொட்ட கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் அமலில் உள்ள ஊரடங்குகளை தளர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது.

அதிரடி உத்தரவு:

சீனாவில் கடந்த 2 வருடங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று பரவல், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அதிகரித்தது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகம் இருந்த ஷாங்காய் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் ஆகிய நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

Exams Daily Mobile App Download

பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது தவிர சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக சென்று மாதிரிகளை சேகரித்து வந்தனர். உலக நாடுகள் அனைத்தும் தற்போது தான் மெல்ல, மெல்ல கொரோனாவில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிதாக பரவ தொடங்கியுள்ள வைரஸ் உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே சீன அரசு, ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த காலங்களில் இந்த திட்டம் பலன் அளித்தது, அந்த வகையில் சீனாவில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் ஷாங்காய் நகரில் உடனடியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கப்படாது, ஜூன் 1ம் தேதிக்கு மேல்தான் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Jio, Airtel & Vi நிறுவனங்களின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்த வாரம் சில கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது மற்றும் பொது போக்குவரத்து வார இறுதியில் ஓரளவு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நகரில் வேலை மற்றும் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு, சுத்தமான மற்றும் அழகான சூழலை உறுதி செய்வதற்காக, பெரும்பாலும் வெறிச்சோடிய தெருக்களில் தொழிலாளர்கள் பூக்களை நடும் படங்களை ஷாங்காய் சுஹுய் மாவட்ட அரசாங்கம் தனது சமூக ஊடக கணக்கில் வெளியிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here