தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

ஆந்திராவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவுநேர ஊரடங்கை தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா 2 ஆம் அலை காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது சில தளர்வுகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு அறிவித்து வருகிறது. இருப்பினும் தினசரி இரவு 10 முதல் அதிகாலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கை தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!

அதாவது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இன்னும் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருவதால், மற்ற 11 மாவட்டங்களுக்கும் சேர்த்து பொதுவான இரவு ஊரடங்கு உத்தரவு நேரங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அத்தியாவசிய கடைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வணிகத்திற்காக மட்டும் திறக்கப்படலாம். இதை தொடர்ந்து இரவு 10 மணி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்படும். இந்த தளர்வுகளை பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!