கடலூரில் பிப்ரவரி 7 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
கடலூரில் பிப்ரவரி 7 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
கடலூரில் பிப்ரவரி 7 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
கடலூரில் பிப்ரவரி 7 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழக வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தப்படுகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த முகாம் நடத்தப்பட உள்ளதாக கடலூா் கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி தெரிவித்துள்ளார்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த முகாம் நடத்தப்படுகிறது.

பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படும் NMMS தேர்வுகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

இந்த முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் 100க்கு மேற்பட்டவை கலந்து கொள்ள உள்ளன. 10000க்கு மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு முடித்தவர்களும், மேலும் கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிப்.13க்குள் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in விண்ணப்பிக்கலாம். இந்த முகாமிற்கு வருவோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புடன் முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

மேலும் முக்கிய குறிப்பாக இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெரும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விவரங்கள் அறிய 04142-290039 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கடலூா் கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here