தமிழகத்தில் மீண்டும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2022 – 10000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

0
தமிழகத்தில் மீண்டும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2022 - 10000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் மீண்டும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2022 - 10000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் மீண்டும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2022 – 10000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

வேலையில்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களின் கவலையை போக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு அமைந்துள்ளது. இதில் கடலூர் மாவட்டம் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை (30.07.2022) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் பற்றிய முழு விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரம்:

கடலூர் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில், வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களில் காலியாக உள்ள Machine Operator, Design Engineer போன்ற 10,0000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பள்ளி / பலகலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ITI, Diploma, Engineering, Nursing, MBA, Teaching, Management, Pharmacy, Arts & Science பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தேர்வு செய்யப்படும் நிறுவனம் மற்றும் பணியை பொறுத்து குறைந்தது ரூ.10,000/- மாத சம்பளமாக பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இம்முகாமில் கலந்து கொள்ளும் நபர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மற்றும் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முன்னராகவே பதிவு செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்ய கடைசி நாள் (26.07.2022) என்றும் முன்னதாகவே கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்த நபர்கள் நாளை (30.07.2022) நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here