CTET மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு – இன்று விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
CTET மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு - இன்று விண்ணப்ப பதிவு தொடக்கம்!
CTET மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு - இன்று விண்ணப்ப பதிவு தொடக்கம்!
CTET மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு – இன்று விண்ணப்ப பதிவு தொடக்கம்!

ஆசிரியர் தகுதி தேர்வானது 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி மாதத்திற்குள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகுதி தேர்வு:

அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க தனித்தனியே தேர்வுகளை நடத்தி வருகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் அரசு ஆசிரியர்களாக பணிபுரிய CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான தகுதி தேர்வானது 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி மாதத்திற்குள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TCS, Wipro, Infosys நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – ஆய்வு தகவல்!

தகுதி தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என CBSE கூறியுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தகுதி தேர்வானது டிசம்பர் 16ம் தேதி மற்றும் ஜனவரி 13ம் தேதிக்கு இடையே தொடங்கும் எனவும், இந்த தேர்வானது கணினி வழியில் 20 மொழிகளில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 19ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்துவதற்கு அக்டோபர் 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ஒரு தாள் எழுத விரும்பினால் ரூ.1000, இரண்டு தாளும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத விரும்பினால் ரூ.500, இரண்டு தாளும் எழுத விரும்பினால் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!