CTET 2022 தேர்வின் விண்ணப்ப திருத்தம் இன்று முதல் அனுமதி – முக்கிய விவரங்கள் இதோ!

0
CTET 2022 தேர்வின் விண்ணப்ப திருத்தம்
CTET 2022 தேர்வின் விண்ணப்ப திருத்தம்
CTET 2022 தேர்வின் விண்ணப்ப திருத்தம் இன்று முதல் அனுமதி – முக்கிய விவரங்கள் இதோ!

CTET தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது. தற்போது இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் திருத்தங்களை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

CTET தேர்வு:

மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த அக்டோபர் 31ம் தேதி அன்று வெளியிட்டது. அப்போது முதல், நவம்பர் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு கணினி அடிப்படையில் ஆன்லைன் தேர்வுகள் நடக்க உள்ளது. CTET தேர்வானது வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

NEET SS 2022 கலந்தாய்வின் முதல் சுற்று: Seat allotment நாளை தொடக்கம் – முடிவுகள் எப்போது?

Exams Daily Mobile App Download

CTET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை செய்து கொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல், டிசம்பர் 3ம் தேதி இரவு 11:59 மணி வரை விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் https://ctet.nic.in என்ற அதிகாரபூர்வ இணைப்பின் மூலம் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர், பிறந்த தேதி, பாலினம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு, தேர்வு செய்யப்பட்ட தாள் போன்ற விவரங்களில் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த வசதியை தேர்வர்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!