CSK vs MI அப்டேட்ஸ் – அதிக ரன்கள் & அதிக விக்கெட்டுகள்? இரு அணிகள் இதுவரை!

0
CSK vs MI அப்டேட்ஸ் - அதிக ரன்கள் & அதிக விக்கெட்டுகள் இரு அணிகள் இதுவரை!
CSK vs MI அப்டேட்ஸ் - அதிக ரன்கள் & அதிக விக்கெட்டுகள் இரு அணிகள் இதுவரை!

CSK vs MI அப்டேட்ஸ் – அதிக ரன்கள் & அதிக விக்கெட்டுகள்? இரு அணிகள் இதுவரை!

ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று (செப். 19) முதல் துவங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதவுள்ளன. இதுவரை இவ்விரு அணிகளின் நேருக்கு நேர் மோதல் மற்றும் அதில் அதிக ரன்கள & விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பற்றிய தகவல்களை காணலாம்.

IPL திருவிழா 2021:

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். கடந்த முறை கொரோனா தொற்றினால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டிகள் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கினாலும், தொற்றின் தாக்கத்தால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது.

IPL திருவிழா ஆரம்பம் – CSK vs MI : பழி தீர்க்குமா தோனியின் படை? நேருக்கு நேர் & உத்தேச 11 அணி!

மீண்டும் இப்போட்டிகள் இன்று (செப். 19) முதல் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்காது என்றே முதலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் களம் களைகட்டியுள்ளது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

இந்த இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. இரு அணியிலும் சரி சம பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் இருப்பதால் கட்டாயம் இவர்களின் மோதலில் அனல் பறக்கும். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளையும், அவற்றிற்கான சதவீதத்தையும் கொண்ட அணிகளின் பட்டியலில் இவ்விரு அணிகள் தான் முதல் இரு இடங்களில் உள்ளன. மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 3 முறையும் கோப்பை வென்றுள்ளது. அதிக முறை கோப்பையை கைப்பற்றியதும் இந்த இரு அணிகள் தான். எப்போது இவர்கள் களத்தில் இறங்கினாலும் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

IPL திருவிழா 2021: பேட்டிங், பௌலிங் இவர்கள் தான் இப்போ வரை டாப்! முழு அலசல்!!

நேருக்கு நேர் :

இது வரை சென்னை-மும்பை அணிகள் நேருக்கு நேர் 32 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 19 முறை மும்பை அணியும் 13 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனின் முதற் கட்ட ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிக ரன்கள் குவித்தவர்கள்:

இவ்விரு அணிகளும் இது வரை மோதிய போட்டிகளில் இரண்டு அணியை சேர்ந்த பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சென்னையின் ரெய்னா தான் முதலிடத்தில் உள்ளார். அதற்கான பட்டியலை கீழே காணலாம்.

  1. சுரேஷ் ரெய்னா (CSK) – 732 ரன்கள்
  2. ரோஹித் சர்மா (MI) – 693 ரன்கள்
  3. MS தோனி (CSK) – 643 ரன்கள்
  4. கீரான் பொல்லார்ட் (MI) – 607 ரன்கள்
  5. அம்பதி ராயுடு (CSK) – 582 ரன்கள்
அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

இந்த அணிகள் களம் கொண்ட போட்டிகளில் இதுவரை சென்னை அணியின் பிராவோ தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  1. டுவைன் பிராவோ (CSK) – 32 விக்கெட்டுகள்
  2. ரவீந்திர ஜடேஜா (CSK) – 18 விக்கெட்டுகள்
  3. கீரான் பொல்லார்ட் (MI) – 15 விக்கெட்டுகள்
  4. தீபக் சாஹர் (CSK) – 9 விக்கெட்டுகள்
  5. ஜஸ்பிரித் பும்ரா (MI) – 9 விக்கெட்டுகள்
உத்தேச வீரர்கள் விவரம்:
  • சென்னை அணி – ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (சி & விகே), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி, ஜே ஹேசில்வுட்
  • மும்பை அணி – ரோகித் சர்மா (சி), குயின்டன் டி காக் (டபிள்யூகே), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கியரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா & ட்ரெண்ட் போல்ட்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!