சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – DCக்கு எதிரான உத்தேச 11 அணி & போட்டி கணிப்பு!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - DCக்கு எதிரான உத்தேச 11 அணி & போட்டி கணிப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - DCக்கு எதிரான உத்தேச 11 அணி & போட்டி கணிப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – DCக்கு எதிரான உத்தேச 11 அணி & போட்டி கணிப்பு!

நாளை (மே 8) நடைபெற இருக்கும் ஐபிஎல் 2022ன் 55வது லீக் ஆட்டத்தில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளின் Dream11 கணிப்பு, பேண்டஸி டிப்ஸ், உத்தேச 11 அணி, மற்றும் போட்டி கணிப்பு உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

போட்டி கணிப்பு

இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது சீசனில் நாளை (மே 8) நடைபெற இருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை டெல்லி கேப்பிடல்ஸ் (DC) எதிர்கொள்கிறது. இப்போது முந்தைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அபார வெற்றியைப் பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் தனது வெற்றியை தொடர முயற்சி எடுக்கும். அதே நேரத்தில், MS தோனி தலைமையில் களமிறங்க இருக்கும் CSK அணி அதிர்ஷ்டத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துள்ளது. ஆனால் நடப்பு சாம்பியன்கள் இந்த சீசனில் ஒரு நிலைத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை!

அந்த வகையில் இதுவரை ஏழு ஆட்டங்களில் தோல்வியடைந்து பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து CSK அணி வெளியேற்றப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இப்போது மீதமுள்ள ஆட்டங்களில் நன்றாக விளையாடி மற்ற அணிகளின் தலைவிதியைக் கெடுக்கும் முயற்சியில் CSK ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை உறுதியாக பற்றிப்பிடிக்க DC போராடும். இதற்கிடையில் கடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.

Exams Daily Mobile App Download

இப்போது ரிஷப் பந்த் தலைமையிலான அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த வகையில், பிளேஆஃப் பந்தயத்தில் நீடிக்க மீதமுள்ள நான்கு போட்டிகளில் குறைந்தது மூன்றிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தத்தில் உள்ளது DC. இதற்கிடையில் நாளை நடக்க இருக்கும் ஆட்டத்திற்கான CSK Vs DCன் டிரீம்11 கணிப்பு, உத்தேச 11 அணி, பேண்டஸி டிப்ஸ், மற்றும் போட்டி கணிப்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

அணி வீரர்கள்:

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), அக்சர் படேல், பிருத்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், அபிஷேக் சர்மா, கமலேஷ் நாகர்கோடி, கே.எஸ். பாரத், அகமது, மன்தீப் சிங், சேத்தன் சகாரியா, லலித் யாதவ், ரிபால் படேல், யாஷ் துல், ரோவ்மேன் பவல், பிரவின் துபே, லுங்கி என்கிடி, விக்கி ஓஸ்ட்வால், சர்ஃபராஸ் கான்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன், wk), ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, மொயின் அலி, ஷிவம் துபே, டெவோன் கான்வே, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், நாராயண் ஜெகதீசன் , துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், கே.எம். ஆசிப், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், பகத் வர்மா, ஹரி நிஷாந்த், சுப்ரான்ஷு சேனாபதி.

உத்தேச XI அணிகள்:

CSK: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (C), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா

DC: டேவிட் வார்னர், மன்தீப் சிங், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (C), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரிபால் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது

ட்ரீம் 11 பேண்டஸி தேர்வுகள்:

அணி 1: டேவிட் வார்னர் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (Wk), ராபின் உத்தப்பா, மிட்செல் மார்ஷ், ரிபால் பட்டேல், லலித் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, சிமர்ஜீத் சிங்.

அணி 2: டெவோன் கான்வே (கேப்டன்), மொயின் அலி, அம்பதி ராயுடு, ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), எம்எஸ் தோனி (WK), குல்தீப் யாதவ், டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது.

கணிப்பு:

இவ்விரு அணிகளின் தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறும் என்று தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!