சென்னையில் CSK அணியின் வெற்றி விழா – முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்பு! ரசிகர்கள் குஷி!

0
சென்னையில் CSK அணியின் வெற்றி விழா - முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்பு! ரசிகர்கள் குஷி!
சென்னையில் CSK அணியின் வெற்றி விழா - முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்பு! ரசிகர்கள் குஷி!
சென்னையில் CSK அணியின் வெற்றி விழா – முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்பு! ரசிகர்கள் குஷி!

சென்னையில் வரும் 20ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி விழா:

இந்திய இளைஞர்களின் மத்தியில் கிரிக்கெட் மோகம் என்றும் குறையாத ஒன்றாக இருந்து வருகிறது. IPL நடைபெறும் நாட்களில் இளைஞர்களின் முழுக்கவனமும் IPL போட்டிகளில் இருக்கும். 2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடியதால் காரணமாக கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மலைப்பாதை மூடல்!

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியதாவது, உலக கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார் என்றும் அந்த விழாவானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் கூறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சபரிமலை தரிசனம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? கூடுதல் பக்தர்கள் அனுமதி!

தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்தியா திரும்பியுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா வரும் 20ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!