‘CSK அணியின் கேப்டன் ஜடேஜா தான் ஆனால் பொறுப்பு தோனி உடையது’ – ரசிகர்கள் விமர்சனம்!

0
'CSK அணியின் கேப்டன் ஜடேஜா தான் ஆனால் பொறுப்பு தோனி உடையது' - ரசிகர்கள் விமர்சனம்!
'CSK அணியின் கேப்டன் ஜடேஜா தான் ஆனால் பொறுப்பு தோனி உடையது' - ரசிகர்கள் விமர்சனம்!
‘CSK அணியின் கேப்டன் ஜடேஜா தான் ஆனால் பொறுப்பு தோனி உடையது’ – ரசிகர்கள் விமர்சனம்!

ஐபிஎல் 2022 லீக்கின் கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டாலும் தோனி தான் வழக்கம் போல ஆட்டத்தை கட்டுப்படுத்துகிறார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2022 சீசனுக்கு முன்பாக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திரம் MS தோனி, தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். அந்த வகையில் இந்த சீசனுக்கான முதல் ஆட்டத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜாவின் தலைமையின் கீழ் MS தோனி ஒரு வீரராக மட்டுமே பங்காற்றி வருகிறார். என்னதான் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்கள் இன்னும் அவரை ஒரு கேப்டனாக தான் பார்த்து வருகின்றனர். குறிப்பாக அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் தான் அடுத்தடுத்த ஆட்டங்களில் அரை சதத்தை விளாசி இருந்தார்.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7,000+ ரன்களை கடந்து ‘தல’ தோனி புதிய சாதனை!

அந்த வகையில் தோனி தனது பழைய ஃபார்மில் அதிரடியாக விளையாடியது ரசிகர்களின் கண்களுக்கு திரை விருந்து படைத்திருந்தது. இதற்கிடையில் CSK அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜடேஜாவும், தோனியை முன்னிறுத்தி தான் தனது கேப்டன்சி இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி இருக்க CSK அணி இதுவரை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு ஆட்டங்களில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆட்டங்களிலும் CSK அணியின் ஸ்கோர் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது.

இப்போது CSK அணியின் இரண்டாவது தோல்விக்கு பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஜய் ஜடேஜா மற்றும் பார்த்தீவ் படேல் இருவரும் அணி உரிமையாளரின் தற்போதைய தலைமைத்துவ நிலையை விமர்சித்துள்ளனர். அதாவது, ‘ரவீந்திர ஜடேஜாவை பற்றி பெருமையாகக் கூற நான் இதை சொல்லவில்லை. கிரிக்கெட் ஆர்வலராக இருந்தபோதும் இது விசித்திரமாக இருந்தது. ஜடேஜா அங்கேயே இருந்தார். தோனி தான் முழு ஆட்டத்தையும் ஓட்டிக்கொண்டே இருந்தார். அவர் ஒரு பெரிய வீரர். ஆனால் இன்று நான் பார்த்தது எனக்குப் பிடிக்கவில்லை.

IPL 2022: ‘தல’ தோனியை கேப்டனாக மிஸ் செய்யும் டெவோன் கான்வே – உரையாடலில் தகவல்!

நான் தேர்வுகளை விமர்சிக்கவில்லை. தோனி எப்படி கட்டுப்பாட்டை எடுத்தார் என்பதை நான் விமர்சிக்கிறேன். அணி சந்திப்பின் போது, தோனி பேசுவதை நாங்கள் கவனித்தோம். தோனிக்கு ஆட்டம் நன்றாகத் தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிஎஸ்கே ஆதரவாளர்கள் கூட தோனி கேப்டன் பதவியை திரும்பப் பெற விரும்புவார்கள். ஆனால் இந்த ஆட்டத்தில் பொறுப்பேற்றதில் அவர் எடுத்த முடிவு தவறானது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஜடேஜா தனது தலைமையை பற்றி பாதுகாப்பாக உணர்ந்தால், இப்போது அவர் அவ்வாறு செய்ய மாட்டார்’ என்று அஜய் ஜடேஜா கூறி இருக்கிறார்.

இப்போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டால், அவர் தவறு செய்தாலும் அவருக்கு தான் முழு கட்டுப்பாட்டை வழங்க வேண்டும் என்று பார்த்திவ் படேல் நம்புகிறார். இதற்கிடையில், ரவீந்திர ஜடேஜா தான் கேப்டன். ஆனால் இரண்டாவது போட்டியில் எம்எஸ் தோனிதான் முடிவுகளை எடுத்தார் என்று ‘படையப்பா’ திரைப்படத்தில் வரும் ரஜினி – செந்தில் பாணியில் கிரிக்கெட் ரசிகர்கள் எம்எஸ் தோனியை ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது, போட்டியின் போது தோனி தான் உண்மையில் கேப்டனாக இருந்தார். அவர் முடிவுகளை எடுத்தார். ஜடேஜா வெறும் பெயருக்காக தான் என்றும் போட்டியில் தோல்விக்கான பொறுப்புகளை மட்டும் கொண்டிருப்பார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!