சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – T20 கேப்டனாக ‘தல’ தோனி நிகழ்த்த இருக்கும் சாதனை!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - T20 கேப்டனாக 'தல' தோனி நிகழ்த்த இருக்கும் சாதனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - T20 கேப்டனாக 'தல' தோனி நிகழ்த்த இருக்கும் சாதனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – T20 கேப்டனாக ‘தல’ தோனி நிகழ்த்த இருக்கும் சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் MS தோனி, டி20 போட்டிகளில் இன்னும் ஒரு சில ரன்கள் எடுத்தால் ஒரு கேப்டனாக 6000 ரன்களை கடந்த 2வது வீரராக இருப்பார். இப்போது இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.

கேப்டன் தோனி

பல லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘கூல்’ கேப்டன் MS தோனி டி20 வடிவத்தில் ஒரு அரிய சாதனை படைக்க இன்னும் ஒரு சில ரன்கள் மட்டும் அவசியமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்குப் பிறகு 6000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் கடந்த இரண்டாவது கேப்டனாக ஆவதற்கு எம்எஸ் தோனிக்கு இன்னும் 6 ரன்கள் தேவை. கடந்த ஆண்டில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த தோனி இப்போது உள்நாட்டு விளையாட்டு போட்டியான IPLல் விளையாடி வருகிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு – 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்!

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான IPL சீஸன் துவங்குவதற்கு முன்பாக, தனது 14 ஆண்டு கால கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார் தோனி. தொடர்ந்து ஜடேஜாவின் தலைமையில் முதல் சில ஆட்டங்களில் தோல்வியை தழுவிய CSK அணி 2 வெற்றிகளுடன் சரிவில் இருந்து மெல்ல மீண்டு வந்தது. இதற்கிடையில், SRH அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது CSK அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா. இப்போது டி20 போட்டிகளில் ஒரு கேப்டனாக மகத்தான சாதனை செய்யும் விளிம்பில் இருக்கிறார் எம்எஸ் தோனி.

Exams Daily Mobile App Download

அதாவது, டி20 போட்டிகளில் இன்னும் 6 ரன்கள் எடுத்தால் எம்எஸ் தோனி ஒரு கேப்டனாக 6000 ரன்களை கடந்த பட்டியலில் இணைவார். இந்த பட்டியலில் தற்போது விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இப்போது தோனி கேப்டனாக திரும்பியதன் மூலம், இந்த சாதனையை நிகழ்த்த இருக்கிறார். அந்த வகையில் தோனி தற்போது வரை 301 போட்டிகளில் (185 இன்னிங்ஸ்) விளையாடி 38.67 சராசரியுடன் 23 அரைசதங்கள் உட்பட 5994 ரன்கள் எடுத்துள்ளார். மறுபக்கத்தில் கோஹ்லி 190 போட்டிகளில் (185 இன்னிங்ஸ்) விளையாடி 5 சதங்கள் மற்றும் 48 அரைசதங்களுடன் 43.29 சராசரியுடன் 6451 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இந்த பட்டியலில் டீம் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். ரோஹித் இதுவரை 31.05 சராசரியில் 4721 ரன்கள் எடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here