IPL 2022: CSK அணிக்கு விளையாட விரும்பும் RCB வீரர் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IPL 2022: CSK அணிக்கு விளையாட விரும்பும் RCB வீரர் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: CSK அணிக்கு விளையாட விரும்பும் RCB வீரர் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: CSK அணிக்கு விளையாட விரும்பும் RCB வீரர் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்த ஆண்டு IPL தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் BCCI அறிவிப்பின்படி தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் RCB அணியில் கடந்த ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தக்கவைக்க படவில்லை. தற்போது இது குறித்து ஹர்ஷல் பட்டேல் பேட்டியளித்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் கடந்த ஆண்டு துபாயில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக விளையாடினார். இத்தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் 2009 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடர் விக்கெட் மழை பொழிந்து ‘விக்கெட் டேக்கிங் மிஷன்’ என்ற பட்டத்தைப் பெற்றார். கடந்த ஆண்டு மட்டும் ஹர்ஷல் பட்டேல் RCB அணிக்காக 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஞாயிறு கடைகள் உண்டு!

இவர் விக்கெட் வீழ்த்தாத போட்டியே இல்லை. இதனால் இதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட ஹர்ஷலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் 15 வது IPL செஷனில் ஹர்ஷல் பட்டேல் தக்கவைக்கப்படாதது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. BCCI அறிவிப்பின்படி பெங்களூரு அணி விராட் கோலி, முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை தக்கவைத்து ஹர்ஷல் பட்டேலை விடுவித்தது. தற்போது இது குறித்து பேட்டியளித்த ஹர்ஷல் பட்டேல் 2022 ஆம் ஆண்டு IPL தொடரில் தனக்கு CSK அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை – ரேஷன் கடை பணியாளர்கள் அதிர்ச்சி!

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ். அவர்கள் சிறந்த அணி என்றும், முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் கீழ் விளையாட விரும்புவதாகவும் ஹர்ஷல் கூறினார். இதனை தொடர்ந்து ஹர்ஷல் RCB தன்னை விடுவிப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார். நான் தக்கவைக்கப்பட்ட போது, மைக் ஹெசன் என்னை அழைத்து, அது முக்கியமாக பர்ஸ் மேனேஜ்மென்ட் என்று கூறினார். அவர்கள் என்னை மீண்டும் அணியில் சேர்ப்பதை வெளிப்படையாக விரும்புவார்கள், நானும் வெளிப்படையாக திரும்பிச் சென்று அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!