மத்திய அரசின் CSIR நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
CSIR என்னும் Centre for Railway Information System நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Assistant Software Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 21.11.2023 அன்று முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Centre for Railway Information System (CSIR) |
பணியின் பெயர் | Assistant Software Engineer |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CSIR காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, CSIR நிறுவனத்தில் Assistant Software Engineer பணிக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Assistant Software Engineer கல்வி தகுதி:
- Assistant Software Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, ME, M.Tech, MCA பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் GATE தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
CSIR வயது வரம்பு:
20.12.2023 அன்றைய தேதியின் படி, 22 வயது முதல் 27 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
Assistant Software Engineer ஊதியம்:
இந்த CSIR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.63,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
CSIR தேர்வு முறை:
Assistant Software Engineer பணிக்கு தகுதியான நபர்கள் GATE தகுதி தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Assistant Software Engineer விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 21.11.2023 அன்று முதல் 20.12.2023 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.