CRPF தலைமை காவலர் பணி தேர்வு என்ன ஆனது?

0
CRPF தலைமை காவலர் பணி தேர்வு என்ன ஆனது?
CRPF தலைமை காவலர் பணி தேர்வு என்ன ஆனது?

CRPF தலைமை காவலர் பணி தேர்வு என்ன ஆனது?

Central Reserve Police Force (CRPF) எனப்படும் மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான துறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 1412 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் மொத்தம் 1331 காலியிடங்கள் உள்ளது. அவை, பொது – 1031, SC – 200, ST – 100 ஆகும். இதே போன்று பெண்கள் பிரிவுக்கு 81 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை, பொது-63, SC – 12, ST – 6.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்பு படையில் பணிபுரிந்திருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக எல்லா தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சி.ஆர்.பி.எப் தேர்வு குறித்து எந்த தகவல்களும் வரவில்லை. இதனால் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!