CRPF Head Constable & ASI 1458 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!!

0
CRPF Head Constable & ASI 1458 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!!
CRPF Head Constable & ASI 1458 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!!
CRPF Head Constable & ASI 1458 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆனது உதவி துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் எனப்படும் Assistant Sub Inspector / Head Constable (Ministerial) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டிசம்பர் 27, 2022 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. ஆன்லைனில் விண்ணப்பிக்காத அனைத்து விண்ணப்பதாரர்களுக்காகவும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Sub Inspector / Head Constable (Ministerial) பணிகளுக்கு என 1458 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 25.01.2023 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர் 26.01.1998க்கு முன் அல்லது 25.01.2005க்கு பிறகு பிறந்திருக்க கூடாது.மேலும் SC/ST/ OBC, Ex Servicemen பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Sub Inspector பணிக்கு pay level 05 ஊதிய அளவின் படி மாதம் ரூ .29200/- முதல் ரூ .92300/- ஊதியமும், Head Constable (Ministerial) பணிக்கு pay level 04 ஊதிய அளவின் படி மாதம் ரூ.25500/- முதல் ரூ .81100/- ஊதியமும் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், 31 ஜனவரி 2023 வரை கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!