மத்திய அரசில் 100+காலிப்பணியிடங்கள் – ரூ.56,100/- மாத ஊதியம்..!  

0

மத்திய அரசில் 100+காலிப்பணியிடங்கள் – ரூ.56,100/- மாத ஊதியம்..!  

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 22.04.2022 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Commandant (GD) பணிக்கு என மொத்தமாக 176 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் 30.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Reserve Police Force (CRPF)
பணியின் பெயர் Assistant Commandant (GD)
பணியிடங்கள் 176
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய ரிசர்வ் போலீஸ் படை காலிப்பணியிடங்கள்:
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள Assistant Commandant (GD) பணிக்கு என மொத்தமாக 176 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Commandant (GD) கல்வி விவரம்:

Assistant Commandant (GD) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என CRPF ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Assistant Commandant (GD) ஊதிய விவரம்:

Assistant Commandant (GD) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு 7th CPC Pay Matrix Level 10 ஊதிய அளவின் படி ரூ.56,100/- மாத ஊதியமாக தரப்படும்.

HRA, DA, CCA போன்ற இதர ஊதியங்களும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.

CRPF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Written Examination
Physical Standard Test (PST) & Physical Efficiency Test (PET)
Interview & Personality Test.
Physical Examination
Merit List

CRPF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 30.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CRPF Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!