திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம் – தேவஸ்தானம் எடுத்த அதிரடி மாற்றம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. அதனால் தரிசனம் செய்ய தேவஸ்தானம் சில மாற்றங்களை செய்துள்ளது.
திருப்பதி தரிசனம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழக்கமாக தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 30 முதல் 40 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சாமியை வழிபடுகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 80000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்
டெலிகிராம், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கை – பண மோசடி அதிகரிப்பு!
இந்நிலையில் பக்தர்களுக்காக புதிய வசதியை தேவஸ்தனம் செய்துள்ளது. அதன் படி இன்று முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் ஜூன் 30 ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசன அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் மூலமாக அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரம் கூடுதலாக பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு மூலமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 22 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனவும் வியாழக் கிழமைகளில் திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ள ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வியாழன் கிழமையும் கூடுதலாக இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Join Our WhatsApp
Group” for Latest Updates