IPL சூதாட்டம் – ரூ.100 கோடி கோரிய கேப்டன் தோனியின் மானநஷ்ட வழக்கு தள்ளிவைப்பு!

0
IPL சூதாட்டம் - ரூ.100 கோடி கோரிய கேப்டன் தோனியின் மானநஷ்ட வழக்கு தள்ளிவைப்பு!
IPL சூதாட்டம் - ரூ.100 கோடி கோரிய கேப்டன் தோனியின் மானநஷ்ட வழக்கு தள்ளிவைப்பு!
IPL சூதாட்டம் – ரூ.100 கோடி கோரிய கேப்டன் தோனியின் மானநஷ்ட வழக்கு தள்ளிவைப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான டோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாக நடைபெற்ற IPL போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் நஷ்ட ஈடு கேட்டு டோனி தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகளில் முக்கிய அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாக சூதாட்ட விவகாரத்தில் சிக்கியது. அதாவது IPL போட்டியின் மற்றொரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பான புகார்கள் அடுக்கப்பட்டது. இதனால் CSK அணி IPL போட்டிகளில் 2 ஆண்டுகள் வரை கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் CSK அணியின் கேப்டன் டோனி சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

Realme GT 5G ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடக்கம் – சிறப்பம்சங்கள், தள்ளுபடி!

இதை தொடர்ந்து டோனி, தனது பெயரை களங்கப்படுத்தியது தொடர்பாக ரூ.100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த IPS அதிகாரி சம்பத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாக நடைபெற்ற IPL போட்டிகளில் CSK அணியின் கேப்டன் டோனி மீது சூதாட்ட புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தை பிரபல தனியார் செய்தி நிறுவனமான ஜீ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியாக நடத்தியது. இந்த நிகழ்வின் மூலம் தனது பெயரை களங்கப்படுத்தியதாக கூறி டோனி ரூ.100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக ஜீ தொலைக்காட்சி அளித்த பதில் மனுவில், IPL போட்டிகளில் CSK அணி RR அணியுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இடைத்தரகர்கள் சாட்சி அளித்தனர். ஆனால் டோனியை காப்பாற்றுவதற்காக அந்த வாக்கு மூலத்தை CBCID மறைத்ததாக முத்கல் கமிட்டி கண்டித்தது. மேலும் கிரிக்கெட் விளையாட்டில் தற்போது சூதாட்டம் பெருகி வருகிறது. டோனி கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

டோனி மீது எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. சூதாட்டத்தை வெளிக்கொண்டு வருவதற்காகவே அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் டோனியின் ரூ.100 கோடி அபராதம் என்பது ஊடகத்தின் குரலை நெறிப்பது போன்று உள்ளது. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, தனி மனித உரிமை பாதிக்காமல் கருத்து சுதந்திரத்துக்கு உரிமை உள்ளது என கூறி இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!