உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு – BCCI அறிவிப்பு!

0
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு - BCCI அறிவிப்பு!
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு - BCCI அறிவிப்பு!
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு – BCCI அறிவிப்பு!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிக் கட்டணத்தை உயர்த்துவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI), அறிவித்துள்ளது.

கட்டணம் உயர்வு

இந்தியாவில் நடத்தப்பட இருக்கும் உள்நாட்டு விளையாட்டு போட்டிகளுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 20) நடைபெற்ற அப்பெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக BCCI செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதாவது கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு பருவ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள், கொரோனா பரவல் சூழ்நிலையால் இழந்த போட்டி கட்டணத்தில் சுமார் 50 சதவிகிதம் கூடுதலாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

குறிப்பாக இந்த தொகை 2020-21 ஆம் பருவத்திற்கான இழப்பீடாக கருதப்படும் என்பது கூடுதல் தகவல். அந்த வகையில் BCCI போட்டிகளில், சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய உள்நாட்டு வீரர்கள் இப்போது 60,000 ரூபாயும், 23 வயதிற்குட்பட்ட வீரர்கள் 25,000 ரூபாயும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் 20,000 ரூபாயும் பெற இருப்பதாக ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உள்நாட்டு ஆண்கள் கிரிக்கெட்டில் விளையாடும் மூத்த வீரர்கள் ரஞ்சி டிராபி அல்லது விஜய் ஹசாரே டிராபிக்கு ஒரு போட்டியின் மூலம் ரூ.35,000 சம்பாதிக்கிறார்கள்.

இது தவிர BCCI சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும், வீரர்களுக்கு ரூ.17,500 கொடுக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக BCCI தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த முறையை கொண்டு வரும் யோசனையை முன்வைத்திருந்தார். ஆனால் தற்போதுள்ள நடைமுறையின் படி, ரஞ்சி கோப்பையில் மட்டுமே பங்கேற்கும் வீரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஊதியம் இல்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதற்கிடையில் இந்தியாவில் உள்நாட்டுப் பருவ போட்டிகள், செப்டம்பர் 21 முதல் துவங்குகிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் – முழு விபரங்கள் இதோ!

முதலில் துவங்கும் சீனியர் மகளிர் ஒருநாள் லீக் போட்டிகளை தொடர்ந்து, சீனியர் மகளிர் ஒரு நாள் சேலஞ்சர் டிராபி அக்டோபர் 27 முதல் நடைபெறும். மேலும் சையது முஷ்டாக் அலி டிராபி போட்டிகள் அக்டோபர் 20 ல் துவங்கி, நவம்பர் 12 வரை நடைபெறுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த சீசனில் ரத்து செய்யப்பட்ட ரஞ்சி கோப்பை நவம்பர் 16 முதல் பிப்ரவரி 19 வரை நடைபெற இருக்கிறது. விஜய் ஹசாரே கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் மார்ச் 26 வரை நடைபெற இருக்கிறது. இந்த பருவ போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் 2127 போட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!