ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை SWAB Test – ஆட்சியர் உத்தரவு!
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Covid – 19 SWAB TEST கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கொரோனா பரிசோதனை:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்றது. இதனால் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, அனைத்து வகைப் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக பள்ளிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – கொரோனா தொற்று எதிரொலி!
அதன் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் அனைவரும் 15 தினங்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் Covid – 19 SWAB TEST மேற்கொள்வதை முறையாக உரிய நடவடிக்கை மூலம் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.