தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்.28ம் தேதி முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு - பிப்.28ம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு - பிப்.28ம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்.28ம் தேதி முதல் தொடக்கம்!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படிப்புக்கான கலந்தாய்வு பிப்ரவரி 28ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சித்த மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள படிப்பு இடங்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. இதில் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரியும், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரியும், நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது.

வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி – அரசிற்கு கோரிக்கை!

இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 28ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 3,721 பேர் உள்ளனர். இதில் நீட் தேர்வில் சி.சக்தீஸ்வரன் என்பவர் 720-க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். இதையடுத்து வி.ஸ்ருதி என்பவர் 607 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளார். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் 378 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 989 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு!

இந்த நிலையில் இளங்கலை சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 28ம் தேதி முதல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் நடைபெற உள்ளது. அத்துடன் இந்த கலந்தாய்வு மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு தொடங்கப்படும் முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.tnhealth.tn.gov.in/ என்றஇணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!