MBA படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு – நவ.8ம் தேதி கவுன்சிலிங்!

0
MBA படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு - நவ.8ம் தேதி கவுன்சிலிங்!
MBA படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு - நவ.8ம் தேதி கவுன்சிலிங்!
MBA படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு – நவ.8ம் தேதி கவுன்சிலிங்!

தமிழகத்தில் கோவை பாரதியார் பல்கலை மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் எம்.பி.ஏ பிரிவில் காலி இடங்களுக்கான கலந்தாய்வு 8ம் தேதி நடைபெறவுள்ளது.

கலந்தாய்வு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் எம்.பி.ஏ., காலியிடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.

இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் வாபஸ் – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது இளைஞர்கள் அரசுப்பணி பெறும் நோக்கில் தங்களது கல்வித்தகுதியை அதிகப்படுத்தி வருகின்றனர். அதற்காக எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது குறித்து பெரும் குழப்பத்தில் உள்ளனர். கோவை பாரதியார் பல்கலை மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் எம்.பி.ஏ., பிரிவில் காலி இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வானது 2021 டான்செட் மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்படும். இது நவம்பர் 8ம் தேதி காலை, 10.30 மணிக்கு தொடங்கி 12:00 மணி வரை நடைபெறுகிறது.

தமிழக வனத்துறையில் 42 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!

12 மணிக்கு மேல் வருபவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. மேலும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், டி.சி., பட்டச்சான்றிதழ், டான்செட் ஹால் டிக்கெட், மதிப்பெண் சான்றிதழ், இரண்டு புகைப்படம் ஆகிய அனைத்து சான்றிதழ்களின் இரண்டு நகல் மற்றும் அசல் சான்றிதழ்களை கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு 0422-2428275 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!